BREAKING NEWS
Search

மும்பை இந்தியனை வென்று அடுத்த சுற்றில் இடம்பிடித்த கொல்கத்தா!

மும்பை இந்தியனை வென்று அடுத்த சுற்றில் இடம்பிடித்த கொல்கத்தா!

மும்பை: ஐபிஎல் 5 தொடரின் இன்றைய போட்டியில் படு மோசமான தோல்வியைத் தழுவியது மும்பை இந்தியன்ஸ். இந்த வெற்றி மூலம் அடுத்த காலிறுதி ஆட்டத்துக்குக் தகுதி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இந்த போட்டியில் 141 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் துவக்கம் முதலே அடுத்து விக்கெட்களை இழந்து இறுதியில் 32 ரன்களில் தோல்வியை தழுவியது.

மும்பை வான்கடே அரங்கில் புதன்கிழமை நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடிய துவக்கத்தை அளித்தார் கேப்டன் கம்பிர்.

ஆனால் ஆர்.பி.சிங் வீசிய 2வது ஓவரில் துவக்க வீரர் மெக்கல்லம் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். அடுத்த பந்தில் காலிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகு வந்த மனோஜ் திவாரி, கேப்டன் கம்பிர் உடன் சேர்ந்து பொறுமையாக ரன்களை சேர்த்தனர். கேப்டன் கம்பிர் 23 பந்துகளில் 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 27 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப, அதன்பிறகு திவாரி அதிரடியாக ஆடினார்.

அதிரடியாக ஆடி 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 41 ரன்களை சேர்த்த மனோஜ் திவாரி, மலிங்காவிடம் கேட்சாகி வெளியேறினார். தாஸ் 2 ரன்களில் ஏமாற்றினார், ஆர்.பி.சிங் வீசிய 18வது ஓவரில் அவுட்டானாதாக அறிவிக்கப்பட்ட யூசுப் பதான், பிறகு நோ பால் என்று மீண்டும் விளையாட அழைக்கப்பட்டார். ஆனால் கடைசி வரை பொறுமையாகவே ஆடிய யூசுப் பதான் அணியின் ஸ்கோரை உயர்த்த அதிரடியாக ஆடவில்லை.

இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 140 ரன்களில் சுருண்டது. மும்பை இந்தியனஸ் தரப்பில் ஆர்.பி.சிங் அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

141 ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சிறப்பான துவக்கத்தை அளித்தார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் கிப்ஸ் 13 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபில்யூ ஆனார். சச்சின் 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 27 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரேன் பந்தில் போல்டானார். அவரை தொடர்ந்து தினேஷ் கார்த்தி 21 ரன்களில் யூசுப் பதானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ராயுடு 1 சிக்ஸ் அடித்து ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால் 11 ரன்களில் அவரும் வெளியேற அணியின் வெற்றி வாய்ப்பு குறைந்தது. காலிஸ் வீசிய 16வது ஓவரில் பொல்லார்டு(8), ஸ்மித்(0) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். 18வது ஓவரில் கேப்டன் ஹர்பஜன் சிங்(1), ரோஹித் சர்மா(12) ஆகியோரும் ஆட்டமிழக்க, மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி உறுதியானது.

கடைசி கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் இந்தியன்ஸ் வெற்றிப் பெற போராடிய மலிங்காவும்(8), ஆர்.பி.சிங்கும்(3) அடுத்தடுத்து அவுட்டாகினர். 19.1 ஓவர்களில் 108 ரன்களில் ஆல்-அவுட்டான மும்பை இந்தியன்ஸ், தனது சொந்த மண்ணில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 32 ரன்களில் தோல்வியை தழுவியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரேன் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா அணி தகுதிபெற்றுவிட்டது.

சுருக்கமான ஸ்கோர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 140 / 7

திவாரி 41, கவுதம் கம்பிர் 63

மும்பை இந்தியன்ஸ் 108 / 10

சச்சின் டெண்டுல்கர் 27

32 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி

வியாழன்கிழமை போட்டிகள்

மே 17, மாலை 4 மணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், மொஹாலி.

மே 17, இரவு 8 மணி, டெல்லி டேர்டெவில்ஸ் Vs ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூர், பெரோஷா கோட்லா மைதானம், டெல்லி

-என்வழி கிரிக்கெட்




One thought on “மும்பை இந்தியனை வென்று அடுத்த சுற்றில் இடம்பிடித்த கொல்கத்தா!

  1. மிஸ்டர் பாவலன்

    //ஆனால் ஆர்.பி.சிங் வீசிய 2வது ஓவரில் துவக்க வீரர் மெக்கல்லம்
    1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். //

    இது உண்மையில் நாட்-அவுட். அம்பயரின் தவறான முடிவால்
    ஆட்டமிழந்தார் மெக்கல்லம்.

    ///141 ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு
    மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சிறப்பான துவக்கத்தை அளித்தார். ///

    இரண்டாவது ஓவரின் இறுதிப் பந்தில் (1.6) டெண்டுல்கர் டக்கில் இருந்த
    போது LBW ஆனாலும் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இதுவும் ஒரு
    shocking decision ஆக இருந்தது. இரண்டு தவறான முடிவுகளும் கல்கத்தா
    அணிக்கு பாதகமாக முடிந்தன.

    டெண்டுல்கர் four, sixers அடித்தாலும் 27 ரன்கள் (24 பந்துகளில், 3×4 1×6)
    குவித்தார். அவரைப் போன்ற சீனியர் மட்டையாளர்களுக்கு இது
    சொற்பமான ஸ்கோர். ஒரு life கிடைத்தாலும் அவரால் சோபிக்க
    முடியவில்லை. வழக்கம்போல் டெண்டுல்கர் புதிய பௌலரிடன்
    ஆட்டமிழந்தார். மும்பை தோற்பதற்கு அவரது விக்கெட் (11-ஆம் ஓவரில்)
    திருப்புமுனையாக அமைந்தது.

    சரி – நான் டெண்டுல்கர் மீது biased என நீங்கள் நினைக்கலாம்.
    மேட்ச் தோற்றதும் அளித்த பேட்டியில் மும்பை அணியின் கேப்டன்
    ஹர்பஜன் சிங் சொன்னது இது தான்:
    “I don’t think there was much fault in the wicket, I think we need to sort அவுட்
    our technique … and how to bat in the first six overs.”

    இதை விட ஒரு பெரிய விமர்சனம் டெண்டுல்கர் மீதும் கிப்ஸ் மீதும்
    இன்னொருவர் வைக்க முடியாது. நான் வழக்கமாக சொல்வது போல்
    டெண்டுல்கர் மும்பை அணியில் fully fit ஆக எல்லா IPL மேட்ச்சுகளிலும்
    விளையாடுவது மற்ற அணிகளுக்கு நல்லது!

    -==== மிஸ்டர் பாவலன் ====-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *