BREAKING NEWS
Search

மூன்று நாடுகளில் கோச்சடையான் போஸ்ட் புரொடக்ஷன்!

தெலுங்கில் கோச்சடையானுக்கு தலைப்பு ‘விக்ரம் சிம்ஹா!’

தெலுங்கில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானுக்கு விக்ரம் சிம்ஹா என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தியில் இந்தப் பெயரில் வெளியாகுமா அல்லது வேறு தலைப்பு வைக்கப்படுமா என்பது தெரியவில்லை.

ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்க, கேஎஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் உருவாகி வரும் கோச்சடையான், தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி மற்றும் ஜப்பானிய மொழியிலும் வெளியாகிறது.

கோச்சடையான் என்பது தூய தமிழ்ப் பெயராகும். எனவே மற்ற மொழிகளில் இந்தப் படத்தை அந்த மொழிக்குப் பரிச்சயமான தலைப்பைச் சூட்ட முடிவு செய்துள்ளனர்.

தெலுங்குப் பதிப்புக்கு ‘விக்ரம்சிம்ஹா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ரஜினியின் படையப்பா, நரசிம்ஹா என்ற பெயரில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது நினைவிருக்கலாம்!

மூன்று நாடுகளில் கோச்சடையான் போஸ்ட் புரொடக்ஷன்!


கோச்சடையான் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. பாடல் காட்சிகள் மற்றும் சில பேட்ச் அப் பணிகள் மட்டும்தான் இதில் பாக்கி. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படு வேகமாக நடந்து வருகின்றன.

மூன்று வெவ்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் இந்தப் பணிகள் நடப்பதுதான் விசேஷம்.

லண்டன், ஹாங்காங் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் கோச்சடையானின் இசைக் கோர்ப்பு, மோஷன் கேப்சரிங், கிராபிக்ஸ் மற்றும் 3டி அனிமேஷன் பணிகள் நடக்கின்றன. இவற்றைப் பார்வையிட மூன்று நாடுகளுக்கும் பறந்த வண்ணம் உள்ளார் இயக்குநர் சௌந்தர்யா.

இத்தகவலை உறுதிப்படுத்திய படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர், “இந்தப் பணிகள் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் வரை தேவைப்படலாம். இவையெல்லாம் முடிந்த பிறகு பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவிப்போம்,” என்றார்.

-என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *