BREAKING NEWS
Search

‘இதயக்கோவில்’ படத்தில் மணிரத்னத்துக்கு வாய்ப்பு கொடுத்தது என் தவறு’ – கோவைத் தம்பி

‘இதயக்கோவில்’ படத்தில் மணிரத்னத்துக்கு வாய்ப்பு கொடுத்தது என் தவறு’  – கொதிக்கும் கோவைத் தம்பி

சென்னை: ஏன்டா இப்படி ஒரு ஆளுக்கு வாய்ப்புக் கொடுத்தோம் என்று கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர் மணிரத்னத்தை வைத்துப் படமெடுத்த தயாரிப்பாளர்கள்.

நாயகன் படத் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் முன்பு மணிரத்னத்தையும் கமலையும் ஒரு பிடிபிடித்தது நினைவிருக்கலாம்.

இப்போது பிரபல பட அதிபர் கோவைத் தம்பியின் முறை. ‘இதயக்கோவில் படத்தில் மணிரத்னத்துக்கு இயக்குநர் வாய்ப்பு கொடுத்தது என் தவறுதான்’ என்று இப்போது அவர் சீற ஆரம்பித்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் காரணம், மணிரத்னத்தின் பேட்டி வடிவில் வெளியாகியுள்ள ஒரு புத்தகம்தான். அந்தப் புத்தகத்தில், தான் மட்டுமே சினிமா அறிவாளி என்றும் மற்றவர்கள் சினிமா பற்றிய அறிவே இல்லாதவர்கள் என்பதுபோலவும் மணிரத்னம் ஓவராகப் பேசியிருக்கிறார்.

எழுபதுகளின் இறுதியில் தான் பார்த்த மோசமான படங்கள் காரணமாக, தமிழ் சினிமாவைக் காப்பாற்ற இயக்குநர் அவதாரமெடுத்தேன் என்றெல்லாம் அந்தப் புத்தகத்தில் அவர் பேட்டி கொடுத்திருந்தார்.

28 ஆண்டுகளுக்கு முன், மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைத்தம்பி தயாரித்து, இளையராஜா இசையில் வெளியான படம் இதயக் கோயில். மிக அருமையான பாடல்களுக்காக புகழ்பெற்ற படம். மணிரத்னம்தான் இயக்குநர். இந்த படத்தில் மோகன், அம்பிகா, ராதா, கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் தொடர்பாக சமீபத்தில் ஒரு வார பத்திரிகையில் வெளிவந்த டைரக்டர் மணிரத்னம் பேட்டியில், ‘‘நான் டைரக்டு செய்த படங்களில் மிகவும் மோசமான படம், இதயக்கோவில். என்னை அறியாமல் அந்த கதைக்குள் சிக்கிக்கொண்டேன்’’ என்று கூறியிருந்தார்.

இதைப் படித்ததும் கொதித்துப் போயுள்ளார் படத்தைத் தயாரித்த கோவைத் தம்பி.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது. அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள் அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம் ‘இதயக்கோவில்’ என்றும் 28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.

கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா படங்களைத் தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். எத்தனையோ இளைஞர்கள் இருக்க, தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்’ இயக்குநர் ஆக்கியது என் தவறுதான். அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியதுதான் உண்மை.

எனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன் என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும்.

அந்த படத்தில் எனக்கு மூன்று பட செலவு வைத்தார் இந்த மணிரத்னம். சினிமா தெரியாமல், அதைப் படமாக்கும் விதம் தெரியாமல் காட்சிகளை அவர் பாட்டுக்கு சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தையே சுட்டு பொசுக்கியது. என்னைப் பொறுத்தவரை, ‘இதயக்கோவில்’ வெற்றிப் படம்தான். ஆனால் அதற்கு காரணம் மணிரத்னம் அல்ல.

திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்’ படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

-என்வழி சினிமா செய்திகள்
7 thoughts on “‘இதயக்கோவில்’ படத்தில் மணிரத்னத்துக்கு வாய்ப்பு கொடுத்தது என் தவறு’ – கோவைத் தம்பி

 1. srikanth

  திரு.மணிரத்னம் அவர்கள்;தனது படங்களில் வருவது போல் ஓரிரு வார்த்தையில் வசனம் [ம்ம் சரி,போ,வேணாம்,]என்று எழுதியிருந்தால் எந்த சிக்கலும் வந்திருக்காது.எப்பவுமே கம்மியாப் பேசறவங்க,கம்மியாதான் எழுதணும்.அடுத்து கடல்,வருகிறது.எத்தகைய அலை,வீசப்போகிறதோ?

 2. Manoharan

  எனக்கு மிக மிக பிடித்த படங்களுள் ஒன்று இதயக்கோயில். முதல் காரணம் ராஜாவின் இசை. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை நம்மை வேறு உலகத்துக்கு இட்டுச் செல்லும் இசையை இந்தப் படத்தில் ராஜா தந்துள்ளார். இரண்டாவது காரணம் படத்தின் ஒளிப்பதிவு, பாடல்காட்சிகளில் மோகன் நடித்த விதம். இன்னொரு பெரிய காரணம் கவுண்டரின் கலக்கல் காமெடி. ஒரு முறை ராஜ் டிவியில் இப்படம் ஒளிபரப்பானபோது என் தந்தை செய்தி பார்த்துக் கொண்டிருந்தார், உடனே நான் இதயக்கோயில் போட்டேன், சட்ட்று நேரம் வெறித்துப் பார்த்துவிட்டு “இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த படத்தையே பார்ப்பே என்று கத்திவிட்டு எழுந்து சென்று விட்டார். இன்றும் இதயக்கோயில் என்ற பேரை கேட்டவுடன் நம் ஞாபகத்துக்கு வருவது இதயம் ஒரு கோயில் பாடல்தான். அது ராஜாவின் படம், மணியின் படம் அல்ல. இப்போது இதை மோசமான படம் என்று சொல்பவர் அன்று ஏன் சொல்லவில்லை. சினிமாவை காப்பாற்ற வந்தவர் ஏன் மோசமான படம் எடுக்க வேண்டும்.? ஏறி வந்த ஏணியை உதைப்பதில் மணியும் சேர்ந்துவிட்டார். இன்னொன்று அலைபாயுதேவுக்கு பின் அவர் எடுத்த ஒரு படம் கூட சகிக்கவில்லை. முதலில் ஒரு நல்ல படம் எடுங்கள் மணி அப்புறம் பேசலாம்.

 3. குமரன்

  மனோகரனின் கருத்துக்கள்தான் எனது கருத்தும்.

  மணிரத்தினத்தின் மேதாவித்தனம்?
  அவரது அண்மைப் பேச்சுக்களைப் பார்த்தால் அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *