BREAKING NEWS
Search

சௌந்தர்யா தலைமையில் சீனா போகிறது கோச்சடையான் குழு!

சௌந்தர்யா தலைமையில் சீனா போகிறது கோச்சடையான் குழு!

kochadai-rahman

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக சீனாவுக்குப் புறப்படுகிறது படக் குழு.

மே முதல் வாரம் படத்தின் இசை வெளியீடு நடக்கிறது.

ரஜினி – தீபிகா, சரத்குமார், ஷோபனா, ஜாக்கி ஷெராப், நாசர் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள, மோஷன் கேப்சரிங் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகிவரும் பிரமாண்ட படம் கோச்சடையான்.

படத்தின் எடிட் செய்யப்பட்ட காட்சிகளை சமீபத்தில் பார்த்த ரஜினி பெரிதும் பாராட்டியிருந்தார். கேஎஸ் ரவிக்குமாரும் நினைத்ததை விட 10 மடங்கு பிரமாண்டமாக வந்துள்ளது இந்தப் படம் என்றார்.

இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியை சீனாவில் வைத்து செய்யப் போகிறார்களாம்.

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள இயக்குநர் சௌந்தர்யா ரஜினி, “திங்கள் கிழமை கோச்சடையான் போஸ்ட் புரொடக்ஷனுக்காக சீனா போகிறோம். 24-ம் தேதி படத்தின் டப்பிங் தொடங்குகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மே முதல் வாரம் ஆடியோ வெளியீடு இருக்கும் என்றும், ஜூலையில் படம் வெளியாகும் என்றும் தெரிகிறது.

-என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “சௌந்தர்யா தலைமையில் சீனா போகிறது கோச்சடையான் குழு!

  1. raaj

    தயவு செய்து soundaryakku மெயில் அனுப்பியாவது படம் ஆகஸ்ட் செப்டம்பர் வராமல் சொல்லுங்கள்

  2. SURYA

    எஸ் முக்கியமாக ஆகஸ்ட் வேண்டவே வேண்டாம்

  3. srikanth1974

    நண்பர் raaj அவர்களின் கருத்துதான் எனது கருத்தும்.
    பாபா, குசேலன்,இவையிரண்டுப் படங்களுமே இதற்கு உதாரணம்.

  4. Srinivasan

    Yes, it is true. Let us go back 22 years behind. 1991 Sep Naatukku Oru Nallavan.
    If i’m right 1986 Sep Sri Raghavendra (Even we all know it is one of the best performance by thalivar, but still it is a commercial failure)

  5. Ashik

    Now a days there is no interest to read KOCHADAYAN related news Boss! Even If Shankar take a responsibility of this films means, The way of presentation is totally different. Here no experience to advisement the film. Slow by slow all peoples are going to forget the film because of Sowndarya. There is no PICTURE, Interesting News, Interest incident and other experience from her. The Same feature happened by BABA film. Every body knows the result.

    We are all RAJINI’s FANS not SOWNDARYA! Pls stop to post the Sowndarya related news.

    ASHIK, DUBAI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *