BREAKING NEWS
Search

ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ்… – வீக் எண்ட் சினிமா!

ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ்…  – வீக் எண்ட் சினிமா!   

ரஜினிkochadai-new-still-feat

கோச்சடையானின் தாமதம், அந்தப் படத்துக்கு புதிதாக இன்னுமொரு தயாரிப்பாளர் இணைந்துள்ளது போன்றவை, படம் குறித்த எதிர்மறைச் செய்திகளுக்கு காரணமாகியுள்ளது. கோச்சடையான் எப்போது வரும் என்பதில் ஆளாளுக்கு ஒரு ஆரூடம் வெளியிட்டு வருகிறார்கள். இதை கோச்சடையான் குழுவிடம் தெரிவித்து கருத்து கேட்டோம்… ‘நிச்சயம் இந்த ஆண்டு கோச்சடையானை ரசிகர்கள் தரிசிப்பார்கள். மற்ற விவரங்கள் விரைவில் வரும்,” என்றார்கள்.

ரசிகர்களுக்கு இப்போதைய தேவை ஒரு ட்ரைலர், சில ஸ்டில்கள். அவற்றை சீக்கிரம் ரிலீஸ் செய்கிற வழியைப் பாருங்கப்பா!

கமல்
marudha
மீண்டும் மருதநாயகம் பட பேச்சுகளை கிளப்பிவிட்டிருக்கிறது கமல் தரப்பு. திடீரென முன்னணி பத்திரிகைகளின் இணையதளங்களிலெல்லாம் மருதநாயகம் கேலரி முளைத்திருக்கிறது. தயாரிப்பாளராக ஆஸ்கர் ரவிச்சந்திரன் உள்பட பலரது பெயர்களும் அடிபடுகின்றன.

விஸ்வரூபம் 2, லிங்குசாமி தயாரிப்பில் ‘உத்தம வில்லன்’, பின்னர் மருதநாயகம்…. கமல் சார்… அந்த பேரி ஆஸ்போன் என்ன ஆனார்?

விஜய்..
vijay_EPS
லைவா என்ற பெயரில் படம் ஆரம்பித்த விஜய்யால், தன்னை தலைவா என்று கூப்பிடும் ரசிகர்களை நேரில் சந்திக்கக் கூட முடியாத நெருக்கடி. அம்மாவின் கோபப் பார்வைக்கு பயந்து பிறந்த நாள் விழா மொத்தத்தையும் கேன்சல் செய்துவிட்டார் இந்த அணிற் பிள்ளை (‘ஆட்சியமைய அணில் மாதிரி நானும் உதவினேன்’ – விஜயோட ஸ்டேட்மென்ட்தான்).

கேக் வெட்டியது கூட சத்தமின்றி ஜில்லா ஷூட்டிங்கில்தான்!

அஜீத்
சிகர்களுக்கும் மீடியாவுக்கும் தெரியக்கூடாது என்பதால் இதுவரை தனது இரண்டு படங்களின் பெயர்களையும்கூட அறிவிக்காமலிருக்கிறார் அஜீத். இதில் விஷ்ணுவர்தன் படம் ரிலீசுக்கே ரெடியாகிவிட்டது. valai30313_m

இந்தப் படத்தின் ட்ரைலரையே பெயரில்லாமல்தான் வெளியிட்டார்கள். தலை, வலை என்று ரசிகர்களாக ஒரு பெயரை வைத்துக் கொண்டுள்ளனர். அடுத்த படத்துக்கு வினாயகம் பிரதர்ஸ் என்று பெயர் சூட்டியுள்ளார்களாம். ஆனால் அதுவாவது உண்மையா.. தெரியவில்லை.

அடுத்து சுந்தர் சியுடன் இணைகிறாராம்..

சரி… பெயரை வெளியிடறதால அப்படி என்ன குடிமுழுகிப் போகிறது?

தனுஷ்
dhanush
னுஷ் நடித்த முதல் இந்திப் படமான ராஞ்ஜனாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக தனுஷின் நடிப்பை அசாதாரணமானது என பாராட்டியுள்ளன மீடியாக்கள்.

பாலிவுட்டுக்கு ஒரு அட்டகாசமான ஹீரோ கிடைத்துவிட்டார் என பிரபல விமர்சகர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். தனுஷுக்கு வாழ்த்து சொன்ன கையோடு, கால்ஷீட் கேட்டு அட்வான்ஸுடன் காத்திருக்கின்றனர் பாலிவுட் தயாரிப்பாளர்கள். பெரிய சாதனைதான்!

-என்வழி ஸ்பெஷல்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *