BREAKING NEWS
Search

இரண்டு வாரங்களில் ஒரு டஜன் தமிழ்ப் படங்கள்… தேறியவை எத்தனை?

இரண்டு வாரங்களில் ஒரு டஜன் தமிழ்ப் படங்கள்… தேறியவை எத்தனை?

டந்த இரு வாரங்களில் மட்டும் 12 தமிழ் திரைப்படங்கள் வெளியாகின. இவற்றில் பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் எதுவும் இல்லை.

சரி..  12-ல் எத்தனை தேறின? இரண்டு படங்களை தாராளமாகக் குறிப்பிடலாம். இரண்டுமே கிட்டத்தட்ட ஒத்த கருத்துடைய படங்களே.

தோனி

முதல் படம் தோனி. பிரகாஷ் ராஜின் உணர்வுப்பூர்வமான ஆக்கம். இளையராஜாவின் இசை என அனைத்து விதத்திலும் மேம்பட்ட படைப்பாக இருந்தது படம். முதல் சில தினங்களில் வசூல் ரீதியாக படம் சற்றே தடுமாறினாலும், முதல் வாரத்தைத் தாண்டிய பிறகு இந்தப் படம்  ‘நின்றுவிட்டது’.

இந்த ஆண்டின் நியாயமான வெற்றிப்படங்களில் தோனிக்கு முதலிடம் தரலாம். குறைந்த முதலீடு, டீசன்டான லாபம், பொய்யான வசூல் கணக்கு காட்ட வேண்டிய அவசியமின்மை…. பிரகாஷ் ராஜ் அடுத்தடுத்து இரு படங்களைத் தயாரித்து இயக்குவதில் மும்முரமாகிவிட்டார்!

உடும்பன்

டுத்த நல்ல படம் உடும்பன். கடந்த வெள்ளிக்கிழமை வந்தது. இதுவும் கல்வி முறைக்கு எதிரான படம்தான். ஒரு அரசுப் பள்ளி நன்றாக இயங்கினால் எத்தனைப் பேர் வயிறெரிந்து சாகிறார்கள், அதைக் கெடுக்க எப்படியெல்லாம் சதி செய்கிறார்கள் என்ற காட்சியைப் பார்த்தபோது, பல உண்மைச் சம்பவங்கள் கண்முன் வந்து போயின. மக்கள் திருந்த வேண்டும், தனியார் கல்வி கொள்ளையர்கள் ஒழிய வேண்டும். அதற்கு இதுபோன்ற படங்கள் நிறைய வேண்டும் என உரத்து சொல்ல வைத்தது சின்ன படமானாலும் சிறப்பாக வந்திருக்கும் உடும்பன்.

இந்தப் படத்தை வெளியிட சென்னையில் போதிய அரங்குகள் கிடைக்கவில்லை. சினிமாக்காரர்களின் கவுரவப் பிரச்சினையான சத்யம், எஸ்கேப் அரங்குகளில் ஒரு காட்சிக்குக் கூட இடம் தரவில்லையாம். மதுரை போன்ற வெளியூர்களில் படத்துக்குக் கிடைத்த வரவேற்பை, வசூலை தயாரிப்பாளர் விளம்பரமாகவே இரு தினங்கள் தந்த பிறகு, சென்னையில் சுமாரான அரங்குகள் கிடைத்தன. விமர்சனங்கள் நல்ல விதமாக வந்ததும், இப்போது பெரிய தியேட்டர்கள் படத்தைப் போட முன் வந்துள்ளார்களாம். அடுத்த வாரம் வரை தாக்குப் பிடித்தால், படம் ஓகேவாகிவிடும். இது தலைநகர நிலவரம்!

காதலில் சொதப்புவது எப்படி?

லைப்பு பிடித்துவிட்டதாலோ என்னமோ கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் இந்தப் படத்துக்கு. படத்தில் நிறையவே சொதப்பல்கள். எப்போதும் லொடலொடவென பேசிக் கொண்டே இருக்கிறார்கள். குழப்பியடிக்கும் காட்சி அமைப்புக்கும் பஞ்சமில்லை.

ஆனாலும் ஏதோ ஒரு காட்சியில் தங்களை அடையாளம் கண்டு கொள்வதால், இந்தப் படம் முன்னாள் காதலர்கள் மற்றும் இன்றைக்கு காதலித்துக் கொண்டிருப்பவர்களின் விருப்பத்துக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது. முதல் மூன்று நாள் வசூலும் பரவாயில்லை எனும் அளவுக்கு உள்ளதால், ‘காதலில் சொதப்புவது எப்படி’ தப்பித்துக் கொள்ளும் என்கிறார்கள்.

அப்படி என்ன இருக்கிறது அமலா பாலிடம் என்று சொல்லிக் கொண்டே, எப்படி விழுந்து விழுந்து அவரை ரசிக்கிறார்கள் என்பது இன்னொரு கேள்வி. பார்க்கப் பார்க்க பிடித்துப் போய்விட்டதோ!

முப்பொழுதும் உன் கற்பனைகள்

பெரிய எதிர்ப்பார்ப்புக்கிடையில் ரிலீஸான படம் இது. அதர்வா – அமலா பால் ஜோடி. வித்தியாசமாக ஸ்கிரிப்ட் என்ற பெயரில் முன்னுக்கும் பின்னுக்கும் இழுத்தடிக்கிற திரைக்கதை.

தடுக்கி விழுந்தால் ஒரு பாட்டு. சந்தானம் மட்டும் ஓரளவு ஆறுதல். அதர்வாவுக்கு இரண்டாவது படம். பரவாயில்லை… பாலாவின் புது ஹீரோ நடிப்பில் தேறிவிட்டார். எல்ரெட் குமாரின் முதல் இயக்குநர் முயற்சிதான் அவுட்!

அம்புலி 3டி

னோஜ் ஷியாமளனின் ‘வில்லேஜ்’ மாதிரி ஒரு த்ரில்லர் கதை சொல்ல வேண்டும், அதுவும் 3 டி எஃபெக்டில் என்பது புதிய இயக்குநர்கள் ஹரி சங்கர் – ஹரீஷ் நாராயணன் ஆசை. ஓரளவு வெற்றியும் கிட்டியிருக்கிறது அவர்களுக்கு.

3 டியில் இந்தப் படம் பார்க்க ஓரளவு த்ரில்லாகத்தான் இருந்தது. ஆனால்  க்ளைமாக்ஸில் அத்தனை பெரிய பில்ட் அப் கொடுக்கப்பட்ட அந்த ‘நியாண்டர்தால்’ அம்புலியை கொஞ்சம் பெரிய சைஸ் குரங்காக காட்டிவிட்டதுதான் ஏமாற்றம். ஆனாலும் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

ஒரு நடிகையின் வாக்குமூலம்

சோனியா அகர்வாலின் மறுபிரவேசம் என்ற டேக் லைனோடு வந்த படம். ஜித்தன் ரமேஷ், யோகி தேவராஜ் என நிறையபேர் நடித்திருந்தனர். ஆனால் இயக்குநர் முடிந்தவரை அமெச்சூர்தனமாக காட்சிகளை எடுத்திருந்ததால், இவர்களின் நடிப்பு வீணாகிவிட்டது.

ந்த ஆறு படங்கள் தவிர, அர்ஜுன் நடிப்பில் காட்டுப்புலி, ஒரு எஸ்எம்எஸ்ஸால் நேரும் விபரீதத்தைச் சொன்ன சூழ்நிலை, வாச்சாத்தி, விளையாட வா, ஒரு மழை நான்கு சாரல் ஆகிய படங்கள், கிடைத்த இடைவெளியில் சில திரையரங்குகளில் வெளியானதே பெரிய சாதனைதான்!

-என்வழி சினிமா ஸ்பெஷல்
7 thoughts on “இரண்டு வாரங்களில் ஒரு டஜன் தமிழ்ப் படங்கள்… தேறியவை எத்தனை?

 1. unmai

  காதலில் sothupavathu eppidi..padam super..after long nice romantic comedy movie..I dont why negative reviews for this movie in some site..

 2. Manoharan

  காதலில் சொதப்புவது எப்படி சூப்பர். இந்த வருடத்தின் உண்மையான சூப்பர்ஹிட் இதுதான். நீங்கள் சொல்வதுபோல் படம் எந்த விதத்திலும் குழப்பவில்லை. மிக நீண்ட நாளைக்கு பின் இப்படிப்பட்ட ரொமாண்டிக் காமெடி வந்தது உண்மையிலேயே சூப்பர். அமலா பாலிடம் என்ன இருக்கிறதா ? இது என்ன கேள்வி ? அவரிடம் என்ன இல்லை ? மைனாவில் இருந்த அமலா பாலா இவர் என்கிற அளவுக்கு இரு படங்களிலுமே மிக மாடர்னாக கலக்கிவிட்டார். பார்த்தவுடன் இவரை பிடிக்கவில்லை பார்க்க பார்க்க மிகவும் பிடித்து போய்விட்டது. இரு படங்களுக்கும் கிடைத்த Opening ல் அமலா பாலுக்கு பெரும் பங்கு உண்டு.
  இன்னொன்று… இதுவரை சிங்கிள் ஸ்கிரீன் அல்லாத இரு திரையரங்குகள் உள்ள complex முதல் Multiplex வரை தமிழ்நாட்டில் உள்ள எல்லா Complex theatre களிலும் ரஜினியை மட்டுமே திரையிட்டு இருக்கின்றனர். ( எந்திரன், சிவாஜி ) . அதற்க்கு பின் அதில் 90 சதவிதத்தை தொட்டது அமலாபால் மட்டுமே. இன்றைக்கு உள்ள 90 % complex theatre களில் அவரின் இரண்டு படத்தில் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

 3. Sakyhi

  அமலா தலைகனம் உள்ளவங்க!
  தாக்கு பிடிக்க மாட்டங்க!

 4. unmai

  Padam supera irrukku thats it. Credit to the director and Siddharth. Nothing to do with Amala Paul. She is waste.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *