BREAKING NEWS
Search

லிங்கா ஷூட்டிங்கில் ரஜினியைக் காப்பாற்றிய கேமரா ஆபரேட்டர்… கண்கலங்கிய கேஎஸ் ரவிக்குமார், சூப்பர் ஸ்டார்

 

லிங்கா ஷூட்டிங்கில் ரஜினியைக் காப்பாற்றிய கேமரா ஆபரேட்டர்… கண்கலங்கிய கேஎஸ் ரவிக்குமார், சூப்பர் ஸ்டார்

IMG_9276_2207149f

குறிப்பு: நண்பர்களே, லிங்கா இசை வெளியீட்டு விழாவில் நடந்த அனைத்தையும் முழுவதுமாகத் தருகிறோம். ஆனால் விரிவாகத் தரவேண்டியிருப்பதால், கொஞ்சம் தாமதமானாலும் பொறுத்திருந்து படித்து மகிழுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

‘லிங்கா’ படப்பிடிப்பின்போது தனக்கு ஷாக் அடித்தாலும் பரவாயில்லை என்று சூப்பர் ஸ்டார் ரஜினியைக் காப்பாற்றுவதற்காக துணிச்சலுடன் செயல்பட்ட ஜவஹர் என்ற கேமரா ஆபரேட்டரைப் பற்றிக் குறிப்பிட்டு கண் கலங்கினார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.

இதைக் கேட்டு தலைவர் ரஜினியும் கண்கலங்கினார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலைவர் ரஜினி பேசும் முன் நன்றி கூறிப் பேச வந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

லிங்கா படப்பிடிப்பில் உழைத்த ஒவ்வொருவரின் பெயரையும், அவர்கள் பார்த்த வேலையையும் குறிப்பிட்டு நன்றி கூறினார் ரவிக்குமார்.

தனது முதல் நன்றியை ரஜினிக்கு சமர்ப்பித்தார் ரவிக்குமார். “ஆறே மாதங்களில் நான் மீண்டும் இந்த மேடையில் நிற்கக் காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி சார்தான். அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அவருக்கு எந்தக் கஷ்டமும் கொடுக்கக்கூடாது, சரியான நேரத்தில் முடித்துவிட வேண்டும் என்று எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை. அவரை கஷ்டப்படுத்திவிட்டேன். காட்சிகள் அப்படி. அவரும் ‘பரவால்ல.. இது நம்ம வேலைதானே.. இதுக்காகத்தானே வந்திருக்கோம்,’ என்று கூறியபடி நடித்துக் கொடுத்தார்,” என்றார்.

IMG_9338

பின்னர் வரிசையாக ஒவ்வொருவருக்கும் நன்றி கூறியபடி வந்தவர், ஜிம்மி ஜிப் கேமராவை இயக்கிய ஜவஹரின் செய்த பிரமிப்பூட்டும் ஒரு செயலைக் குறிப்பிட்ட போது கண் கலங்கினார்.

அந்த சம்பவத்தை இப்படி நினைவு கூர்ந்தார்..

“ஒருநாள் மழையில் சூப்பர் ஸ்டார் ரஜினி வந்து ரயில் பக்கத்தில் நடந்து வருவது போல ஒரு காட்சியை படமாக்கினேன். அந்த மழைக் காட்சியை ஜிம்மி ஜிப் கேமரா வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக செயற்கை மழையை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் கூறிய நேரத்தில், நிஜத்திலேயே நல்ல மழை பெய்தது.

மழையில் ஒயர்கள் எல்லாம் தண்ணீரில் கிடப்பதைக் கவனிக்காமல் ஸ்டார்ட், ஆக்‌ஷன் என்றவுடன், ஜிம்மி கேமரா வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. அப்போதுதான் ஷாக் அடித்தது. ஒரே சத்தம். நான் அதை எல்லாம் கவனிக்காமல், “மழை அந்தப் பக்கம், கேமரா இந்த பக்கம், அந்தப் பக்கம்” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தேன். பாட்டு வேறு ஒருபுறம் ஒடிக் கொண்டிருக்கிறது.

ஷாக் அடித்ததில் ஜிம்மி கேமராவை ஆப்ரேட் செய்த ஜவஹர் தூக்கி வீசப்பட்டார். அப்போது, ரஜினி இருந்த பக்கமாக கிரேன் போய்க்கொண்டிருந்தது. தனக்கு ஷாக் அடித்தாலும் பரவாயில்லை என்று மறுபடியும் எழுந்து ஷாக் அடிக்கும் கிரேனைப் பிடித்து நிப்பாட்டினார் ஜவஹர்.. அப்போதுதான் எங்களுக்கு உயிரே வந்தது,” என்று கூறிவிட்டு சில நிமிடங்கள் பேசாமல் கண் கலங்கினார் கே.எஸ்.ரவிக்குமார்.

அதைப் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினியும் கண்கலங்கினார். தனது பேச்சின்போது இதைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்.

-என்வழி




One thought on “லிங்கா ஷூட்டிங்கில் ரஜினியைக் காப்பாற்றிய கேமரா ஆபரேட்டர்… கண்கலங்கிய கேஎஸ் ரவிக்குமார், சூப்பர் ஸ்டார்

  1. Jawahar.T

    அந்த ஜவஹர் படத்த போடுங்கப்பா இந்த ஜவஹர் பார்க்கணும் ….

    ஜவஹர்.த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *