BREAKING NEWS
Search

கோச்சடையான் – எகிறும் எதிர்ப்பார்ப்பு!

கோச்சடையான் – எகிறும் எதிர்ப்பார்ப்பு – விநியோகஸ்தர்கள் ஆர்வம்!

ரு படம் பூஜை போடப்படும்போதே விற்பனை முடிந்து, லாபத்தைப் பார்க்க முடியும் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி படம் மட்டுமே. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகம் பார்த்துவகாரணம், ரஜினி படம் தப்பு பண்ணாது  என்ற நம்பிக்கை ஒருபக்கம்… அப்படியே நஷ்டம் என்றாலும் ரஜினி மீதுள்ள நம்பிக்கை மறுபக்கம்.

அந்த நம்பிக்கையில், ரஜினியின் 3 டி படமான கோச்சடையானுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு விலை கொடுக்க  தெலுங்கு, மலையாள மற்றும் கர்நாடக ஏரியா விநியோகஸ்தர்களும் தயாராகி வருகின்றனர்.

ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, ருக்மணி, ஜாக்கி ஷெரஃப், நாசர் மற்றும் பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். கே எஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநர் மேற்பார்வை செய்கிறார்.

இந்தியாவில் முதன் முறையாக ‘பர்மார்மன்ஸ் கேப்சரிங்’ செய்யப்படும் படம் இது. பலவெளிநாட்டுக் கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். நவீன தொழில்நுட்பத்துடன், அவதார், டின் டின் போல பெரிய அளவில் உருவாகும் படம் கோச்சடையான் என்பதால் சர்வதேச அளவில், இதுவரை ரஜினி படங்கள் வெளியாகாத நாடுகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளது ஈராஸ் – அய்ங்கரன் நிறுவனம்.

எந்திரனை விட கூடுதலாக 20 நாடுகளில் இந்தப் படம் வெளியாகவிருப்பதாக ஏற்கெனவே இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

படத்தின் தெலுங்கு, இந்தி, மலையாள ஏரியா உரிமைகள் பெரும் விலைக்கு கேட்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த முறையும் பெரும் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தை கையாள்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஒருவர், டப்பிங் உரிமைக்கே 30 கோடிகளை கொடுக்க தயார் என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்துடன் கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாட்டு உரிமை வியாபாரம் மட்டுமே ரூ 100 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.

இந்தி மற்றும் தமிழ்ப் பட உரிமைகளையும் சேர்த்தால், இந்திய சினிமா வர்த்தகத்தில் இந்தப் படம் பெரிய திருப்பு முனையாக அமையும் என்று வாய்பிளக்கிறார்கள்.

ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது வரும் நாட்களில்தான் தெரியவரும். ஏகத்துக்கும் எதிர்ப்பார்ப்பை ஏற்றிவிடாமல் இந்தப் படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பதே ரசிகர்கள் மற்றும் சினிமா பார்வையாளர்களின் கருத்து. சௌந்தர்யாவும் தயாரிப்பாளர்களும் இதை மனதில் வைத்தே அமைதி காக்கிறார்கள்.

-என்வழி ஸ்பெஷல்
6 thoughts on “கோச்சடையான் – எகிறும் எதிர்ப்பார்ப்பு!

 1. மிஸ்டர் பாவலன்

  ‘கோச்சடையான்’ – இந்தப் பேரு தமிழ் நாட்டிலேயே
  பல பேருக்கு அர்த்தம் புரியல.. ஹிந்தி, தெலுங்கு,
  இங்கிலீஷ்னு வந்தா .. ரிலீசுக்கு முன்னாடி அவங்க
  வாய்ல நுழையற மாதிரி படத்துக்கு பேர் மாறுமா?

  (படையப்பா படத்துக்கு அவ்விடே ஆந்திரால வேற
  பேர் இருந்து.. பக்ஷே இப்போ மறந்து போயி..)

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 2. Kesavan

  கடந்த வருடம், உங்கள் தளத்தில் திரு.ரஜினி அவர்களுக்கு தமிழ் எழுத படிக்கத் தெரியும் என்று ஒரு பின்னூட்டத்தில் பதிலளித்து இருந்தீர்கள். ஆனால், சமீபத்தில் உயிர்மை விழாவில் (எழுத்தாளர் திரு எஸ். ராவுக்கு எடுக்கப்பட்ட விழா) பேசிய ரஜினி அவர்களே, தனக்கு தமிழில் எழுத படிக்க தெரியாது எனக் கூறியதாக அனைத்து ஊடகங்களில் (விகடன் பத்திரிக்கை உட்பட) செய்தி வந்துள்ளதே. இது குறித்து நமது தளத்தில் ரசிகர்களுக்கு விளக்கம் தாருங்களேன்.

  நன்றி.
  ______________

  கேள்வி பதில் பகுதியில் எழுதுகிறேன்…

  -வினோ

 3. b dhanasanjayan

  thalaivar’s ( 80’s ) before Naanpottasaval.First tittle was “Vasoolchakravarthy” mind it please.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *