BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் அமெரிக்க உரிமை விற்பனை!

சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் அமெரிக்க உரிமை விற்பனை!

Kochadaiyaan (1)

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் அமெரிக்க உரிமை பெரும் விலைக்கு விற்பனையாகியுள்ளது.

இதன் தெலுங்கு உரிமையை லட்சுமி கணபதி பிலிம்ஸ் பெற்றுள்ளது. தெலுங்கில் விக்ரம சிம்ஹா என்ற பெயரில் வெளியாகிறது இந்தப் படம்.

இந்தியாவின் முதல் 3 டி, மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தில் வெளியாகும் கோச்சடையானை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குகிறார். சூப்பர் ஸ்டாருடன் தீபிகா படுகோன், சரத்குமார், ஷோபனா ஆகியோர் நடித்துள்ளனர்.

கேஎஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி, இயக்க மேற்பார்வை செய்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார்.

பாடல்களை வரும் மே மாதம் சோனி நிறுவனம் வெளியிடுகிறது. படம் வரும் ஜூலையில் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் ஜப்பான் ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.

படத்தின் ஏரியா விற்பனையை தயாரிப்பாளர்கள் ஈராஸ் மற்றும் மீடியாஒன் குளோபல் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

முதல் கட்டமாக அமெரிக்க வெளியீட்டு உரிமை பெரும் விலைக்குப் போயுள்ளது. விற்பனைத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் வெளியிடவில்லை. அடுத்து பிரிட்டன் உரிமை விலை பேசப்பட்டு வருகிறது.

தெலுங்கில் படத்தை மொத்தமாக வாங்கி வெளியிடுகிறது லக்ஷ்மி கணபதி பிலிம்ஸ்.

-என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் அமெரிக்க உரிமை விற்பனை!

  1. Dinesh Murugesan

    அட trailer -எ கலை கட்டுது ………….. அப்போ main picture சும்மா அதிரும் போல …… ஜூலை 2013 காக காத்திருப்போம் .

  2. M.SARO

    நல்ல செய்தி வாழ்க தலைவர்.எவரும் தலைவர தப்பாக நினைக்க கூடாது அதனால் தலைவர் ராஜபக்சேக்கு எதிராக மீண்டும் பயங்கரமான எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்

    என்றும் தலைவரின்
    ரசிகன்

  3. vasanthan

    நல்ல செய்தி,இப்பவே புல்லரிகிறது ,தலைவா,,,,,,,,,,,,,,,

  4. மு. செந்தில் குமார்

    “அட trailer -எ கலை கட்டுது ………….. அப்போ main picture சும்மா அதிரும் போல …… ஜூலை 2013 காக காத்திருப்போம்.” திரு. Dinesh Murugesan

    அப்படித்தான் இருக்குது ! (அதே உணர்வுதான் ஏற்படுகிறது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *