BREAKING NEWS
Search

கூடங்குளம் விவகாரம் – ஜெவுக்கு உதயகுமார் பாராட்டு – கருணாநிதி எதிர்ப்பு

கூடங்குளம் விவகாரம் – ஜெவுக்கு உதயகுமார் பாராட்டு – கருணாநிதி எதிர்ப்பு

சென்னை: கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.

உதயகுமார் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் இன்று முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். சுமார் 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது அவரிடம் தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ 1 லட்சத்துக்கான காசோலையை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் உதயகுமார் பேசுகையில், “கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அதேநேரம், இந்த அணுஉலை தொடர்பாக தமிழக அரசின் வல்லுநர் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை ஒருதலைபட்சமானது.

அணுமின் நிலையத்தால் மக்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பு குறித்து நிபுணர்களின் ஆதாரப்பூர்வமான அறிக்கையை முதல்வரிடம் அளித்துள்ளோம்.

எங்களுக்கு எந்த வெளிநாட்டு தொண்டுநிறுவனங்களுடனோ அல்லது அமைப்புகளுடனோ தொடர்பு கிடையாது. பணம் எதுவும் பெறவுமில்லை. மத்திய அரசு இந்த விஷயத்தில் எங்களுக்கு எதிராக பிரசாரப் போர் நடத்தி வருகிறது.

கூடங்குளத்தில் வசிக்கும் மக்களை முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறோம். முதல்வர் எங்களது கருத்துக்களை பொறுமையுடன் கேட்டார்.

இந்த அணுமின் நிலைய கட்டுமானத்தை அப்படியே வைத்துக்கொண்டு, இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும்படி மாற்றலாம். அமெரிக்காவில் ஏற்கெனவே இதுபோல ஒரு அணுஉலையை மாற்றியுள்ளனர். இந்த கருத்தை முதல்வர் கவனத்துடன் கேட்டார்,” என்றார்.

கருணாநிதி கடும் எதிர்ப்பு – அரசு மறைமுகமாக போராட்டத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு

தற்கிடையே, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இந்த போராட்டத்துக்கு அதிமுக அரசு மறைமுகமாக ஆதரவளிப்பதாக கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் முக ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அணுஉலைக்கு எதிரான போராட்டம் குறித்துப் பேசினார்.

அவர் கூறுகையில், “கூடங்குளம் அணுமின் நிலையம் மின் உற்பத்திக்கு தயாராக உள்ள போதிலும் இதற்கு எதிப்பு தெரிவித்து ஒரு சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைப் பார்க்கும்போது இந்தப் போரட்டத்துக்கு ஜெயலலிதா அரசு மறைமுக ஆதரவு வழங்குவது போல் உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் நிலை என்ன என்பதை முதல்வர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன,” என்றார்.

என்வழி செய்திகள்
7 thoughts on “கூடங்குளம் விவகாரம் – ஜெவுக்கு உதயகுமார் பாராட்டு – கருணாநிதி எதிர்ப்பு

 1. Kumar

  kalaignar is opposing the genuine peoples movement.the same thing he did in SL.Now started it in tamilnadu.

 2. R.Ramarajan-Madurai

  12 hours power cut yesterday in mdu. All people suffering , small scale industries are affected.
  No recovery steps by Jaya.. Total Tamilnadu in darkness. Please take immediate step for power supply . Where all 1000mv from 1hr power cut in Chennai gone? Vino sir please write an article about power cut. Raise your voice against govt.

 3. Sathish

  ஜெர்மானியன் ஒருத்தனை கூடங்குளம் விவகாரமா கைது பன்னிருக்கன்களே. அதப்பத்தி இன்னும் ஏன் நீங்க எழுதல. அ.தி.மு.க கட்சிய பத்தி விமர்சனம் பண்ணுறதே உங்க வேலையா போச்சு.

 4. தினகர்

  “அ.தி.மு.க கட்சிய பத்தி விமர்சனம் பண்ணுறதே உங்க வேலையா போச்சு.”

  “ஐ.நா.வில் இலங்கையை ஆதரிக்கக் கூடாது – பிரதமருக்கு முதல்வர் கடிதம்” ன்னு செய்தி போட்டிருக்காங்களே. கண்ணுல தெரியல்லீங்களா?

  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் ன்னு சொல்றமாதிரி ‘ மின்சாரம்’ சம்மந்தப்பட்ட செய்தி என்றாலே அம்மா ஆதரவாளர்களுக்கு வயிற்றில் புளி கரைகிறது போல் தெரிகிறது..

  தன்வினை தன்னைச்சுடும் என்றும் சொல்லி வச்சிருக்காங்கல்ல.. மின்சாரத்தை காட்டி ஆட்சி ஏறினால், மின்சாரத்திற்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.. அது தானே நியதி..

 5. Sathish

  தினகர் அவர்களே நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. நான் கடந்த சில மாதங்களாக என்வழி யை வாசித்து வருகிறேன். இன்று வரை அவர்கள் அ.தி.மு.க ஆட்சியை பாராட்டியதே இல்லை. என்னமோ அவர்கள் எந்த ஒரு நல்லதையும் பண்ணாத மாதிரியும் தி.மு.க ஆட்சியில் எல்லாமே கிடைத்த மாதிரியும் சொல்வீர்கள். ஆனால் தி.மு.க வில் முக்கால்வாசி பேர் செய்யும் மன்னராட்சி உங்கள் கண்ணுக்கு தெரியாது. இன்று அவர்களால் நாடு இழந்திருக்கும் பணத்தை பத்தி உங்களக்கு தெரியாதா. நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்கள் என்றால் நடுநிலையோடு வெளியுடுங்கள். உங்கள் தவறை சொன்னால் உடனே அவர்கள் மேல் எப்போதும் போல் கட்சி முத்திரையை குத்தி தப்பிக்க பார்க்காதீர்கள்.

 6. மிஸ்டர் பாவலன்

  //என்னமோ அவர்கள் எந்த ஒரு நல்லதையும்
  பண்ணாத மாதிரியும் தி.மு.க ஆட்சியில் எல்லாமே
  கிடைத்த மாதிரியும் சொல்வீர்கள். //// (சதீஷ்)

  சதீஷ் – எல்லாக் கட்சிக்காரர்களும் அவரவர்
  கட்சியை ஆதரித்து தான் பேசுவார்கள். தி.மு.க.
  கட்சிக்காரர்கள் அ.தி.மு.க.-வை பாராட்ட வேண்டும்
  என்பதோ, இல்லை, அ.தி.மு.க. கட்சிக்காரர்கள்
  தி.மு.க.-வை பாராட்ட வேண்டும் என்பதோ
  கட்டாயம் இல்லை. கருத்து சுதந்திரம் அனைவருக்கும்
  உண்டு.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 7. தினகர்

  “நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்கள் என்றால் நடுநிலையோடு வெளியுடுங்கள்”

  என்வழியை திற்ந்த மனதோடு படித்து பார்த்தால் அது மக்கள் வழி என்று தெரியும். ஆளுங்கட்சியின் மீதுதான் குறைகளை எடுத்து வைக்க முடியும். இது என்னமோ திமுக கட்சி ஆதரவு தளம் என்று சிலர் பொங்குவது விஷமத்தனமானது..ஆழ்ந்து கவனித்தால் அதில் ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. திமுக ஆட்சியை என்வழி சாடிய அளவுக்கு தினமலர் கூட சாடியது இல்லை.

  கண்களில் சுண்ணாம்பை தடவிக்கொண்டு பார்த்தால் எல்லாம் வெள்ளையாகத்தான் தெரியும்.. இங்கும் அரசு ஆதரவு செய்திகளும், கட்டுரைகளும் வருவதை நானும் பார்த்து தான் வருகிறேன். நீங்கள் உண்மையிலேயே கட்சி சார்பற்றவர் என்றால். உங்கள் வாதம் தேவையற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *