BREAKING NEWS
Search

கோச்சடையான் ஸ்பெஷல் 2: டோக்கியோவில் ஆடியோ ரிலீஸ்… 12.12.12-ல் படம் ரிலீஸ்!!

கோச்சடையான் ஸ்பெஷல் 2: டோக்கியோவில் ஆடியோ ரிலீஸ்… 12.12.12-ல் படம் ரிலீஸ்!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் பட இசை வெளியீடு நடக்கப்போவது, இந்தியாவில் அல்ல… தமிழகத்துக்கு இணையாக தலைவருக்கு ரசிகர்கள் நிறைந்த ஜப்பானில். டோக்கியோவில் இசை வெளியீட்டை மிகப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஆடியோ வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அநேகமாக செப்டம்பர் இறுதியில் இசை வெளியிடப்படும் எனத் தெரிகிறது. ஏஆர் ரஹ்மான் இசையில், வைரமுத்து வரிகளில் 5 பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலை ரஜினியே பாடியுள்ளார்.

எந்திரன் இசை வெளியீட்டை மலேசியாவில் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துக்கு மத்தியில் சன் டிவி நடத்தியது குறிப்பிடத்தக்கது. இப்போது அதை விட அதிக நட்சத்திரங்கள் விழாவில் பங்கேற்கவிருக்கிறார்கள். இந்த இசை வெளியீட்டு வீடியோவும் அநேகமாக ஜெயா டிவியில் ஒளிபரப்பாகக் கூடும்!

12.12.12-ல் படம்?

படத்தை சூப்பர் ஸ்டார் ரஜியின் பிறந்த நாளான 12.12.12-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

நூறாண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் அபூர்வ தேதிகளில் ஒன்று இது. இந்த நாளில் உலகமே கொண்டாடும் அளவுக்கு படத்தை வெளியிடவிருக்கிறார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டனில் பிரிமியர்

இதுவரை ரஜினியின் எந்தப் படத்துக்கும் செய்யாத அளவுக்கு ‘விளம்பர திட்டமிடல்’ நடந்து வருகிறது, கோச்டையானுக்காக.

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு டோக்கியோவில் என்றால், படத்தின் சிறப்புக் காட்சிகள் லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், சிங்கப்பூர் போன்ற நகரங்களில் நடக்கவிருக்கிறது.

இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையில் பிரிமியர் ஷோக்கள் நடக்கின்றன.

-என்வழி ஸ்பெஷல்
16 thoughts on “கோச்சடையான் ஸ்பெஷல் 2: டோக்கியோவில் ஆடியோ ரிலீஸ்… 12.12.12-ல் படம் ரிலீஸ்!!

 1. vasanthan

  எல்லாம் திட்டமிட்படி நடந்து ,தலைவரின் பிறந்தநாள் அன்று எல்லோரும் அவர் பெயர் சொல்லவேண்டும் ,அதிவேக சேதி தந்த வினோவிற்கு நமது நன்றிகள்.

 2. Manoharan

  நான் இந்த தேதியைத்தான் எதிர்பார்த்தேன். ரஜினியின் பிறந்த நாளன்று அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த 12 .12 .12 ல் கோச்சடையான் ரிலீஸ் என்பது இரட்டை விருந்து.

 3. Manoharan

  நிச்சயம் எங்கள் ஊரில் 12 .12 .12 அன்று இரவு 12 .12 க்கு படம் தொடங்கும், ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கி கதிகலக்கும்.

 4. மு. செந்தில் குமார்

  மணி ஓசை வருகிறபொழுதே மகிழ்சியாக உள்ளது. யானை வருகிறபொழுது கேட்கவே வேண்டாம் கொண்டாட்டத்திற்கு.

 5. தேவராஜன்

  வருது வருது தலைவர் படம்
  ஒதுங்கு ஒதுங்கு இனி எங்க இடம்

 6. மிஸ்டர் பாவலன்

  //ரஜினியின் பிறந்த நாளன்று அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த 12 .12 .12 ல் கோச்சடையான் ரிலீஸ் என்பது இரட்டை விருந்து.// (மனோகரன்)

  இந்தியா எங்கும் மாணவர்கள் தேர்வு எழுதும் காலம் இது.
  ஆங்கிலத்தில் Term-2 அல்லது Half-Yearly Exams என்பார்கள்.
  இதனால் மாணவர்கள் மதிப்பெண் குறையும் அபாயம்
  உள்ளது. புத்தாண்டு ரிலீசாக வைத்துக் கொண்டால்
  யாவர்க்கும் நலம். நன்றி.

  -மிஸ்டர் பாவலன் (MP)

 7. மிஸ்டர் பாவலன்

  //@ Mr Pavalan Neenga eppo MP aneenga solaveyilla???///

  ரொம்ப நாளாவே நான் ஒரு “MP” தான். விளக்கம் கீழே தருகிறேன்:

  என் கருத்து ===> AK
  பிரசன்னா குமார் ==> PK
  மிஸ்டர் பாவலன் ==> MP

  ஹி..ஹி..ஹி..

  -பாவலன்

 8. kumaran

  தலைவர் ஆடம்பரத்தை விரும்பமாட்டார், அப்படி இருக்க ஏன் இவ்ளவு ஆடம்பரம்?

 9. Rajasekaran R

  ஆனால் இதுவரை தலைவர் படம் , அவர் அவதரித்த திருநாளில் வந்ததில்லை…. வந்தால் அது எனக்கு “______” எந்த மாதிரியான உணர்வு என்று தெரில… செய்கிறம் வரணும்…

 10. r.v.saravanan

  நூறாண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் அபூர்வ தேதிகளில் ஒன்று இது. இந்த நாளில் உலகமே கொண்டாடும் அளவுக்கு படத்தை வெளியிடவிருக்கிறார்கள்.

  தலைவரின் பிறந்த நாளில் வெளி வரும் கோச்சடையான் வரலாறு படைக்க வாழ்த்துக்கள்

 11. Raghul

  கொஞ்சம் பில்ட் -up ஓவர் போல தெரியுது. சௌந்தர்யா ௦ மேல நம்பிக்கை வரல்ல. பயமா இருக்கு.

 12. Raghul

  கொஞ்சம் பில்ட் -up ஓவர் போல தெரியுது. சௌந்தர்யா ௦ மேல நம்பிக்கை வரல்ல. (ர -one) பார்த்த பிறகு …. பயமா இருக்கு!?!?!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *