BREAKING NEWS
Search

கோச்சடையான் – தி லெஜன்ட் விமர்சனம்

கோச்சடையான் – தி லெஜன்ட் விமர்சனம்

Rajinikanth Kochadaiyaan Movie Latest Photos, Deepika Padukone Hot Photos in Kochadaiyaan Movie

டிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், நாசர், சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஷோபனா, நாகேஷ், ருக்மணி, ஆதி

இசை: ஏ ஆர் ரஹ்மான்

பாடல்கள்: கவிஞர் வாலி, வைரமுத்து

பிஆர்ஓ: ரியாஸ் அகமது

தயாரிப்பு: ஈராஸ் – மீடியா ஒன்

கதை, திரைக்கதை, வசனம்: கேஎஸ் ரவிக்குமார்

இயக்கம்: சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்

ந்திய சினிமாவுக்கு புதிய வாசலைத் திறக்கப் போகும் படம் என்ற கட்டியங்கூறி வந்துள்ள, சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தை விமர்சிப்பதற்கு முன்…

இத்தனை அழுத்தமான சரித்திரக் கதையை, எடுத்த எடுப்பில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் முழு நீள திரைப்படமாகவே தர முடியும் என்று நம்பி களமிறங்கிய சவுந்தர்யா ரஜினியை பாராட்டிவிடுவோம். ஆங்காங்கே கொஞ்சம் அமெச்சூர்த்தனம் இருந்தாலும் அசாதாரண முயற்சி. பெண்ணின் மன உறுதி மகத்தானதுதான்!

இந்த தொழில்நுட்பத்தில் தான் நடித்தால் என்ன மாதிரி விமர்சனங்கள் எல்லாம் எழும் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தும், ஒரு முன்னோடியாக நின்று நடித்த ரஜினி நிச்சயம் இந்தியத் திரையுலகின் பெருமைதான்!

சரி, கோச்சடையான் கதைக்கு வருவோம்.

ராணா ஒரு பெரும் வீரன். கலிங்காபுரி நாட்டின் படைத் தலைவன். அவன் படையுடன் போன இடமெல்லாம் வெற்றிதான்.

கலிங்காபுரியின் பரம விரோதி நாடு கோட்டைப்பட்டினம். இந்த நாட்டை ஜெயித்தால்தான் வெற்றி பூரணமாகும் என மன்னன் ராஜ மகேந்திரனிடம் (ஜாக்கி ஷெராப்) கூறுகிறான் ராணா.

அதை ஒப்புக் கொண்டு பெரும் படையோடு கோட்டைப்பட்டினம் நோக்கி கிளம்புகிறான் ராணா. செய்தி அறிந்து கோட்டைப்பட்டின படைகளும் இளவரசன் செங்கோடகன் (சரத்குமார்) மோதலுக்குத் தயாராகின்றன.

இரு நாட்டுப் படைகளும் பெரும் சமவெளியில் மோதத் தயாராகின்றன. அதற்கு முன் ராணாவும் செங்கோடகனும் சந்திக்கிறார்கள். திடீரென நண்பா என கட்டித் தழுவுகிறார்கள்… ராணாவுடன் வந்த சேனையில் முக்கால்வாசி கோட்டைப்பட்டினப் படையுடன் சேர்ந்து கொள்ள, மீதிப் படை கலிங்காபுரிக்கு திரும்பி ஓடுகிறது.

-இதுதான் கதையின் ஆரம்பம்… ஏன் இப்படி நடந்தது… தான் விசுவாசமாக இருந்த, தன்னை நம்பிய மன்னனை மாவீரன் ராணா ஏன் இப்படி ஏமாற்றினான் என்பதெல்லாம் மீதி ஒருமணி நேரக் கதை. அதைத் திரையில் பாருங்கள்!

Rajinikanth Kochadaiyaan Movie Latest Photos, Deepika Padukone Hot Photos in Kochadaiyaan Movie

படத்தின் கதை ரொம்ப எளிமையானது. ஒரு ஊர்ல ஒரு ராஜா..அவனுக்கும் அடுத்த நாட்டுக்கும் சண்டை வகைதான். ஆனால் அதில் பகைக்கும் பழிவாங்குதலுக்கும் காரணம் வைத்த விதம் நம்மை எளிதில் கவர்கிறது. ‘நம்மை விட திறமையானவனை அருகில் வைத்துக் கொள்ளக்கூடாது’ என்ற ஒரு மன்னனின் ஈகோ, அவன் ராஜ்யத்தை எந்த எல்லைக்குக் கொண்டுபோகிறது என்பதை அடுத்த பாதியில் கோச்சடையான் மூலம் சொல்லியிருக்கிற விதம் அருமை.

ரஜினியின் தோற்றம், அவரது உடல் மொழி, சின்னச் சின்ன உணர்வுகளைக் கூட சட்டென்று முகத்தில் காட்டியுள்ள விதம் எல்லாமே பிரமிக்க வைக்கிறது. அந்த அட்டகாசமான அறிமுகக் காட்சியில் தொடங்கி, கடைசி காட்சி வரை ரஜினிதான் படத்தில் பிரதானமாய் நிற்கிறார்.

ஆரம்பத்தில் சில காட்சிகளில் மோஷன் கேப்சரிங் காட்சிகள் கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும், ராணா ரஜினியின் முகம், நடனம், சண்டை என அனைத்திலும் நிஜ ரஜினியைப் பார்க்க முடிகிறது. செங்கோடன் அரசவையில் ரஜினி முதல் முதலாக நுழையும் போது அவர் காட்டும் எக்ஸ்பிரசன்கள் இது நிஜ ரஜினியா அவது நடிப்பு பதிவாக்கமா என யோசிக்க வைக்கிறது. கோச்சடையானாக ரஜினியைப் பார்த்ததுமே தியேட்டரே அதிர்கிறது. அதுவும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது, பாடலை ரஜினி படிக்கும் விதமும், தலை வெட்டுப்படும் காட்சியும் மனதை நெகிழ்த்துகிறது.

ரஜினி உருவத்தை வடிவமைத்ததில் தெரியும் சின்னச்சின்ன குறைகளைக் கூட சரிகட்டிவிடுகிறது அவரது காந்தக் குரல். என்ன ஒரு வசீகரம், கம்பீரம்!

நிச்சயம் அடுத்தடுத்த தலைமுறைகளிலும் ரஜினிக்கு ரசிகர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்!

ஜாக்கி ஷெராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி, ஆதி ஆகியோரில், ஆதிக்கு மட்டும் மோஷன் கேப்சரிங் பக்காவாக செட் ஆகிறது.

அடுத்தவர் நாசர். படம் முழுக்கவே வருகிறார், இவருக்கும் உடை, உருவ வடிவைப்பு பிரமாதமாகப் பொருந்துகிறது.

ராணாவின் நண்பராக வரும் சரத்குமாருக்கு இத்தனை முக்கியத்துவம் தேவையே இல்லை. அதிலும் அவருக்கும் ருக்மணிக்கும் ஒரு பாட்டு வேறு.

10308346_10152367755906544_8185100476075480266_n
படத்தின் இன்னொரு ஆச்சர்யம் நாகேஷ். அவரது உருவம், குரல், நகைச்சுவை அனைத்துமே அச்சு அசலாக உள்ளன. அருமை.

இந்தப் படத்தின் இரு பெரிய தூண்கள் ஏ ஆர் ரஹ்மானின் பாடல்கள் – பின்னணி இசை மற்றும் கேஎஸ் ரவிக்குமாரின் திரைக்கதை – வசனம்.

கதையின் அடிப்படையே அரசியல் என்பதால், அரசியல் சாணக்கியத்தனம், அரசியல் முத்திரை வசனங்கள் எல்லாம் ஆங்காங்க சர்வ சாதாரணமாக வந்து விழுகின்றன. பார்வையாளர்கள் முறுக்கேறி கைத்தட்டுகிறார்கள். கோச்சடையான் காட்சிகளில் வரும் முடிச்சுகள் சுவாரஸ்யமானவை.

சேனாவின் பாத்திரம் வரும்போது படம் முடிந்துவிடுகிறது. இரண்டாம் பாகம் பண்ணுவார்கள் போலிருக்கிறது.

படத்தின் ஆகப் பெரிய குறை என்று தேடினால், படத்துக்கான மோஷன் கேப்சரிங் வேலைதான். அதை மறுப்பதற்கில்லை. ரஜினியின் கண்களில் இருக்க வேண்டிய உயிர்ப்பு இல்லை.

பாத்திரங்களின் நடையில் இயல்பான வேகம் குறைந்து காணப்படுவது இன்னொரு குறை. ரஜினிக்கு அழகே அந்த வேக நடைதானே… அனாத்துப் பாத்திரங்களின் கால்களும் சற்று வளைந்த மாதிரியே இருப்பதை மோஷன் கேப்சரிங் குழு கவனிக்க மறந்தது ஏனோ? ரசிகர்களை விட தன் அப்பாவை அதிகம் பார்த்து ரசித்த சவுந்தர்யா எப்படி இதைக் கவனிக்காமல் விட்டார்?

இந்தப் படத்தை அவதார் மாதிரி நிஜ ரஜினி பாதி, மோஷன் கேப்சரிங் பாதி என்று எடுத்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு.

இருந்தாலும், இந்தப் படத்தின் இறுதியில் நெஞ்சை நெகிழ்த்துவது மாதிரி ரஹ்மான் குரலில் கர்ம வீரன் பாடல் ஒலிக்க, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரஜினி எப்படி நடித்தார் என்ற மேக்கிங் ஆப் கோச்சடையான் காட்சிகளை ஓட விட… ‘தலைவா…’ என அன்பின் மிகுதியால் ரசிகர்கள் எழுப்பும் ஒலி ஒன்று போதும் இந்தப் படத்தின் வெற்றியைப் பறைசாற்ற… ரசிகர்களின் மனசைப் படித்து வைத்திருக்கிறார்கள்!!

ஒரு முழுப் படத்தை இந்தத் தொழில்நுட்பத்தில் எடுத்திருப்பது அசாதரணமானது. அந்த வகையில் இந்திய சினிமா தனது பாரம்பரிய எல்லையைவிட்டு, புதிய தொழில்நுட்ப எல்லைக்குள் முதல் சில அடிகள் எடுத்து வைத்துள்ளது கோச்சடையான் மூலம். இந்த முயற்சி புதிய பரிமாணங்களை எட்ட வழிவகுக்கும்!

-எஸ் ஷங்கர்

நன்றி: தமிழ்.ஒன்இந்தியா
33 thoughts on “கோச்சடையான் – தி லெஜன்ட் விமர்சனம்

 1. chozhan

  நடு நிலையான விமர்சனமாக தெரிகிறது.

 2. Rajpart

  தங்களின் விமர்சனம் உண்மையிலேயே சரிதான். வேறொன்றும் யாரும் எதுவும் சொல்வதிற்கில்லை.கொச்சடையான் தலை துண்டிக்கும் பொழுது என்னை அறியாமல் கண்ணாடிக்குள் கண்ணீர்.அதுதான் படத்தின் வெற்றி.படத்தின் வருகைக்காக காத்திருந்த பல நாள் ஏக்கம் இன்று அதிகாலை தணிந்தது.சௌந்தர்யா ரஜினி ஜெயித்து விட்டார்.

 3. Nanda

  Excellent Review. I enjoyed the movie. I feel different experiance to watch this movie. Good treat for fans!

 4. r.v.saravanan

  விமர்சனதிற்கு நன்றி வினோ படம் சிறப்பாக வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி
  வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்

 5. Rajagopalan

  When thalaivar says Parthaya Engal Natin Radha Gaja Thuradha Padadhigalai in his magical voice, we are getting goose bumps…

  Thalaiva Edhu unnal Matume seya mudiyum…

 6. Rajagopalan

  Dont Mistake me Mr Shankar alias Vino

  But in Thats Tamil u had given only 3.5 only as rating…
  In Thats Tamil also Review was provided by you. Here you had provided some additional lines here which are not in thats tamil like
  ரஜினி உருவத்தை வடிவமைத்ததில் தெரியும் சின்னச்சின்ன குறைகளைக் கூட சரிகட்டிவிடுகிறது அவரது காந்தக் குரல். என்ன ஒரு வசீகரம், கம்பீரம்!
  நிச்சயம் அடுத்தடுத்த தலைமுறைகளிலும் ரஜினிக்கு ரசிகர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்! & the last para…

 7. M.MARIAPPAN

  இது தமிழ் ஒன் இந்தியாவின் விமர்சனம் என்வழி வினோவின் விமர்சனத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன் தலைவரின் கோச்சடையான் பல சாதனைகளை நிகழ்த்தும் . என்றும் தலைவரின் வெறியன் .

 8. venkat

  I saw the movie yesterday in new jersey. The crowd was full. My observations.

  First you have to be clear that it the movie is technology based not Human based. Being a hard core fan of Thalaivar it is very difficult to digest once you settle down for 20 minutes you are into the movie.

  1) Story still could have been interesting
  2) Music 9/10
  3) Technology 8/10(could have been 10/10 if budget is more)
  4) Thaliavar voice(what to say still the great magic)
  5) some characterisations could have been better for Jackie shroff and sharthkumar

  Nagesh character is beautifully done. Indeed Indian cinema has a long way to go on technology but this is a beautiful start.

  This is my review

  Regards,
  Venkat

 9. Sanjev

  நான் பர்மியர் ஷோ சென்றேன், USA நல்ல கூட்டம் மற்றும் வரவேற்பு.
  படம் மிக அருமை. Weekend will be full house i believe.

 10. நாஞ்சில் மகன்

  இது ஒரு டப்பா படம். பதிவை வெளியிடுங்கள் . இல்லை என்றால் இணையதளத்தில் இந்த அனிமேஷன் படத்தை பற்றிய எல்லா விமர்சனத்தையும் வெளியிடுங்கள். இந்த படம் 100 நாட்கள் ஒடும் என்றால் நான் தமிழ்நாட்டை விட்டே ஒடிப்போய் விடுகிறேன்.
  ____________

  நல்லது.. மூட்டை முடிச்சுகளுடன் தயாராக இருங்க.

  -என்வழி

 11. குமரன்

  அவன் படையுடன் போன இடமெல்லாம் வெற்றிதான்.

 12. குமரன்

  அண்மைச் செய்தி

  வரும் திங்கட்கிழமை மாலை பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலுக்கு முன் ரஜினியை மோடி சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அமிதாப், குஜராத் மாநில சுற்றுலாத்துறை தூதராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 13. Suresh

  படம் தாறுமாறு…… தீபிகா பகுதியே இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்து இருக்குலாம்.. அவங்க வர பகுதி மட்டும் ரொம்ப மெதுவா போறமாதிரி தெரியுது… இடைவேளைக்கு பிறகு உடனே வர பாடல் தேவை இல்லாத ஒன்ன்று… ஆனா எல்லாத்தையும் தலைவரோட குரல் ஒன்றே சரி கட்டிவிடுது….என்ன ஒரு பிரமாண்டம்…தலைவரோட நடை எவளோ அழகு…பார்த்து கொண்டே இருக்குலாம்.கிளைமாக்ஸ் பார்க்கும் போது எதோ ஆங்கில படம் பார்பது போல் உள்ளது..

 14. M.MARIAPPAN

  அய்யா நாஞ்சிள்மகன் உடனே தமிழ்நாட்டை விட்டு ஓடி போங்க , முதலில் புதிய முயற்ச்சியை பாராட்டுங்கள் . என்னடா உன் ரசனை . வயிறு எரியுதா நிறைய தண்ணீர் குடி .

 15. sivashanmugam

  இந்தப் படத்தை அவதார் மாதிரி நிஜ ரஜினி பாதி, மோஷன் கேப்சரிங் பாதி என்று எடுத்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு…….ITS TURE …….

 16. Suresh

  இந்த படத்தை பொம்மை படம் என்று சொல்பவர்களுக்கு…. இது ரஜினி’ன் பொம்மை படம் என்றே வைத்து கொள்வோம்.. ரஜினி’ன் பொம்மை படத்திற்கு எதிராக போட்டி போடா கூட இங்கு எவரும் இல்லை என்பது உண்மையாகிவிட்டது படம் ரிலிஸ் ஆனா பிறகு….தலைவரோட குரல் ஒன்றே போதும்….இந்த படத்தை மட்டும் வழக்கமான படமாக எடுத்து இருந்தால் படத்தோட வெற்றி எப்படி இருந்து இருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை…இதுவே 1000% வெற்றி ஆகிவிட்டது..தமிழ் சினிமாவின் மிகபெரிய மைல் கல் இந்த படம். கருப்பு வெள்ளை’ல் இருந்து மோசன் கப்சர் வரை நடித்து ஒரே நடிகன் தலைவர் மட்டுமே என்று நினைக்கிறன்..அந்த பெருமை இனி எவருக்கும் வராது..

 17. saktheeswaran

  பதவியில் இருப்பவன் எல்லாம் தலைவன் இல்லை உலக மக்களின் மனதை எவன் ஆளுகிறானோ அவனே உண்மையான தலைவன்
  ரஜினி உண்மையான தலைவர்

 18. veera

  படம் பிரமாதம் அனால் இதன் அடுத்த பகுதி “ராணா” live action இல் எடுக்க வேண்டும்,,, .. மற்றும் விமர்சனத்துக்கு நன்றி
  !!

 19. Srinivas

  Oru kozhandhai porandhone Amma nu kathardhu azhugaya ketkkum!! Adhukkapparam andha kozhandhai valara valara Amma nu nalla koopdum!! But andha kozhandhai porandhone azhardhu something special.. Apdi azhardhula quality paathu, illA Indha kozhandhai Amma nu sariya kathala nu yaarum solla maatom!! Adhu Madhiri India la porandha first animation kozhandhai dhan Thalaivar’s Kochadaiiyaan!! And hollywood’s avatar n tin tin LAam kozhandhai illA as they are not their first animation attempt !! Hollywood oda first animation kozhandhai Alaudin I guess !! Adha vida namma kozhandhai semaya kathirukku!! Chumma animation na korai Solradha vittutu padatha poi paarunga !! Korai solravanga paakadheenga .. Enna ippo!! The truth is Kochadaiiyaan opened the animation doors of Indian Cinema !! So Nolan and Cameron’s cousin brothers – Stay away

 20. Sanjai

  Plz I want to know box office record plz I’m waiting for your honest box office record thank you

 21. மிஸ்டர் பாவலன்

  ### BETTER LUCK NEXT TIME ###

  – மிஸ்டர் பாவலன்

 22. noushadh

  படத்தை 3d ல் பார்தீர்கள? எப்படி இருந்தது?

 23. BP

  Hope this is marketed so that younger generation is brought to theaters.
  Vino sir, what’s happening to market?
  want this movie to as successful

 24. srikanth1974

  சகோதரி சௌந்தர்யா அஷ்வின் சாதித்துவிட்டார்.
  அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

 25. மிஸ்டர் பாவலன்

  கோச்சடையான் படம் ஹிந்தியில் பெரிய தோல்வி என கேள்விப்பட்டேன்.
  AP, Karnataka, Kerala மாநிலங்களில் வசூல் சுமார் என கேள்விப்பட்டேன்.
  தமிழகத்தில் மட்டும் முதல் வாரத்தில் பெரிய வரவேற்பு இருப்பதாக
  தெரிகிறது. ரெண்டு வாரம் தாண்டினால் தான் Box Office நிலவரம்
  தெரிய வரும். இந்தப் படத்தை பார்த்த என் நண்பர்கள் படம் பெரிய போர்
  என்றும் தீபிகாவை சரியாக படத்தில் காட்டவில்லை என்றும் சொன்னார்கள்.
  ஜூன் மாதம் படம் பார்த்தால் கூட்டம் இல்லாமல் இருக்கும் என்பதால் நான்
  கோச்சடையான் படம் பார்ப்பதை ஒத்தி வைத்துள்ளேன்! நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 26. Thalaivar fan

  Wat a comedy…Better luck next time?? For whom?
  Kindly tell this to ur hero, as he need it the most.

  We dont need luck, if we got Thalaivar, duh..
  This time itself it’s gained mammoth success.
  Its a pity some ppl can digest the truth.
  There’s no next time for us, its alwayz everytime.

 27. boopathi

  ஏன் நம்ப தலைவரை 2016 நடக்கும் தேர்தலில் பிஜேபி முதல் அமைச்சர் ராக தமிழ் நாட்டில் மோடி அவர்கள் அறிவிக்கலாமே ?

  என்ன வினோ நான் சொல்வது ரைட் தானே ?

  அன்புடன்
  பூபதி.க

 28. M.MARIAPPAN

  Mr பாவலன் விஸ்வரூபம் பெரிய தோல்வி படம் , அதையே பெரிய ஹிட் என்று சொன்னீர்கள் . உங்களால் என்னடா இந்த படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆகிவிட்டதே என்று சீரணிக்க முடியவில்லை. என்றுமே தலைவர் ஒருவர் தான் உண்மையான உலக நாயகன் உண்மையான உலக SUPER STAR . என்றும் தலைவரின் முரட்டு பக்தன் .

 29. VETRI VEL

  unmayagave padam mudiyum vara vaaya moodalainga anga animationa pakkala thalavare nadicha madhiridhan paththenga nejamave thalaivardhanga MASS avarthanga BOSS

 30. Thalaivar fan

  Look whos talking..
  Ithu varaikkum yentha tamil herovum tamil naadu taandi hit padam kudukka mudiyala, ana yellam wood-ai miralla vecha thalaivarai padthi pesa madthum yellarum varuvangga.
  If u ask kamal fans opinions, of coz this is the crap u’ll get, mr.pavalan.
  Ippotan BO report vanthache..wat now??
  Kamal padathukku yevlo kudtham varuthu, mr.pavalan?
  Yethanai naal theatheril oodum?
  Its been more than a deacde since he got even 100 days but our thalaivar is silver jubilee material.
  Neenga padam parthatan yengey thalaivar padam odumnu illai. Wat a disgusting comment.
  Like actor, like fan. U showed ur true color.
  Kindly stay away from watching this movie and continue to jalra the shenanigans of ur hero.

 31. Elango

  இந்த படம் ஒரு நல்ல முயற்சி ….ஆனால் தோல்வியடைந்தது மனம் வருத்தமாகத்தான் இருகின்றது!

  என்னுடைய விமர்சனம் ரொம்ப எளிமை … ஒரு வேலை ரஜினி நடிக்காமல் ..வேறு ஒரு நடிகர் நடித்திருதால் ..என்வழியின் விமர்சனம் என்னவாக இருக்கோமோ அது தான் என் விமர்சனமும் 😀

  அவதார் எங்கே ….கோச்சடையான் எங்கே?
  புலிக்கும்….பூனைக்கும் …வித்தியாசம் தெரியாதா?
  தேவை இல்லாமல் ஓபிடாமல்… இதை ஒரு சராசரி முயற்சியாகவே …விட்டுருக்கலாம்!

  ஒரு வேலை …நிஜ ரஜினியுடன் ….நிழல் ரஜினியை உலா விட்டுருந்தால் நன்றாக இருந்திருக்கும்!

  Better Luck Next Time!
  லிங்கா வெற்றி பெற என் வாழ்த்துகள்!

  ஆனால் …மீண்டும் ரஜினி ஒரு ஆனதை ….பிறர் அவரை அவமானபடுத்துவது போன்ற பழைய பாணியில் படம் இருந்தால் …மீண்டும் இதே நிலை தான் …! ரோபோ போன்று அவர் வித்தியாசமான கதை அம்சமுள்ள படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்..வெற்றி உறுதி!

 32. Deen_uk

  @ பாவலன்..நீங்க முழு விஷம்.உங்களுக்கு உங்க தலைவர் மாதிரி சுத்தி வளைச்சு கருத்து சொல்றீங்க ஓகே.உங்களிடம் யார் கருத்து கேட்டது? ஏன் எங்க சைட்ல வந்து உங்க வயிதெரிச்சல் கொட்றீங்க?உங்க சைட்ல போய் நல்ல கலந்துரையாடல் பண்ணுங்க.உங்க சைட்ல உங்களை யாரும் சேர்த்து கொள்வது இல்லை போல.அதான் இங்க வந்து உங்க தலைவர் எழுதுற ஸ்டைல்ல கேவலமா பாட்டுங்குர perla அப்பபோ இங்க வந்து குப்பை கொட்டிட்டு போறீங்க..மேலும் உங்கள இங்க யாரும் நீங்க எப்போ கோச்சடையான் பார்பீங்கனு கேட்கல..பார்க்காம irunthaale santhosam..மேலும் உங்க பட வசூல் வரலாறு ஊரறிந்த விஷயம்..தயவு செய்து இந்த சைட் பக்கம் வர வேணாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *