BREAKING NEWS
Search

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கோச்சடையான்!

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கோச்சடையான்!

rajini-big

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முதல் இந்திய மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பப் படமான ‘கோச்சடையான்’ திரையிடப்பட்டது.

2014-ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவில் முதன்முறையாக பர்ஃபார்மன்ஸ் கேப்ட்சரிங் (performance capturing) தொழில்நுட்பத்தில் ரஜினி நடித்து வெளியான ‘கோச்சடையான்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை திரையிடப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் ரஜினிகாந்த் மற்றும் இயங்குநர் சவுந்தர்யா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கோச்சடையான் திரையிடப்பட்ட போது ரஜினி பங்கேற்கவில்லை. தவிர்க்க முடியாத, முன்பே ஒப்புக் கொண்ட ஒரு பணிக்காக அவர் பெங்களூர் சென்றுவிட்டதால் கோச்சைடையான் திரையிடலில் அவரால் பங்கேற்க முடியவில்லை என்று தொகுப்பாளர்களால் விளக்கம் தெரிவித்தனர்.

இருப்பினும் நிகழ்ச்சியின்போது ‘கோச்சடையான்’ படத்தின் இயக்குநரும் ரஜினியின் மகளுமான சவுந்தர்யா ரஜினி, ரஜினியின் மனைவி லதா ஆகியோர் பங்கேற்றனர்.

latha-rajinikanth-and-sound

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சவுந்தர்யா ரஜினிகாந்த், “இந்த படத்தின் மூலம் எனக்கு சர்வதேசத் திரைப்பட விழாவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் நான் சினிமாவுக்கு அறிமுகமானதை பெருமையாகக் கருதுகிறேன். தவிர்க்க இயலாத காரணங்களால் எனது தந்தை இங்கு இல்லை. இந்தியாவில் முதன்முறையாக பர்ஃபார்மன்ஸ் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு கொண்டுவர அவர் துணையாக இருந்தார்,” என்றார்.




3 thoughts on “கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கோச்சடையான்!

  1. RAVI

    கோட்சடையான் மிக பெரிய வெற்றி படம். ஒரு அனிமேஷன் படம் இந்த அளவிற்கு பேசப்படுவது என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற ஒருவரால் தான். அனிமேஷன் படத்தின் வசூல் சாதனை தலைவரின் கோட்சடையான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *