BREAKING NEWS
Search

கோச்சடையான் பார்த்து ரஜினி பாராட்டினார்.. ஆண்டு இறுதிக்குள் வெளியாகிவிடும்! – முரளி மனோகர்

கோச்சடையான் பார்த்து ரஜினி பாராட்டினார்.. ஆண்டு இறுதிக்குள் வெளியாகிவிடும்! – முரளி மனோகர்

 rajini_kochadaiyaanசென்னை: சினிமாவே பார்க்காதவர்கள் கூட கோச்சடையானை ஒரு முறை பார்த்தால், மீண்டும் பார்க்க வருவார்கள் என இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பாராட்டியதாக படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘கோச்சடையான்’. கேஎஸ் ரவிக்குமார் மேற்பார்வையில், சௌந்தர்யா இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வருகிறது.

‘போட்டோ ரியலிஸ்டிக் பெர்பாமன்ஸ் கேப்சரிங்’ என்ற நவீன தொழில்நுட்பத்தில், முப்பரிமாணத்தில் படம் தயாராகியிருக்கிறது.

‘கோச்சடையான்’ படம் கைவிடப்பட்டதாக எழுந்த வதந்தியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் முரளி மனோகரின் பேட்டியை சில தினங்களுக்கு முன் நாம் அளித்தது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் நேற்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்து படம் குறித்துப் பேசினார்.

அவர் கூறுகையில், “ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘அவதார்’, ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘டின் டின்’ ஆகிய படவரிசையில் ‘கோச்சடையான்’ படம் மிக நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிறது. ‘அவதார்’, ‘டின் டின்’ ஆகிய இரண்டு ஹாலிவுட் படங்களும் தலா ரூ.2 ஆயிரம் கோடி செலவில், நான்கு வருடங்களுக்கு மேல் நேரமெடுத்து தயாரானவை. அந்த படங்களின் கேரக்டரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் ரஜினியை அப்படி மாற்ற முடியாது. அவருக்கு கோடானு கோடி ரசிகர்கள் உள்ளனர். அவர்களை திருப்திப்படுத்துவது அவசியம். அதனால் அவரது தோற்றம், நடை உடை பாவனை ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தி உருவாக்கி உள்ளோம். ஹாலிவுட் படங்களை விட மிரட்டலாக தயாராகி உள்ளது.

ரூ 125 கோடி பட்ஜெட்

‘கோச்சடையான்’ படத்தை நாங்கள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ரூ.125 கோடி செலவில், இரண்டு வருடங்களில் உருவாக்கியிருக்கிறோம். படத்தில் கிராபிக்ஸ் வேலைகளும், நவீன தொழில்நுட்பங்களும் அதிகமாக இடம்பெற்றிருப்பதால்தான் தாமதமாகிறது.

‘கோச்சடையான்’ படம் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய முயற்சி. நிச்சயமாக இந்த படத்தை அனைத்து தரப்பு மக்களும் பார்த்து பாராட்டுவார்கள். இளமையான தோற்றத்தில் ரஜினிகாந்த் செய்திருக்கும் சாகசங்கள் பரபரப்பாக பேசப்படும்.

ரஜினி, ரவிக்குமார் பாராட்டு

‘கோச்சடையான்’ படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு அசந்துவிட்டார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ‘‘படமே பார்க்காதவர்கள்கூட இந்த படத்தை இரண்டு முறை பார்ப்பது நிச்சயம்,’’ என்று கூறினார். இயக்குநர் சௌந்தர்யா மிகத்திறமையாக, ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

kochadai-new-still-feat

இந்த ஆண்டே…

படப்பிடிப்பு, எடிட்டிங் பணிகள் முடிவடைந்துவிட்டன. பின்னணி இசைச் சேர்ப்பு பணிகள் நடைபெறுகின்றன. ‘ஸ்பெஷல் எபக்ட்ஸ்’ வேலைகளும் நடைபெறுகின்றன. செப்டம்பர் மாதத்துக்குள் எல்லா வேலைகளும் முடிவடைந்துவிடும்.

படம் திரைக்கு வரும் தேதி பற்றி அக்டோபர் மாதம் அறிவிப்போம். நிச்சயம் ‘கோச்சடையான்’ படம் இந்த ஆண்டில் திரைக்கு வந்துவிடும். பாடல் வெளியீடு எங்கு எப்போது என்பதை சீக்கிரம் சொல்கிறோம்,” என்றார்.

-என்வழி
14 thoughts on “கோச்சடையான் பார்த்து ரஜினி பாராட்டினார்.. ஆண்டு இறுதிக்குள் வெளியாகிவிடும்! – முரளி மனோகர்

 1. kumaran

  கோச்சடையன் late ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வரும்.

 2. Jegan

  Ipdi usupeti usupeti oru 2 years otitanga..diwali ku release panuvanga nu finala nambalam.

 3. kabilan.k

  2000 கோடி ருபாய் செலவில் எடுக்கப்பட்ட அவதார்,டின் டின் எப்படி நூற்றி இருபைந்தைந்து கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த படம் அதற்கு ஈடாக வரும்(நான் சொன்னது தரத்தில்).சௌந்தர்யாவின் பேச்சை கேட்டு தலைவர் விஷ பரிட்சையில் இறங்கி உள்ளார்,எங்கு போய் முடியுமோ இது. முதல் ஸ்டில்லை தவிர மீதி இரண்டுமே கார்ட்டூன் படத்தை பார்ப்பது போன்ற உணர்வை தான் தருகிறது.படமும் இப்படியே இருந்தால்.கடவுளே படம் நன்றாக இருக்க வேண்டும்…….என்று வேண்டி கொள்வதை தவிர வேறு வழி இல்லை

 4. மிஸ்டர் பாவலன்

  ////நிச்சயம் ‘கோச்சடையான்’ படம் இந்த ஆண்டில் திரைக்கு வந்துவிடும்.////

  விஸ்வரூபம்-2 படம் தீபாவளிக்கு களம் இறங்கும் நிலையில் ரஜினி
  கோச்சடையான் படத்தை அவர் பிறந்த நாள் அன்று ரிலீஸ் செய்தால்
  அது கமல்-ரஜினி ரசிகர்கள் போட்டி இல்லாமல் இரண்டு படங்களையும்
  பெரும் வெற்றி அடைய செய்ய வசதியாக இருக்கும்! நன்றி, வணக்கம்.

  === மிஸ்டர் பாவலன் ==-

 5. தினகர்

  //2000 கோடி ருபாய் செலவில் எடுக்கப்பட்ட அவதார்,டின் டின் எப்படி நூற்றி இருபைந்தைந்து கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த படம் அதற்கு ஈடாக வரும்(நான் சொன்னது தரத்தில்).சௌந்தர்யாவின் பேச்சை கேட்டு தலைவர் விஷ பரிட்சையில் இறங்கி உள்ளார்,//

  அமெரிக்க நிறுவனங்கள் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஏன்வேலை தருகின்றன என்று ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால், இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்க மாட்டீர்கள் கபிலன். உலகிலேயே இந்தியர்களிடம் தான் ஏகப்பட்ட திறமைகள் மலிவு விலையில் கிடைக்கிறது. அது எந்த துறையாக இருந்தாலும் சரி, அதனால் தான் ஒரு ‘Web browser ‘ கூட சொந்தமாக உருவாக்க முடியாத இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அத்தனை அமெரிக்க நிறுவனங்களும் வேலைகளை அள்ளித் தருகின்றன. இந்த நிறுவனங்களின் முக்கிய மூலதனம் ‘ இந்தியர்களின் திறமைகள்’ மட்டுமே . சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ’பெண்டஃபோர்’ என்ற சென்னையின் ஐடி நிறுவனம் ஹாலிவுட் படங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றியிருக்கிறார்கள் எனபதையும் கவனத்தில் கொள்ளுங்கள்

  இத்தனை இருந்தாலும், நம்மவர்களிடம் தன்னம்பிக்கை இல்லாதது தான் பெரிய குறை. அதனால் தான் இப்படிப்பட்ட கேள்விகளும் எழுகின்றன. சங்க இலக்கியத்தை படியுங்கள். தமிழனின் வாழ்வியலும், நுண்ணறிவும், சாதனைகளும் தெரிய வரும். நம் மீதான தன்னம்பிக்கையும் தானாக உடன் வரும்.

  நம்மவர்களின் திறமைகளை குறைவாக மதிப்பிட வேண்டாம். குறைந்த செல்வில் நிறைந்த தரத்தில் படமெடுக்க, கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் நிறுவனங்களை படையெடுக்க வைப்பார் நம்ம ’கோச்சடையான்’.

 6. venkat

  I posted the same comments what the producer said. Even though it was not published by the moderator this kind of film making is a herculean task.

  Regards,

  Venkat

 7. kabilan.k

  தினகர் சார்,இந்த படத்தில் நம்மவர்கள் பணியாற்றுகின்றனர் என்பதை ஒத்து கொள்கிறேன்,திறமை மிக்கவர்கள் என்பதை மறுக்க வில்லை நான்.அனால் கோச்சடையான் தொழில் நுட்ப வேலைகள் நான்கு நாடுகளில் நடைபெறுவதாக அல்லவா நான் கேள்வி பட்டேன்,அப்படி இருக்கையில் நீங்கள் நம்மவர்கள் மட்டும் வேலை பார்த்தால் மட்டுமே நீங்கள் கூறுவது சாத்தியம்.தினகர் சார் நீங்கள் மனதை தொட்டு கூறுங்கள் முதல் ஸ்டில்லை தவிர ,மத்த இரண்டு ஸ்டில்லும் கார்ட்டூன் ஸ்டில் போல தோன்ற வில்லயா உங்களுக்கு??சிவாஜியிலும்,எந்திரனிலும் பார்த்த தலைவரை போலவா இருந்தது.நான் தொழில் நுட்பத்தில் என் தலைவர் பணி ஆற்றுவதை ரசிக்கிறேன்,அதற்காக என்ன வேண்டுமானுலும் பார்ப்பேன் என்று இல்லை சார்.நானும் உங்களை போல நன்றாக படம் வர வேண்டும் என்று தான் விரும்புகிறேன் சார்

 8. Aryan

  ஐயோ அழுகுறதா, சிரிக்குறதாணு தெரியல்லையே

 9. Mahendran

  படத்தின் ட்ரைலர் பார்க்கும்வரை கோச்சடயானின் தரம் குறித்த சந்தேகம் இருக்கத்தான் செய்யும். கபிலன் சொல்வதும் உண்மைதான். இந்த ஆண்டு வெளியாகப்போகும் ஒரு படத்தின் ஒரு உருப்படியான் ஸ்டில் கூட இன்னமும் வரவில்லை. இது சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. படம் நன்றாக வந்தால் எனக்கும் சந்தோஷம்தான்.

 10. sathish

  சார் படம் நல்லவ இல்லேன்னா தலைவர் பக்கமாதர் இந்த கோச்சடையன்படம்
  மிக பெரமடம் மக இரூக்கும்

 11. sathish

  போட்டோ சூட் த பார்த்து நம்ம தப்பு கனிக்கு போடகூடாது

 12. kabilan.k

  சதீஷ் சார்,போட்டோ சூட் பார்த்து தப்பு கணக்கு போடா கூடாது என்பதை ஒரு அளவில் ஏற்றுகொள்கிறேன்,ஆனால் இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு படத்திற்கு அதுவும் முக்கியம் தானே சார்.பல படங்களுக்கு தளத்திலும்,சமுக வலைதளங்களில் பகிரப்படும் படங்களால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும்.அந்த எதிர்பார்ப்பை கடைசி இரண்டு புகைப்படங்களும் கொஞ்சம் கூட பூர்த்தி செய்யவில்லை என்ற ஆதங்கம் தான் சார்.படம் மிக சிறப்பாக வரவேண்டும் என்பது தானே தலைவர் ரசிகர்களின் வேண்டுதலுமே.புகைப்படம் தான் இப்படி இருக்கும்,படத்தை பார் என்று,சௌந்தர்யா மிக சிறப்பான படத்தை குடுத்தார் என்றால் அதை விட வேறு என்ன சந்தோசம் இருக்க முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *