BREAKING NEWS
Search

அக்டோபரில் கோச்சடையான் இசை!

அக்டோபரில் கோச்சடையான் இசை!

சிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கும் கோச்சடையான் படத்தின் இசை வரும் அக்டோபர் மாதத்தில் வெளியாகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள படம் கோச்சடையான். மிக உயர்ந்த மோஷன் கேப்சரிங் மற்றும் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளன. இப்போது படத்தின் இசை வெளியீட்டுக்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர் கோச்சடையான் தயாரிப்பாளர் மற்றும் குழுவினர்.

இசை வெளியீட்டுத் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. செப்டம்பர் இறுதியில் வெளியாகக் கூடும் என்று முதலில் கூறியிருந்தனர். இப்போது வரும் அக்டோபர் மாதம் இசை வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இசைவெளியீட்டு விழா நடக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, நாயகி தீபிகா படுகோன், சரத்குமார் உள்பட நட்சத்திரப் பட்டாளமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறது. ஜெயா டிவி இந்த நிகழ்ச்சியை கவர் செய்கிறது.

படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். கே எஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் சௌந்தர்யா இயக்கியுள்ளார்.

படத்தின் புதிய ஸ்டில்கள் இந்த வாரம் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது!

-என்வழி ஸ்பெஷல்




2 thoughts on “அக்டோபரில் கோச்சடையான் இசை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *