BREAKING NEWS
Search

கோச்சடையான் பாடல் கேட்பு நேரம்… அவங்க கேட்டா மட்டும் போதுமா?!

கோச்சடையான் பாடல் கேட்பு நேரம்!

BiBmytGCIAAQlZw

மீபத்தில் கோச்சடையான் படத்தின் பாடல்கள் சிலவற்றின் ஆடியோவைக் கேட்க தங்களுக்கு வேண்டப்பட்ட சில ஆங்கிலப் பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்து, பாடல்களைப் போட்டுக் காட்டியுள்ளார் சவுந்தர்யா ரஜினி.

பெரும்பான்மைப் பத்திரிகை மற்றும் மீடியாக்காரர்களுக்கு இந்தத் தகவலே தெரியாமல் பார்த்துக் கொண்டுள்ளனர் (கோச்சடையான் மாதிரி படத்துக்கு இந்த அணுகுமுறை நல்லதா என்பது சவுந்தர்யாவின் முடிவுக்கே விட்டுவிட வேண்டியதுதான்!!)

இந்த நிகழ்ச்சியில் கோச்சடையான் படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களை ஒலிக்க விட்டுள்ளனர். ஒவ்வொரு பாடலுக்கும் சவுந்தர்யா விளக்கமும் கொடுத்தாராம்.

மணப்பெண்ணின் சத்தியம் என்று தொடங்கும் பாடலை ரஜினி மனைவி லதா பாடியுள்ளார். அந்தப் பாடல் ஒலித்தபோது, ‘இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நான் கண்ணீர் விட்டு அழுதுவிடுவேன்’ என்றார் சவுந்தர்யா.

BiBkmi2CAAAJsKm

ரஜினி பாட்டு

ரஜினி பாடும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது பாடல், படத்துக்காக மட்டுமல்ல, வாழ்க்கையில் ஒவ்வொருக்கும் ரஜினி கூறும் அறிவுரை என்றார் சவுந்தர்யா. குறிப்பாக ரஜினி தன் ரசிகர்களுக்காகவே பாடிய பாட்டு என்று கூறியுள்ளார்.

ஏ ஆர் ரஹ்மானும் ரைஹானா பாடியுள்ள கர்ம வீரன் பாடல்,  அமரர் வாலி எழுதிய டூயட் பாடலான மெதுவாகத்தான்… போன்றவற்றையும் போட்டுக் காட்டினார்களாம்.

இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவும் பங்கேற்றுள்ளார்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *