BREAKING NEWS
Search

கோச்சடையான் சிறப்பு செல்போன்கள் – சௌந்தர்யா ரஜினி வெளியிட்டார்

கோச்சடையான்  சிறப்பு செல்போன்கள் – சௌந்தர்யா ரஜினி வெளியிட்டார்

soundarya-rajinikanth-launches-kochadaiiyaan-karbonn-mobiles1

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் சிறப்பு மொபைல் போன்களை சௌந்தர்யா ரஜினி இன்று சென்னையில் வெளியிட்டார்.

ரஜினி – தீபிகா படுகோன் நடித்துள்ள 3 டி மோஷன் கேப்சரிங் படம் கோச்சடையான் – தி லெஜன்ட்.

இந்தப் படத்துக்கு கே எஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ள இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல்கள் வரும் மார்ச் 9ம் தேதியன்று ரஜினிகாந்த், அமிதாப் முன்னிலையில் வெளியாகிறது. சத்யம் திரையரங்கில் பலத்த பாதுகாப்புடன் இந்த விழா நடக்கிறது.

ஏப்ரல் 11-ம் தேதி கோச்சடையான் படம் உலகம் முழுவதும் 6000க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது. ஒரு திருவிழாவைப் போல இந்தப் படத்தின் வெளியீட்டைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

கோச்சடையான் படம் இந்திய சினிமா வரலாற்றில் புதிய தொழில்நுட்பத்தில்  உருவாகியுள்ள படம் என்பதால், அதனை கொண்டாடும் வகையில் கார்பன் மொபைல் நிறுவனம் 10 லட்சம் ஸ்பெஷல் மொபைல் போன்களை வெளியிட்டுள்ளது. ஒரு திரைப்படத்துக்காக இதுபோல மொபைல்கள் வெளியாவது இதுதான் முதல் முறை.

BhisFyTCQAA1g5j.jpg large

ரூ 2000 முதல் 5000 வரை

இந்த மொபைல் போன்களில் கோச்சடையான் ஸ்க்ரீன் சேவர், வால் பேப்பர்கள், ட்ரைலர்கள், பாடல்கள், பஞ்ச் வசனங்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும். இவற்றின் விலை ரூ 2000 முதல் ரூ 5000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோச்சடையான் டேப்களையும் கார்பன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த சிறப்பு மொபைல்கள் மற்றும் டேப்கள் வெளியிடும் விழா இன்று சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது. பெரிய அளவில் பிரமாண்டமாக நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த வெளியீட்டு விழா சத்தமின்றி, அதுவும் மீடியாக்களுக்குக் கூட அழைப்பின்றி நடத்தப்பட்டது.

soundarya-rajinikanth-launches-kochadaiiyaan-karbonn-mobiles_2

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினி முதல் மொபைல் போனை வெளியிட்டார். கார்பன் மொபைல் நிறுவனத்தின் சேர்மன் சுதீர் ஹஸிஜா பெற்றுக் கொண்டார்.

-என்வழி




4 thoughts on “கோச்சடையான் சிறப்பு செல்போன்கள் – சௌந்தர்யா ரஜினி வெளியிட்டார்

  1. S. RAVI

    வாழ்க இதய தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

  2. மிஸ்டர் பாவலன்

    இன்று நான் படித்த செய்தி ஒன்று:
    “கோச்சடையான்’ ரிலீஸ் தேதி முடிவாகவில்லை: செளந்தர்யா ரஜினிகாந்த்

    இது எதிர்பார்த்த செய்தி தான். விஸ்வரூபம்-2 கோச்சடையான் படத்திற்கு
    முன்னாள் வெளிவர வாய்ப்புக்கள் தோன்றியுள்ளது.

    -== மிஸ்டர் பாவலன் ==-

  3. Rajan

    //விஸ்வரூபம்-2 கோச்சடையான் படத்திற்கு
    முன்னாள் வெளிவர வாய்ப்புக்கள் தோன்றியுள்ளது//

    வெளி வர மட்டுமா இல்லை சீக்கிரம் வெளியேரவுமா ?????????

    சௌந்தர்யா சொன்னது “இசை வெளியீட்டின் பொது ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்பது தான் ”

    ராஜன்

  4. மிஸ்டர் பாவலன்

    பாவலன்:
    //விஸ்வரூபம்-2 கோச்சடையான் படத்திற்கு
    முன்னாள் வெளிவர வாய்ப்புக்கள் தோன்றியுள்ளது//

    ராஜன் பதில்:
    //வெளி வர மட்டுமா இல்லை சீக்கிரம் வெளியேரவுமா ?????????//

    ஹி.. ஹி.. ஹி.. 🙂 🙂 🙂

    உங்கள் நகைச்சுவை உணர்வைப் பாராட்டுகிறேன்!

    -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *