BREAKING NEWS
Search

கூடங்குளம் – மக்கள் உணர்வுகளுக்கும் உயிருக்கும் மதிப்பே இல்லையா?

கூடங்குளம் – மக்கள் உணர்வுகளுக்கும் உயிருக்கும் மதிப்பே இல்லையா?

301247_4223985130762_656999926_n

கூடங்குளம் அணு உலை செயல்படலாம் என்றும், இந்த அணுஉலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறுவது குறித்து பரிசீலிக்குமாறும் திங்கள்கிழமை தீர்ப்பளித்துவிட்டது உச்சநீதிமன்றம்.

இந்த தீர்ப்பை நிச்சயம் அணுஉலைக்கு எதிரான போராட்டக் குழு ஏற்காது என்பது ஒருபக்கம்…

மக்களின் உணர்வுகளுக்கும் உடல் நலன் குறித்தும் அரசுக்கோ நீதிமன்றங்களுக்கு சற்றும் அக்கறையில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஷ்யாவுடனான உறவு பாதிக்கப்படக் கூடாது, ரூ 15000 கோடி முதலீடு வீணாகிவிடக்கூடாது, அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வேண்டும்… என்பதுதான் இவர்களின் முக்கியப் பிரச்சினையாக உள்ளதே தவிர, மக்களைப் பற்றிய சிந்தனை இரண்டாம்பட்சமாகிவிட்டது என்பது வேதனை தருகிறது.

கண்ணெதிரில் செர்னோபில், புகுஷிமா என பெரும் அழிவுகளைப் பார்த்த பிறகும், இந்த கூடங்குளம் அணு உலை தரமற்றது, பாதுகாப்பற்றது என்பதற்கான ஆதாரங்களைக் கொடுத்த பிறகும், அணுஉலை முழுமையாக செயல்படாத நிலையிலேயே அந்தப் பகுதியைச் சுற்றி அணுக்கதிர் வீச்சு பரவ ஆரம்பித்துள்ள ஆபத்துகளை தொண்டை நீர் வற்றக் கத்திக் கூப்பாடு போட்ட பிறகும், ஏதேதோ காரணங்களைச் சொல்லி இந்த அணு அரக்கனை மக்கள் மத்தியில் விஷம் கக்க அனுமதிப்பது மக்கள் விரோதமே.

மின்சாரத்தைத் தயாரிக்க பாதுகாப்பான மாற்று வழிகள் இருக்கும்போது, அதை கொஞ்சமும் பரிசீலிக்காமல், அணு உலைகளை இந்தியாவில் தொடர்ந்து நிறுவலாம் என்ற முடிவை கையில் எடுத்திருப்பது, அறிவுப்பூர்வமானதும் அல்ல, மக்கள் நலம் காப்பதும் அல்ல.

அரசுகள் மக்களுக்காக என்பதை அடியோடு மறந்துவிட்டார்கள் அதிகாரத்திலிருப்பவர்கள்!

-விதுரன்
5 thoughts on “கூடங்குளம் – மக்கள் உணர்வுகளுக்கும் உயிருக்கும் மதிப்பே இல்லையா?

 1. குமரன்

  மக்கள் உணர்வுகள் என்பதை விட, மக்கள் பாதுகாப்பு என்பதே இந்தத் தலைப்பில் இருக்க வேண்டும்

  கூடன்குளம் போராட்டம் உணர்வுகளின் அடிப்படையில் அல்ல, மக்கள் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற அடிப்படையில்தான் எனபது மக்களுக்கு என்றுதான் புரியுமோ.

  அங்குள்ள மக்கள் 24 முலும் அமைப்புகள் விஸ்வரூபத்துக்கு எதிராகப் போராடியது போல உணர்வுகளின் அடிப்படையில் போராடவில்லை.

  விஞ்ஞான பூர்வமாக இந்த அணு உலையால் மக்கள் உயிருக்கு ஆபத்து என்ற காரணத்துக்காகப் போராடுகிறார்கள் என்பதை உச்ச நீதிமன்றம் உணராமல், வளர்ச்சியைத் தடை செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்திருப்பது சரியல்ல. வளர்ச்சியா இல்லை பேரழிவா என்பதைக் காலம்தான் சொல்லும் என்று வெறுமே இருக்காமல், இது பேரழிவைத் தரும் என்று சாமானிய மக்கள் போராடுவதைப் பார்த்தபின்னராவது புரிந்து கொண்டிருக்கலாம்.

  கல்பாக்கத்தில் அப்படி ஒன்றும் பாதுகாப்பான நிலை இல்லை என்பதை பரப்புரை செய்வதுதான் இப்போதுள்ள ஒரே வழி.

 2. Raj

  nuclear power is always a danger power…
  kalpakkam started very long back. At the time nobody dont know about nuclear & its danger.
  But now its not the case. every body knows about it…

 3. MATHAN

  அரசுகள் மக்களுக்காக என்பதை அடியோடு மறந்துவிட்டார்கள் அதிகாரத்திலிருப்பவர்கள்!

  இதற்கு முன் அதிகாரதிலிருந்தவர்கள்!!!!!!!!!!!!!! என்ன செய்து கொண்டிருந்தாங்கள்.

 4. Jegan

  I ask Those who support nuclear power projects…..
  Can anyone with your family construct a house and stay near an atomic power plant?
  The issue is people were fighting for their safety..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *