BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டாரை இயக்குவது என் கனவு! – கேவி ஆனந்த்

சூப்பர் ஸ்டாரை இயக்குவது என் கனவு! – கேவி ஆனந்த்


மாற்றான் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா. இயக்குநர் கேவி ஆனந்த், படத்தின் நாயகன் சூர்யா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து படம் குறித்து நிறையவே பேசினர்.

சந்திப்பு முடிந்த பிறகு, இணையதளங்களுக்கு தனித்தனியாக பேட்டிகள் கொடுத்தனர் இருவருமே.

நாம் கேவி ஆனந்தைச் சந்தித்தோம். என்வழிக்காக அவரிடம் சில கேள்விகள் – ஆனால் மாற்றான் தொடர்பாக அல்ல!

சூப்பர் ஸ்டார் ரஜினியை நீங்கள் இயக்குவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் மறுத்தீர்கள். இப்போது மீண்டும் அதுகுறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன..  

ரஜினி சார் மிக  எளிமையான, அருமையான மனிதர். அவரைப் போல ஒருவரை சினிமாவில் மட்டுமல்ல, உலகிலேயே பார்க்க முடியாது. ஒரு சாதாரண பத்திரிகை போட்டோகிராபராக அவரைச் சந்தித்தேன். அன்று முதல் அவருடன் நட்பு தொடர்கிறது. அவருடன் பணியாற்றுவது குறித்து இப்போது எதுவும் சொல்வதற்கில்லை…

உங்கள் காம்பினேஷனில் படம் செய்வது குறித்து உங்களிடம் ரஜினி சார் பேசினாரா…  அவருக்கு நீங்கள் கதை சொன்னதாகக் கூறப்படுவது உண்மையா?

அது… ரொம்ப நாள் முன்னாடி ரஜினி சார் என்னிடம் பேசினார். ஆனால் அதுபற்றி இப்போது எதுவும் சொல்லும் நிலையில் இல்லை.

சிங்கத்திடம் விளையாடும் தைரியம் சுண்டெலிக்கு இல்லை என்று முன்பு கூறியிருந்தீர்கள்… இப்போது தைரியம் வந்திருக்கிறதா?

தைரியம் என்பதல்ல.. மனதளவில் நான் அவருக்காக முதலில் தயாராக வேண்டும். அதற்கேற்ற கதை வேண்டும். அந்தக் கதை சாருடைய ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி இருக்க வேண்டும். அவர்களைத் திருப்தி செய்வது அத்தனை சுலபமில்லை. இது ரஜினி சாரே அடிக்கடி சொல்வது.

சூப்பர் ஸ்டாரை நீங்கள் இயக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

அதாவது… ரஜினி சாரை இயக்குவது என் கனவு. ரொம்ப நாள் கனவு. ஆனால் அதற்கான சரியான சூழல் வரவேண்டும். வேறு எதுவும் இப்போது சொல்ல முடியாது.

ஆக தலைவருடன் ஒரு அசத்தல் அதிரடிக்கு ரொம்ப பலமாகத் தயாராகிறார் கேவி ஆனந்த்?!

-என்வழி ஸ்பெஷல்
9 thoughts on “சூப்பர் ஸ்டாரை இயக்குவது என் கனவு! – கேவி ஆனந்த்

 1. anbudan ravi

  பிடி குடுத்து பேச மாட்டேங்கறாரே மனுஷன்…..இவர் தயங்கி தயங்கி சொல்வதை பார்த்தால் இவர் தலைவரை இயக்கப்போவது ஒருவேளை உண்மையாக இருக்குமோ? நடந்தால் அது மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

  அன்புடன் ரவி.

 2. S.ALAVUDEEN

  என்னை பொறுத்த வரை கே.வீ.ஆனந்தை விட ஏ.ஆர்.முருகதாஸ்……தலைவரை மிகவும் நன்றாக கை ஆல்வார் …என்று நினைக்கிறேன்….

 3. endhiraa

  To QAD >>

  என் வழி அது மாதிரி நியூஸ் போடறதில்லை தம்பி …இத பாத்துட்டு இதே நியூஸ் இனிமே வேற தளங்களில் வரும் பாருங்க அப்போ தெரியும் என் வழி பத்தி ! தெரியாம எதுவும் கமெண்ட் குடுக்க வேணாம் ! (வினோ ஜி , இதெல்லாம் போய் எதுக்கு publish பண்றீங்க ??)
  ______

  இந்த மாதிரி ஒரு பதில் இவர்களுக்கு கிடைக்கனும்ல! 🙂

  -வினோ

 4. kabilan

  இதுக்காகத்தான் ஆனந்த விகடன் நியூஸ் போடலைய அண்ணா.கலகிடிங்க.அது ஒன்னும் இல்ல தலைவர் ஒரு படம் நடிக்கும் பாத்து அடுத்த செய்ய போகும் படத்தை பற்றி வெளியில் தெரிய கூடாது என்று நினைகிறார்கள் அது தன காரணம் .இருவரும் இணைந்தால் மிக அருமையாக இருக்கும்

 5. kumaran

  எந்திரன் மாதிரி கூட வேண்டாம் சிவாஜி மாதிரி கே வி ஆனந்த் direction பண்ணனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *