BREAKING NEWS
Search

அக்டோபர் 7-ம் தேதி கோச்சடையான் ஒற்றைப் பாடல் வெளியீடு!

அக்டோபர் 7-ம் தேதி கோச்சடையான் ஒற்றைப் பாடல் வெளியீடு!

teassr-5o

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் ஒற்றைப் பாடலை வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியிடுகிறார்கள்.

இந்தியாவில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவான முதல் 3 டி திரைப்படமான ‘கோச்சடையான்’ ட்ரைலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 3 மில்லியன்களுக்கும் அதிகமான பார்வையாளர்களை மிகக் குறுகிய நாட்களுக்குள் பெற்றது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் வாங்கியிருக்கிறது.

படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருக்க, அக்டோபர் 7-ம் தேதி ஒரு பாடலை மட்டும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

‘எங்கே போகுதோ வானம்…’ என்று தொடங்கும் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். படத்தின் ஆரம்ப பாடலாக ஒலிக்கும் இப்பாடலை எஸ்.பி.பி. பாடியுள்ளார்.

படத்தின் மொத்தப் பாடல்களையும் சில நாட்கள் கழித்து வெளியிடப் போகிறார்களாம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதாக படத்தின் தயாரிப்பாளர் சில தினங்களுக்கு முன் கூறியது நினைவிருக்கலாம்.




6 thoughts on “அக்டோபர் 7-ம் தேதி கோச்சடையான் ஒற்றைப் பாடல் வெளியீடு!

  1. KUMARAN

    எங்க சார் போயிருந்தீர்கள் ? நம் தலைவரை அழைத்து அவமான படுத்திவிட்டார்கள் ! கேட்க யாருமே இல்லையா ?

  2. s.vasanthan

    ஜப்பான் தலைநகரில் வெளியிட்டால் மிகவும் சந்தோசம் ,தலைவா

  3. anbudan ravi

    இந்த பம்மாத்து வேலைகள் எல்லாம் தலைவர் படத்திற்கு எதற்கு? இப்பொழுது வரும் கத்துகுட்டிகளுக்குதான் இந்த மாதிரி விளம்பரங்கள் தேவை…..தலைவர் படத்திற்கு தேவையே இல்லை என்பது என் கருத்து.

    அன்புடன் ரவி.

  4. Mahendran

    ரவி அவர்கள் சரியாக சொன்னார்! இந்த தேவையில்லாத பில்ட் அப்பை எல்லாம் விட்டு விட்டு முழு ட்ரைலரை வெளியிட வேண்டும்!

    வினோ அவர்களே! இந்த கார்ட்டூன் படத்துக்கு 140 கோடி ரூபாய் செலவு என்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? ஏன் அதை பற்றி எதுவும் எழுதவில்லை? நம் நாட்டில் ஒரு அனிமேஷன் படம் இந்த அளவு வசூலிக்குமா?
    ரொம்ப நாட்களாகவே நீங்கள் எந்த புதிய கட்டுரையோ தலையங்கமோ எழுதியதாக நினைவில்லை! அது போக தலைவருக்கு சமீபத்தில் நேர்ந்த அவமதிப்புக்காக ஜெயலலிதாவை கூட நீங்கள் கண்டிக்கவில்லை!

    ஏன் இந்த தொடர் மௌனம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *