BREAKING NEWS
Search

சூப்பர் மேன், எக்ஸ்மேன், ஸ்பைடர்மேன் பண்றதை எங்க ரஜினிகாந்த் பண்ணக்கூடாதா? – கேஎஸ் ரவிக்குமார்

சூப்பர் மேன், எக்ஸ்மேன், ஸ்பைடர்மேன் பண்றதை எங்க ரஜினிகாந்த் பண்ணக்கூடாதா? – கேஎஸ் ரவிக்குமார்

ksr1
சென்னை: ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளை கேள்வியே கேட்காமல் பார்ப்பவர்கள், ரஜினி படத்தில் மட்டும் குறை கண்டுபிடிக்கிறார்கள். எனக்கு ரஜினிதான் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் எல்லாமே, என்றார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

லிங்கா படத்தில் இடம்பெறும் க்ளைமாக்ஸ் பலூன் சண்டைக் காட்சி குறித்து சிலர் விமர்சனங்கள் எழுப்பியதற்கு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நேற்று பதிலளித்தார்.

அவர் கூறுகையில், “அந்த காலத்திலிருந்தே குறை சொல்பவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். பதினாறு வயதினிலே பிடிக்காதவர்கள் இருந்திருக்கிறார்கள், அரங்கேற்றம் பிடிக்காதவர்கள் இருந்தார்கள். அவ்வளவு ஏன், முத்து, படையப்பாவையும்தான் குறை சொன்னது ஒரு கூட்டம். அந்த குரூப் எப்பயும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

ksr2

இந்தப் படத்தில் பலூன் சண்டை ஏன்னு கேட்கிறாங்க.. பலூன் பைட் வைக்காம வேற எந்த பைட் வச்சா ரசிப்பே… ஏற்கெனவே இதே படத்துல ராஜா லிங்கேஸ்வரன் ட்ரைன் பைட் பண்ற காட்சி வச்சாச்சி. சரி, இந்த கேரக்டருக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சோம். நான் என்ன சொல்றேன்னா.. அந்த பலூன் சண்டைக்கு முன்னாடியே படம் முடிஞ்சி போச்சி. தாத்தாவோட பெருமையைக் கேட்டு பேரன் திருந்தி ஊரைவிட்டு கிளம்பும் போதே கதை முடிஞ்சிடுச்சி. ஆனா ரஜினி சாரோட ரசிகர்களைத் திருப்திப்படுத்த ஒரு ஆக்ஷன் வைக்கணுமேன்னு அந்தக் காட்சி வச்சோம்.

ஏன் இதை நாங்க பண்ணா ரசிக்க மாட்டேங்கிற, ஸ்பைடர்மேன் பண்ணா குறை சொல்லாம பாக்கறீங்க. நான் கேக்கிறேன், ஸ்பைடர்மேனும் மனுசன்தானே.. அவன் மட்டும் என்ன தெய்வப் பிறவியா? அவன் மட்டும் எங்கிருந்தோ வந்து விழறான், க்ளாப்ஸ் பண்றீங்க.. ஏன்? அவன் கிராபிக்ஸுக்கே 1500 கோடி செலவழிக்கிறான். நமக்கு பணம் பத்தாது. ரூ 100 கோடிதான் செலவு பண்ண முடியும். அவனுக்கு உலக மார்க்கெட். நமக்கு தமிழ்நாடுதான். உலகளவில தமிழ் சினிமாவுக்கு மார்க்கெட் இருக்கலாம்.. ஆனா என்ன பர்சன்டேஜ்?  அதனால எனக்கு கொடுத்த பட்ஜெட்ல புதுசா ஏதாவது பைட் வைக்கணும்னு நினைச்சோம்.

ksr3

இப்போ ரெண்டு சுமோ பறந்து போற மாதிரி எடுத்தா, இன்னும் எத்தனை நாளைக்குதான் இதையே எடுப்பீங்கன்னு எழுதுவீங்க.. மோட்டர் போட், சேஸிங் எல்லாமே படங்களில் வந்தாச்சு. தினமும் டிவில இங்கிலீஷ் படம் பார்க்கறாங்க.. அதனால எதை எடுத்தாலும், அந்த அளவுக்கு இல்லன்னு ஈஸியா சொல்லிடுவாங்க. நம்ம இன்டஸ்ட்ரிக்கு புதுசா ஏதாவது வேணுமேன்னுதான் இந்த பைட் வச்சேன். இதையும் குறை சொன்னா வேற எந்த படத்தையுமே உங்களால பார்க்க முடியாது. ஒன்லி ஆர்ட் பிலிம்தான் பார்க்கணும்.. கமர்ஷியல் படம்னு பார்த்தா நிறைய முடியாத விஷயங்கள் இருக்கு.

எந்த பைட்ல அடிச்சா பறந்து பறந்து கீழே விழுந்து பவுன்சாகி எழுந்து வருவானா ஒருத்தன்.. அதை தியேட்டர்ல ரசிக்கறாங்களே.. அது மட்டும் நேச்சுரலானதா..? லிங்கா க்ளைமாக்ஸை நேச்சுரலா நீங்க ஃபீல் பண்ணனும்.. ஸ்பைடர்மேன் மாதிரின்னு பீல் பண்ணி பாருங்க. எனக்கு ரஜினிகாந்த் சூப்பர் மேன்தான். ஏன்னா அவர் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, ரசிகர்களுக்கு அவர் சூப்பர் மேன். ரோபோ மிஷின் பண்ணாதான் இதையெல்லாம் ஒத்துப்போம்.. லைவா ஒரு மனுஷன் பண்ணா ஒத்துக்க மாட்டேன்னா அது தப்பு. இது மாதிரி நிறைய இருக்கு.

10846252_10204317137719977_4152991570266150256_n

ஸ்பைடர்மேன் மட்டுமில்ல, எக்ஸ்மேன், பேட்மேன் இவங்கள்லாம் என்ன தெய்வப் பிறவிகளா? பறந்து பறந்து என்ன வேணா பண்ணலாம். ஆனா அதை எங்க ரஜினிகாந்த் பண்ணக்கூடாதா? எல்லாம் பண்ணுவாரு.. உனக்கு இஷ்டம் இல்லையா.. பலூன் பைட்டுக்கு முன்னாடியே படம் முடிஞ்சிப் போச்சு.. எழுந்து கிளம்புன்றேன் நான்! யாருக்குப் பிடிக்குதோ அவங்க பாக்கட்டும். குழந்தைங்கள்லாம் விசிலடிச்சு பார்க்கறாங்க அந்த சீனை. பெரியவங்க கைத்தட்டி ரசிக்கிறாங்க. அவங்களுக்குதானே நான் படம் எடுக்கணும். கிரிட்டிக்ஸ் எப்பவுமே எதையாவது குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க. அது அவங்க வேலை. அவங்களுக்கு பதில் சொல்லும்போதுதான் பல விஷயங்கள் மக்களுக்கு தெரியும். இதே கிரிட்டிக்ஸ் ஆறு மாசத்துக்குப் பிறகு இதைப்பத்தி பேச மாட்டாங்க. லிங்கா டிவில வரும்போது ஆஹா அருமையா இருந்தது.. என்னா கேரக்டர்ன்னு சொல்வாங்க…”

-என்வழி
9 thoughts on “சூப்பர் மேன், எக்ஸ்மேன், ஸ்பைடர்மேன் பண்றதை எங்க ரஜினிகாந்த் பண்ணக்கூடாதா? – கேஎஸ் ரவிக்குமார்

 1. JB

  //ஸ்பைடர்மேன் மட்டுமில்ல, எக்ஸ்மேன், பேட்மேன் இவங்கள்லாம் என்ன தெய்வப் பிறவிகளா? பறந்து பறந்து என்ன வேணா பண்ணலாம்.//

  Spiderman சிலந்தி கடிச்சு சக்தி கிடைச்சது. X-Men பிறப்பிலேயே சக்தியோடு பிறந்தார்கள். Batman உயர்தர gadgets பாவிச்சு காற்றில் மிதப்பார் (பறக்க முடியாது அவரால்). ஆனால் லிங்கா ஒரு சாதாரண மனிதன். எந்த வித சக்தியோ gadgetsஉம் இல்லாத மனிதன். அவர் பறப்பது என்பது நம்புவதற்கு கஷ்டமாக இருந்தது.

  அதுவும் இது பழைய ஹிந்தி படத்தில் ஏற்கனவே வந்த ஒன்று. இதை கே.ஸ்.ரவிக்குமார் புதிதாக யோசித்து செய்யவில்லை.

 2. Sivakumar

  அந்த பலூன் சண்டை மிகவும் அருமையாக இருந்தது
  அதிலும் ஒரு லாஜிக் இருந்தது,
  எங்கிருந்தோ பறந்து வந்து விழாம ஒரு Hair Pin பென்ட்ல பலூன் வரும் போது பைக் அந்த பென்ட்ல தாண்டி வந்து விழற மாதிரி எடுத்தது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

 3. ரஜினி நேசன்

  நம்ம தலைவரை குறை சொல்லும் சில முட்டாள் பசங்களுக்கு இது ஒரு சாக்கு. அவ்வளவு தான். படம் புடிச்சிருந்தா பாரு. இல்லையென்றால் எட்ட போ. துரோகிகளுக்கு இவ்வுலகில் இடம் இல்லை. நாய்களின் இயல்பு குறைப்பது தான்.

  திக்கெட்டும் லிங்கா வசூலை வாரி குவிக்கிறது.
  சாதனை மன்னன் ரஜினி வாழ்க.

 4. Rajesh

  We are hearing daily negative comments and today someone trained by some people gave interview that they had big loss in releasing lingaa in tanjore area. We all know its fake news. Today when my family tried to book sathyam for Sunday it was full. Question here if the movie is flop why it will get full and they continue in main theaters in complex rather than shifting to smaller screens. To put a full stop Eros, vendhar movies and ayngaran should come up with a statement clarifying that whatever thse guys are fake. Till that time we have to keep talking within ourselves and the ret of the world will start believing the false spreading media only. Also I heard dinakaran published wrong news in today’s paper. They want to make sure that endhiran is all time record in tamil history. Similarly they did during Shivaji victory period as they flashed news that Shivaji had loss. If producers really give respect to thalaivar the they should come with proper statement. Vino can’t to take any action by taking to appropriate person.

  True thalaivar fan

 5. M.MARIAPPAN

  தலைவரின் ரசிகர் கே.எஸ் ரவிக்குமாருக்கு ஒரு SALUTE . நான் நினைத்ததை அப்படியே கூறிவிட்டீர்கள் .தலைவர் எல்லா விதமான FIGHT செஞ்சாச்சு .இது ஒரு புதுமை .தலைவர் எது செய்தாலும் அது புதுமைதான் ,சீரணிக்க முடியாத சில நாயிகள் தான் குறை சொல்லிக்கொண்டு இருப்பார்கள் .வாழ்க தலைவர் ரஜினி , லிங்காவின் சாதனைகள் தொடரட்டும் .என்றும் தலைவரின் வெறியன் .

 6. Thalaivar Fan

  Spiderman சிலந்தி கடிச்சு சக்தி கிடைச்சது. X-Men பிறப்பிலேயே சக்தியோடு பிறந்தார்கள். Batman உயர்தர gadgets பாவிச்சு காற்றில் மிதப்பார் (பறக்க முடியாது அவரால்). ஆனால் லிங்கா ஒரு சாதாரண மனிதன். எந்த வித சக்தியோ gadgetsஉம் இல்லாத மனிதன். அவர் பறப்பது என்பது நம்புவதற்கு கஷ்டமாக இருந்தது.

  Ithai James Bond, Jackie Chan senja ishtama irukkuma? R dey bionic men then? Dey r normal too.
  Wth. abt this climax being long, tiring n funny?.. it didnt feel weird to me.
  After getting so much critics of it being a super sothappal, i was anxious how its gonna b but after watching i was like ‘ithukka ivlo build ups’ kodumai da.
  Stop over reacting n enjoy

 7. JB

  //Ithai James Bond, Jackie Chan senja ishtama irukkuma? R dey bionic men then?//

  கே.ஸ்.ரவிக்குமார் நீங்கள் சொன்னவர்களோடு ரஜினியை compare பண்ணவில்லை. அவர் compare பண்ணிய charactersஇற்கும் ரஜினிக்கும் என்ன வித்தியாசம் என்றுதான் நான் சொன்னேன்.

  உங்களுடைய உதாரணம் James Bond அல்லது Jackie Chan பண்ணும்போது கூட பலர் கேள்வி எழுப்பினர். ஏன் மற்ற தமிழ் படங்களில் logic இல்லாமல் எடுக்கும்போது, அதற்கு எதிர்ப்பு கூற பலர் இருந்தனர். விஜய் Sura படத்தில் entry scene, ஆதவன் படத்தில் climax scene எல்லாம் நக்கல் அடிக்கும்படி இருந்தது. அதே போல ரஜினி படத்திலும் இருந்ததுதான் ஏமாற்றமாக இருந்தது.

  நான் ரஜினியின் மற்ற படங்களில் இது போல feel பண்ணவில்லை. சிவாஜி படத்தில் ரஜினி சண்டை போட்டபோது கை தட்டி ரசிச்சேன். அப்போது ஒரு மனிதன் 100 பேரோடு தனியாக போராட முடியுமா என்று எல்லாம் யோசிக்கவில்லை. ஏன் என்றால் காட்சி அமைப்பு அப்படி. இந்த படத்தில் இது ஒரு குறையாக தோன்றுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? என்னை கேட்டால், அது உறுத்தும்படியாக இருந்தது. அதுவும் ஹிந்தி படத்தில் பார்த்த ஒரு காட்சி என்பதால் இன்னமும் உறுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *