BREAKING NEWS
Search

கோச்சடையான்….ஒரு பிரம்மாண்டத்தின் வருகை!

கோச்சடையான்….ஒரு பிரம்மாண்டத்தின் வருகை!

 

-தேவா சுப்பையா

 

BnFbNI8CUAEco_s.png large

டிப்போய் கிடக்கிறது தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை. இந்திய சினிமாவோ இன்னும் வரப்போகும் காலத்திலும் அசைக்க முடியாமல் உலாவப் போகிறதே இந்த உருவம் என்று அதிர்ந்து போய் கிடக்கிறது.

அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தங்களைத் தாங்களே அழைத்துச் சப்புக் கொட்டிக் கொண்டிருந்த நாயகர்கள் எல்லாம் பேயறைந்தது போல நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள் இப்போது.

காரணம் ரஜினி என்ற் பிம்பம் முதுமை என்னும் காலச் சக்கரத்திற்குள் கரைந்து போய்விடும் என்று மனப்பால் குடித்தவர்களுக்கெல்லாம் நவீனத்தின் உதவியோடு சம்மடி அடி கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டாரின் புதல்வி செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்…..

  ….கோச்சடையான்……

இது ஒன்றும் பத்தோடு பதினோராவதாக வரும் ஒரு தமிழ் சினிமாப்படம் கிடையாது. மோஷன் கேப்சரிங் என்பது உயரிய தொழில்நுட்பத்தை வைத்து குறிப்பிட்ட நடிக நடிகையர்களின் உடல் சலனத்தை துல்லியமாய் பதிவு செய்து அதை கணிணிப் படுத்தி விரும்பியபடி ஒப்பனையிட்டு, விரும்பிய இடத்தை எல்லாம் கற்பனையாய் வடித்தெடுத்து அதில் ரத்தமும் சதையுமாய் அவர்களை உலாவவிடுவது, கோச்சடையான் அப்படித்தான் ஒவ்வொரு ப்ரேமாக செதுக்கப்பட்டிருக்கிறது.

எந்திரன் படம் செய்த துவம்சத்தையே இந்திய சினிமா தாங்கிக் கொள்ள முடியாமல் ஆடிப்போயிருந்த போதுதான் சூப்பர் ஸ்டார் ராணா படத்தை அறிவித்து பூஜையும் போட்டார். ரஜினி இருக்கும் வரை அவருக்கு அடுத்து இரண்டாவது, மூன்றாவது ஏன் இன்னும் சொல்லப்போனால் நான்காவது ஐந்தாவது இடத்தில் கூட யாரும் நிற்க முடியாது என்பதை தமிழ் சினிமா ரசிகர்களை விட தெளிவாய் அறிந்து வைத்திருப்பவர்கள் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் இயக்குனர்களும்தான்….! அவர்களுக்குத்தான் தெரியும் ரஜினி என்னும் மாஸ் என்ன செய்யும்? ரஜினிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் எத்தகையது? வசூல் என்றால் என்ன? ரெக்கார்ட் ப்ரேக் என்றால் என்ன? பாக்ஸ் ஆபிஃஸ் கணக்கீடுகளை ரஜினி என்னும் நடிகன் எப்படி தூள் தூளாக்குவான் என்பதெல்லாம்…

அதனால்தான் ரஜினி படம் வெளிவரும் போது அதற்கு இணையாக வேறுபடத்தை வெளியிட எல்லோரும் அரண்டு போகிறார்கள் தமிழ் சினிமா வியாபாரிகள் அத்தனை பேரும். ஏனென்றால் ரஜினியின் படுதோல்விப் படம் என்று தமிழ் சினிமா கூறும் பாபா படத்தின் வசூலே இன்றைக்கு முன்னணி நடிகர் என்று கூறிக்கொள்ளும் ஒரு நடிகரின் சூப்பர் ஹிட் வெற்றிப் படத்தின் வசூலுக்கு இணையானதுதான் என்பதை யாரலும் நம்பமுடிகிறதா?

Kochadaiyaan Movie Latest Stills (1)
ராணா பூஜை போட்ட உடனேயே உடல் சுகமில்லாமல் போய்விட்டார் சூப்பர்ஸ்டார். இனி அவர் மீண்டு வருவாரா என்ற கேள்விகளை எல்லாம் கடந்து அவர் உயிரோடே இல்லை என்றெல்லாம் புரளிகள் கொடியவர்களால் பரப்பப்பட்டதை கேட்ட ரஜினி ரசிகர்கள் எல்லாம் துடி துடித்துதான் போனார்கள்.

ஏதாவது செய்வான் என்று எதிர்ப்பார்த்து ஒரு அரசியல் தலைவனுக்கு கொடிபிடித்து கோஷமிடும் ஒரு கலாச்சார வாழ்க்கைக்கு நடுவே ரஜினியிடம் எதையுமே எதிர்ப்பார்க்காத அவரது கோடாணு கோடி ரசிகர்கள் ரஜினி நலம் பெற வேண்டும் என்று அன்பின் மிகுதியில் அப்போது தீமிதித்தார்கள், காவடி எடுத்தார்கள், மண் சோறு சாப்பிட்டார்கள், தமிழகமெங்கும் மதமாச்சர்யங்களைக் கடந்து ரஜினி மீண்டும் வரவேண்டும் என்றெல்லாம் வழிபாடுகள் நடத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர் என்ற கலைப் பிம்பம் அரசியல் வாழ்க்கைக்கு வந்து முதல்வராய் அதிகார பலத்தோடு வலம் வந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டது, ரஜினி மீது தமிழக மக்கள் வைத்திருந்த பாசம். ரஜினி அரசியலுக்கு வந்து நின்றால் தெரியும் அவரது பலம் என்று சவால் விட்டு அறைகூவல் விடுக்கும் பலதரப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நடுவே ரஜினியின் ரசிகர்கள் இப்போதெல்லாம் ரஜினி அரசியலுக்கு வரவே கூடாது என்று நினைக்கவும் தொடங்கி இருக்கிறார்கள்.

அரசியல் பிரவேசம் பற்றிய தனது நிலைப்பாட்டை மிகத் துல்லியமாய் ரஜினி கூறியதைப் போல, இந்த நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு யார் வந்தாலும் நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டமும் இன்ன பிற  நடைமுறை சட்டங்களும் மக்கள் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு அவர்களை இயங்கவிடாது. தண்டிக்க ஒரு சட்டமும் தப்பிக்க பதினாறு வழிகளும் இருக்கும் சட்டங்களை வைத்துக் கொண்டு யாராலும் ஒரு மாற்றத்தையும் கொண்டுவரவும் முடியாது. இதை நாம் இந்தியா சுதந்திரமடைந்த தினத்திலிருந்து இன்று வரை நம் கண்கூடாகவே கண்டுகொண்டுதானிருக்கிறோம்.

ரஜினி சொன்னது போல அரசியல் புரட்சி ஒன்று ஏற்பட்டு நவீனகால சர்வதேச சமூகத்திற்கு இணையாய் நாம் திகழ வேண்டுமெனில் அடிப்படையில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். அது ஏற்படாமல் தலைமைப் பொறுப்புக்கு வரும் யாராலும் மிகப்பெரிய சமூக மாற்றத்தை கொண்டுவர இயலாது என்பதாலும் இத்தகைய நெருக்கடியான ஒழுங்குகள் கொண்ட, ஒரு வரையறைகள் கொண்ட அரசியல்வாதியாய் இருந்து மனநிம்மதியை இழந்து அலைவதை விட தனக்கு கிடைத்திருக்கும் பணத்தையும் புகழையும் கொண்டு மனதிருப்தியோடு உதவிகள் செய்து வாழ்ந்து முடிக்கலாம் என்று ரஜினி நினைத்ததின் விளைவே அவரை அரசியலில் ஈடுபடமால் இருக்க வைத்தது.

பணம், புகழ், அதிகாரம், குடும்ப வாழ்க்கையில் வெற்றி என்று எல்லாவற்றிலும் சாதனைகள் புரிந்த ஒரு மனிதன், இது எல்லாம் எதுவும் கிடையாது என்று ஆன்மீகத்தின் மூலம் அறிந்து, தான் யார்? இந்த வாழ்க்கை எவ்வளவு நிலையானது என்றெல்லாம் புரிந்த பின்பு….ஆதாய அரசியல் சூழ் உலகிற்குள் நுழைய விரும்புவாரா என்ன…?

அரசியல்வாதிகள் அவர்கள் செய்யும் அரசியலால் எதை எதை அடைய விரும்புகிறார்களோ அல்லது விரும்பினார்களோ அதை எல்லாம் தன் காலுக்கடியில் போட்டு மிதித்து விட்டு இயல்பாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினியை ‘சகாப்தன்’ என்று கூறாமல்வேறு யாரை சகாப்தன் என்று கூற முடியும்?

கோச்சடையானில் ரஜினி நடிக்கவே இல்லை… வேறு யாரோ நடித்து ரஜினி போல முகமாற்றம் செய்யப்பட்டது, ரஜினி கோச்சடையான் படம் ஓடவேண்டும் என்பதற்காகத்தான் ட்விட்டருக்கு வந்திருக்கிறார், ரஜினிக்கு கோச்சடையான் படத்தை வெளியிட பயம்.. என்றெல்லாம் அவதூறு பேசும் பதர்களே, ரஜினி என்ற ப்ராண்ட்டை வைத்துக் கொண்டு அவர் இல்லாமலேயே இன்றைக்கு சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை லட்சம் பேர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ரஜினியைப் பற்றி பேசுவதால் உங்களை சலிப்புடன் பார்த்துக் காறித் துப்புவதற்கு கூடும்  கூட்டம்  மட்டும் பார்த்தாலே அவரது படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்பது உங்களுக்குத் தெரியுமா..?

இதோ இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுதும் கோச்சடையான் ஜுரம் பிடித்து ஆட்ட ஆரம்பித்து விட்டது. மே 9 ரிலீஸ் என்று கேள்வி பட்டு பதினைந்து நாட்கள் முன்னதாகவே தியேட்டர்களைச் உலகமெங்கும் சூழ ஆரம்பித்து விட்டனர் அவரது ரசிகர்கள். கோச்சடையானைப் பற்றி பேசாத இந்தியர்கள் யாருமே கிடையாது. இந்திய மீடியாக்கள் அதிர்கின்றன…..தியேட்டர்கள் விழாக்கோலம் பூணத் தொடங்கி விட்டன…ரசிகர்கள் ஆர்ப்பரிக்கத் ஆரம்பித்து விட்டனர்!

சுமார் நான்காண்டுகளுப் பிறகு ரஜினி என்னும் ‘மாஸிவ் ப்ளாஸ்ட்’டை தியேட்டரில் அனுபவித்து ரசிக்கும் சுகத்திற்காக கிறங்கிப் போய் கிடக்கும் இத்தனை கோடி ரசிகர்களையும் எப்படி வசியப்படுத்தினார் ரஜினி என்பது படைத்த கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

கோச்சடையான் என்னும் சலன வரைகலையில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரஜினிக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே ஒரு மைல் கல்லாவதோடு மட்டுமில்லாமல் ரஜினி ரசிகர்களுக்கு தீராத வரப்பிரசாதமாய் அமையப்போகிறது. நாம் கண்டு அனுபவித்த ரஜினி என்னும் காந்தத்தின் ஸ்டைல் மேஜிக்களை நவீன தொழில்நுட்பம் காலங்கள் கடந்தும் நம் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல இருக்கிறது!

ரஜினி என்ற பிம்பம் காலத்தால் அழியாததாய் நிலை நிறுத்தப்பட்டு இதே மோஷன் டெக்னாலஜி என்னும் தொழில்நுட்பத்தால் ஓராயிரம் கோச்சடையான்கள் உருவாக்கப்பட்டு இந்திய சினிமா வரலாற்றின் இதிகாச நாயகனாய் ரஜினி என்றென்றும் வாழத்தான் போகிறார்.

அதோடு  மட்டுமில்லாமல் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் மனிதன் ஒரு கண்டக்டராய் தன் வாழ்க்கையை ஆரம்பித்து எவரின் உதவியுமின்றி இந்திய சினிமாவில் அழிக்க முடியாத ஒரு சக்தியாய் நின்றதற்குப் பின்னால் அவர் கடந்து வந்த வேதனைகளும் வலிகளும், அவமானங்களும், கடுமையான உழைப்பும் கோடாணு கோடி பிள்ளைகளுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாய் நின்று வாழ்வின் பல உயரங்களை அவர்கள் தொடவும் உதவத்தான் போகிறது….

மே 23 வரை காத்திருங்கள் கோச்சடையானின் அதிரடிக்காக!!

-என்வழி ஸ்பெஷல்

 

deva-subbaiyaகுறிப்பு: இணையத்தில் எழுதிவரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களில் குறிப்பிடத்தக்கவர் தேவா சுப்பையா. சுவாரஸ்யமான எழுத்துநடை கைவரப் பெற்றவர்.

சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர். இப்போது துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் அலுவலக மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

இவரது வலைப்பூ: http://maruthupaandi.blogspot.com
33 thoughts on “கோச்சடையான்….ஒரு பிரம்மாண்டத்தின் வருகை!

 1. saranya

  “இது ஒன்றும் பத்தோடு பதினோராவதாக வரும் ஒரு தமிழ் சினிமாப்படம் கிடையாது” அதை விட கேவலமா நினைக்கிறாங்க

 2. saranya

  “அதனால்தான் ரஜினி படம் வெளிவரும் போது அதற்கு இணையாக வேறுபடத்தை வெளியிட எல்லோரும் அரண்டு போகிறார்கள் தமிழ் சினிமா வியாபாரிகள் அத்தனை பேரும்.” தோ வருதே சந்தானம் ஓட படம். நம்ம படம் தான் வரல

 3. saranya

  “தண்டிக்க ஒரு சட்டமும் தப்பிக்க பதினாறு வழிகளும் இருக்கும் சட்டங்களை வைத்துக் கொண்டு யாராலும் ஒரு மாற்றத்தையும் கொண்டுவரவும் முடியாது. ” நல்ல வரிகள்

 4. Varadhu

  ரஜினியைப் பற்றி பேசுவதால் உங்களை சலிப்புடன் பார்த்துக் காறித் துப்புவதற்கு கூடும் கூட்டம் மட்டும் பார்த்தாலே அவரது படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்பது உங்களுக்குத் தெரியுமா..? – இந்த வரிகளை படிக்கவில்லையா சரண்யா அவர்களே ! உங்களின் வயித்தெரிச்சல் நீங்கள் தொடர்ச்சியாக போட்டிருக்கும் கமெண்டை பார்த்தாலே தெரிகிறது. எதற்கும் ஜெலுசில் – மாத்திரைகளை வாங்கி வைத்து கொள்ளுங்கள் .

 5. makkal neyam.. noble.t

  அருமையான பதிவு திரு.தேவ சுப்பையா அவர்களே, நேர்மறை சிந்தனைக்கும்,நேர்மையான விளக்கத்திற்கும் தலைசீர் வணக்கங்கள். மக்கள் நேயம் தங்களை மனதார வாழ்த்துகிறது. நன்றிகள்.

 6. murugan

  நண்பர் தேவா சுப்பையா அவர்களே
  சற்றே துவண்டு போன எங்களுக்குள் புது ரத்தம் பாய்ச்சி விட்டீர்கள்

  இறைவனை தரிசக்க வரிசையில் காத்திருக்கும் பக்தனுக்கு
  வரிசையின் நீளத்தை பற்றியும் தூரத்தை பற்றியும் கவலை எதற்கு?

  தாயை பார்க்கும் குழந்தைக்கு இருக்கும் பாசம் எத்தனை வருடங்களுக்கு பிறகு பார்த்த போதும் பிறந்த குழந்தை போல பீரிட்டு எழும்

  தொழில்நுட்பத்தில் ஒரு மயில்கல்லாய்
  சினிமா வரலாற்றில் ஒரு சாதனையாய்
  என்றென்றும் திகழப்போகும் நமது கோச்சடையானை வரவேற்க தயாராவோம்

  சொல்பவர்கள் ஆயிரம் சொல்லட்டும்
  தலைவரின் திரை உலக அனுபவத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை நாடறியும்
  இனி நிகழ்த்தப்போகும் சாதனைகளை தடுக்க எவராலும் முடியாது
  தலைவரின் சாதனையை முறியடிக்கும் ஒரு நபர் இந்த உலகில் உண்டு என்றால் அது நமது தலைவர் மட்டுமே

  வயித்தெரிச்சல் ஆசாமிகளுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது பட்டாலும் விளங்காது
  இது போன்ற விஷ ஜந்துகளுக்கு விளங்கவைப்பது நமது வேலை அல்ல

  இருந்தபோதிலும் நமது அமைதியையும் பொறுமையையும் ரொம்பவே சோதிக்கும் இது போன்ற அறிவிலிகளுக்கு உங்களைபோன்றவர்களின் சம்பட்டி அடி தேவை தான்

  தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

  பொறுமை கொள்
  தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம்
  அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்

  எங்கள் கோச்சடையானே
  விரைந்து வருக
  விருந்து தருக

  வழிமேல் விழிவைத்து காத்திக்கும் கோடானு கோடி ரசிகர் கடலின்

  ஒரு துளி !!!

 7. saranya

  @Varadhu நான் ஒன்றும் வைதேரிச்சலில் பேசவில்லை. எனக்கு வைதேரிச்சலும் கிடையாது. நீங்கள் கொடுக்கும் இத்துப்போன gelusilum தேவை கிடையாது. படம் release ஆகலையேன்னு தான் என் வயிறு எரியுது. இதெல்லாம் அவர்களுக்கு முன்னாடியே தெரியாதா. எல்லாத்தையும் முடிச்சிட்டு தானே release date யை சொல்ல வேண்டும். ஏற்கனவே இந்த படத்த சுத்தி பல கட்டு கதைகள் ஓடிட்டிருக்கு. இதுல கடைசி நேரத்துல postpone பண்ணா என்ன விளைவுகள் வரும் என்று இவர்களுக்கு தெரியாதா? நானும் ரஜினி பேன் தான். அவர் கேட்டால் உயிரையும் கொடுக்க துனிபவள் தான். வெளில என்ன நடக்குதுன்னு தான் நான் சொன்னேன். அதே சமயம் தப்பு செய்யும்போது திட்டுவது தவறில்லையே.

 8. Rajagopalan

  Whatever you say… its a dissaponitment for not releasing…
  Dissapointed …Eagerly booked tickets…:(

  Thalaiva sikiram vanga….

 9. srikanth1974

  இன்று படம் வெளியாகாமல் போனதால் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு
  ஆறுதல் சொல்லும் வகையில் திரு.தேவா சுப்பையா அவர்களின் எழுத்து
  அமைந்திருந்தது.திரு.தேவா சுப்பையா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  மேலும் நான் என்னென்ன கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என
  நினைத்திருந்தேனோ அதைவிட பல மடங்கு அற்புதமான கருத்துக்களை
  திரு.முருகன் அவர்கள் பகிர்ந்துள்ளார்.அந்த அன்பு நண்பருக்கும்,எனது
  வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  ஸ்ரீகாந்த்.

 10. s.sudha

  கொஞ்சம் disappoint தான்.இருந்தாலும் தலைவர் படத்துக்காக எவ்ளோ நாள் வேன்னாலும் காத்திருப்போம்.

 11. மிஸ்டர் பாவலன்

  //அள்ளி கொடுத்தவர் M.G.R என்றால் அதை சொல்லிகொடுத்தவர் விஜயகாந்த் என்பார்கள்!///

  ஹி..ஹி..ஹி..ஹி..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 12. Ananth

  /*ஆடிப்போய் கிடக்கிறது தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை. இந்திய சினிமாவோ இன்னும் வரப்போகும் காலத்திலும் அசைக்க முடியாமல் உலாவப் போகிறதே இந்த உருவம் என்று அதிர்ந்து போய் கிடக்கிறது.*/

  என் மனதில் இருந்ததை அப்படியே சொன்னீர்கள். 🙂 இனி அடுத்த ரஜினி யாரும் இல்லை. அருமையான பதிப்பு

 13. நாஞ்சில் மகன்

  இன்று மே 9ம் தேதி படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் கூடுதல் பிரிண்ட் போட இருப்பதாலும், அனிமேஷன் வேலைகள் இருப்பதாலும் படத்தை மே 23ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக படக்குழு தெரிவித்தது. ஆனால் உண்மையான காரணம் அது இல்லை என்றும், படம் அதிகபட்ஜெட்டில் உருவாகி இருப்பதால் படத்தை விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் வாங்க மறுப்பதால் படம் தள்ளிப்போய் இருப்பதாக கூறப்படுகிறது.

  இதற்கிடையே கோச்சடையான் படம் கோடையை கோட்டை விட்டுள்ளது. எப்படி? கோச்சடையான், அனிமேஷன் படம் என்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக அனிமேஷன் படங்களுக்கு குழந்தைகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். தற்போது பள்ளிகளில் விடுமுறை விடப்பட்டு இருப்பதால் குழந்தைகள் மத்தியிலும் இப்படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும். ஆனால் பல்வேறு பிரச்னைகளால் இப்படம் தள்ளிப்போய் மே இறுதியில் ரிலீஸாக இருக்கிறது. அதன்பிறகு ஒரு வாரத்தில் பள்ளிகளும் திறக்க இருக்கிறது. இதனால் பெரிய கலெக்ஷ்ன் எதுவும் இருக்காது. ஆக இந்த கோடையை முழுமையாக கோட்டை விட்டுள்ளது கோச்சடையான்.

 14. Basha

  கவலையாக தான் உள்ளது ……… தலைவர் வளர்ச்சியை கண்டு கடப்புஅவோர் அதிகம்?

  இதற்கு தலைவரின் பதிலையே நினைத்து கொள்கிறேன்……..

  நண்பா எல்லாம் கொஞ்சம் காலம் ……. ஹி ஹி ஹி ஹி…….. எல்லாம் கண்டனது போகும்………

 15. Basha

  கவலையாக தான் உள்ளது ……… தலைவர் வளர்ச்சியை கண்டு கடப்புஅவோர் அதிகம்?

  இதற்கு தலைவரின் பதிலையே நினைத்து கொள்கிறேன்……..

  நண்பா எல்லாம் கொஞ்சம் காலம் ……. ஹி ஹி ஹி ஹி…….. எல்லாம் கடந்து போகும்………

 16. மிஸ்டர் பாவலன்

  நாஞ்சில் எழுதியதற்கு பதில் –>
  >> இன்று மே 9ம் தேதி படம் வெளியாவதாக இருந்தது.
  >>ஆனால் கூடுதல் பிரிண்ட் போட இருப்பதாலும், அனிமேஷன் வேலைகள் >>இருப்பதாலும் படத்தை மே 23ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக படக்குழு >>தெரிவித்தது. ஆனால் உண்மையான காரணம் அது இல்லை என்றும்,
  >> படம் அதிகபட்ஜெட்டில் உருவாகி இருப்பதால் படத்தை
  >> விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் வாங்க
  >> மறுப்பதால் படம் தள்ளிப்போய் இருப்பதாக கூறப்படுகிறது.

  நான் கேள்விப்பட்டதும் இது தான். ‘விறுவிறுப்பு’ என்ற இணைய தளத்தில்
  இதே போல் ஒரு கட்டுரை படித்தேன். (http://viruvirupu.com/2014/05/08/68834/ )
  இந்தப் படம் பெரிய அளவில் ஓடும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாதது
  போல் தியேட்டர் ஓனர்கள் இடம் தெரிகிறது..

  //இதற்கிடையே கோச்சடையான் படம் கோடையை கோட்டை விட்டுள்ளது. எப்படி? கோச்சடையான், அனிமேஷன் படம் என்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக அனிமேஷன் படங்களுக்கு குழந்தைகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். தற்போது பள்ளிகளில் விடுமுறை விடப்பட்டு இருப்பதால் குழந்தைகள் மத்தியிலும் இப்படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும். ஆனால் பல்வேறு பிரச்னைகளால் இப்படம் தள்ளிப்போய் மே இறுதியில் ரிலீஸாக இருக்கிறது. அதன்பிறகு ஒரு வாரத்தில் பள்ளிகளும் திறக்க இருக்கிறது. இதனால் பெரிய கலெக்ஷ்ன் எதுவும் இருக்காது. ஆக இந்த கோடையை முழுமையாக கோட்டை விட்டுள்ளது கோச்சடையான்.//

  முற்றிலும் உண்மை. ‘விறுவிறுப்பு’ கட்டுரையில் குறிப்பிட்டிருந்த
  ‘கடன் பார்ட்டி’ பிரச்சினைகள் மே 23-தேதிக்குள் சரிசெய்யப்பட்டால் நல்லது.

  லிங்கா படத்தின் கதையைப் பற்றியும் இணைய தளத்தில் சில
  வதந்திகள் உலவி வருகின்றன. அவை பொய்யாக இருந்தால் நல்லது.
  முல்லைப் பெரியாறு அணை கதை இன்றைய அரசியல் சூழ்நிலையில் பல
  பிரச்சனைகளை உண்டாக்கி விடும் என நினைக்கிறேன். நன்றி!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 17. saktheeswaran

  அருமையான பதிவு
  கடவுளை கண்டவனும் இல்லை
  ரஜினியை வென்றவனும் இல்லை
  இனி வெல்ல போகிறவனும் இல்லை

  ரஜினி காலத்தை வென்றவர்

 18. chenthil UK

  ரஜினியை பற்றி இளங்கோ சொன்னது எல்லோரும் கேள்வி படுவது தான் … பிரச்சனை என்னவென்றால்… ரஜினி இப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொருத்தரும் கற்பனை செய்து வைத்துள்ளனர்… ரஜினி என்பவனின் தனி பட்ட மனதிற்கு இவர்கள் எதிர்பார்ப்பு சமன் செயவிலையெனில் அவரை பற்றி தவறாக பேசுவதை பெருமை கொண்டவர்கள் தான் அந்த இன்னொரு தரப்பு… விஜயகாந்த் .. விஜய் .. விவேக் என்று compare பண்ணி பார்ப்பது சரியில்லை… அவர்கள் துறையில் ரஜினி அளவுக்கு சாதித்தவர் இல்லை… அவர்கள் நல்லது செய்வது பாராட்டுக்குரியது … அனால் ரஜினி செயவில்லை என்று சொல்லுவது அறியாமையை கூட இருக்கலாம்… எத்தனையோ பேர் ரஜினி வெளியில் தெரியாமல் செய்த உதவிகளை பேசி இருகின்றனர்… ஏன் அது அவர்களுக்கு தெரிவதில்லை… மீடியா ரஜினியை வைத்து வருமானம் பார்க்க வேண்டி… ஒரு சமயம் ரஜினி தான் கடவுள் என்று எழுதும் ஹிந்து, விகடன் … அடுத்து அவரை எதிரித்து கட்டுரை வெளியிடும்…அனால் அதுதான் மக்களிடம் பொய் சேருகிறது…. அனால் எதற்கும் கருத்து கூறாது தன் வழியில் செல்லும் அவரை பார்த்து இப்படி பேசும் ஒவ்வொருவரும் தன்னிலையில் தான் அந்த புகழோடு இருந்தால் என்ன செய்திருப்பார் என்று கற்பனை செய்தால் … ரஜினின் மகத்துவம் தெரியும்… என்டேர்டைன்மென்ட் என்பது கேவலமான தொழில் அல்ல…. வசதி அற்றவன் கூட சந்தோசமாய் இருக்க செய்வது தான் அவர் செய்து கொண்டு இருபது…. அரசியலுக்கு வந்து அவரால் செய்ய முடியாத கருத்துகள் மக்களுக்கு படத்தின் மூலம் எளிய மொழியில் சென்றடைய வைக்கிறார்… அரசியலில் கிடைக்காத சந்தோசம் தலைவரின் படம் பார்த்து கிடைப்பது எவ்ளவோ மேல்… மேலும் அவரில் பழைய பேட்டிகளில் எப்போதும் அவர் அரசியலில் வருவெஇன் என்று சொல்லியதில்லை… இது கேள்வி கேட்பவர் எபோதும் இந்த கேள்வியை கேட்பதால்… அவர் காலம் தான் பதில் சொல்லும் என்ற பதில் சொல்ல வெடிய கட்டாயத்தில் இருக்கிறார்… ஒரே கேள்வியை 35 வருடம் நம்மிடம் கேட்டாலும் நாமும் இந்த மாதிரி பதில் தான் சொல்லிருபோம்…

 19. மிஸ்டர் பாவலன்

  சரத்குமார் எதோ படம் தயாரித்து அதன் திருட்டு வி.சி.டி. வெளிவந்த போது
  முதல் ஆளாய் உதவி செய்ய நின்றவர் ரஜினி தான்..

  விஸ்வரூபம் படத் தொல்லையில் வீடை விற்கிறேன், நாடை துறக்கிறேன்
  என கமல் கிளம்பிய போது உதவிக் கரம் நீட்டியவர் ரஜினி தான்.

  அவர் செய்யாதது தான் சிலர் கண்ணுக்கு தெரிகிறது.
  அவர் செய்தது பலருக்கு தெரியவில்லை.

  கேப்டன் ரசிகர்களை நான் குறிப்பிடவில்லை..
  எம்.ஜி.ஆரையும் கேப்டனையும் ஒப்பிடுவது சரியில்லை..

  நன்றி, வணக்கம்!!

  -== மிஸ்டர் பாவலன் =-

 20. கணேசன் நா

  திரு. இளங்கோ அவர்களே,

  தாங்கள் இங்கே பாடும் விஜயகாந்த் துதி எங்களுக்கு பிடிக்கவில்லை. தங்களால் அதை நிறுத்த முடியுமா?

  முடியாது எனில், தாங்கள் தலைவரை விமர்சிக்க தகுதி இல்லை.

  ஏன் என்றால், இங்கே என்னை போன்ற சில ரசிகர்களின் விருப்பத்தை உங்களால் நிறைவேற்ற முடியாத போது, கோடானுகோடி ரசிகர்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் அவர் திருப்திபடுத்த அவகாசம் வேண்டும். அது எம்மைபோன்றவர்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரிந்தாலும், அதை ஏற்கமாட்டீர்கள்.

  ஒரு உண்மையான தொண்டன், தலைவர் ஏதேனும் தவறு செய்து இருந்தால், அதை சுட்டிக்காட்டலாம், ஆனால், இதை இப்படி தான் செய்து இருக்கவேண்டும் என்று சொல்வது எந்த கணக்கில் கொள்வது.

  விஜயகாந்த், சூர்யா போன்றவர்கள் செய்யும் சில உதவிகள் மீடியா மூலமாக பெரிதுபடுத்துகிறார்கள், ஆனால், தலைவர் செய்யும் பல உதவிகள், உதவி பெற்றவர்களால் மட்டுமே சில காலம் கழித்து தான் வெளியே தெரிய வருகிறது. இது உலகம் அறிந்த உண்மை.

  //*பிரச்சனையே அது தான் …கமலை போல் தெளிவாக நான் வரமாட்டேன் என்று சொல்லி இருந்தால் ….இதனை பழி பாவத்திற்கு ஆளையிருக்க வேண்டியதில்லை!*//
  ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், ரஜினியின் ஆதரவு யாருக்கு என்று அரசியல் கட்சிகளும், மீடியாக்களும் மட்டுமே பெரிதுபடுதுகிரர்கள். ஆனால், அவர், ஒரு சராசரி குடிமகனை போல தான், தானும் அமைதியாக அரங்கேறும் கூத்துக்களை பார்த்துவருகிறார்.

  ஒரு MLAவகவோ, அல்லது தன் சுயநலத்திற்காக கூட்டணி வைத்துக்கொண்டலோ, நாட்டை சீரமைக்க முடியாது என்பது அவருக்கு தெரியும். அதனால் தான், தனது பிறந்தால் விழாவின் போது, ஒரு கட்சியை, ஆட்சியில் அமர்த்துவதும், அகற்றுவதும், தொண்டர்களின் கையில் தான் உள்ளது என்று தெளிவுபடுத்தி விட்டார்.

  ஆக, உங்கள் தனிப்பட்ட விருப்பத்தை, ‘மக்களே’வின் விருப்பமாக இங்கே இட்டு கட்டாதீர்கள்.

 21. மிஸ்டர் பாவலன்

  லிங்கா படம் முல்லை பெரியாறு அணையை சொந்தப் பணத்தில்
  கட்டிக் கொடுத்த பென்னி குக் (Benny Cook) அவர்களின் வாழ்க்கையை
  சித்தரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்பா ரஜினி கேரக்டர்
  பென்னி குக் அவர்களின் சாயலிலும், படத்தின் கதை அவர் கட்டிய
  அணையை வைத்தும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது..

  இது வேண்டாத விபரீதம்! இந்த படம் வெளியானால் இது கேரளாவில்
  தடை செய்யப்படுவதுடன், கோச்சடையான் ரிலீசும் கேரளாவில்
  தடை செய்யப்படலாம். பின்னால் வரும் ரஜினி படங்களும் கேரளாவில்
  பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். கே. எஸ். ரவிகுமார் படத்தின்
  கதையை மாற்றி ஏதாவது காமெடியாக படம் எடுத்தால் நல்லது.
  அனைவரும் பார்க்கலாம், நன்றி!

  -=== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *