BREAKING NEWS
Search

அதிர வைக்கும் ஓபனிங்குடன் இன்றுமுதல் உலகெங்கும் 6000 அரங்குகளில் கோச்சடையான்!

அதிர வைக்கும் ஓபனிங்குடன் இன்றுமுதல் உலகெங்கும் 6000 அரங்குகளில் கோச்சடையான்!

Rajinikanth Kochadaiyaan Movie Latest Photos, Deepika Padukone Hot Photos in Kochadaiyaan Movie

கோச்சடையான்… படம் வருமா.. மீண்டும் தள்ளிப் போகுதாமே.. இன்னும் செட்டிலாகலையாமே… வரும் ஆனா வராது…

-இப்படியெல்லாம் சிலரால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்ட, இன்று உலகளவில் பாராட்டுகளைக் குவித்து வருகிற தலைவரின் கோச்சடையான்.. இதோ இன்று உலகெங்கும் 6000 ப்ளஸ் அரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியானாலும், உலகின் பல பகுதிகளில் பிரிமியர் ஷோவாக நேற்றே வெளியாகிவிட்டது. உலக சினிமா சவாலுக்கு இந்திய சினிமாவின் பதில் என சர்வதேச மீடியா பாராட்டு தெரிவித்துள்ளது.

படம் பார்த்த அத்தனை பேரும் ‘பிரமாதம்… இந்தப் படத்துக்காக இந்திய சினிமா பெருமைப்படுகிறது… ரஜினி, தீபிகாவின் நடிப்பு அற்புதம், சண்டைக் காட்சிகள் மிரட்டுகின்றன..’ என்று பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் பாராட்டு ஒரு பக்கம் என்றால், படத்துக்கான வெளிநாட்டு மீடியா விமர்சனங்கள் படத்தை ஓஹோ என தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன.

500 ப்ளஸ் அரங்குகள்

தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கோவை, திருநெல்வேலி பகுதிகளில் மட்டும் குறைவான அரங்குகள்தான் நேற்று வரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தன. இது அப்பகுதி ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

BoP1PigIIAISc1y

ஆனால் வெளிநாடுகளிலிருந்து வந்த சாதகமான விமர்சனங்களைப் பார்த்த பிறகு, பல திரையரங்க உரிமையாளர்கள் படத்தைத் திரையிட முன்வந்துள்ளனர். தியேட்டர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு இந்தப் பகுதிகளில் 3டி வசதி கொண்ட அரங்குகள் இல்லாததும் ஒரு காரணம் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தெலுங்கில் விக்ரமசிம்ஹா என்ற பெயரில் கோச்சடையான் வெளியாகிறது. அங்கு இந்தப் படத்துக்கு கிட்டத்தட்ட 900 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்துடன் நாகார்ஜூனா நடித்துள்ள மனம் என்ற படம் அங்கே வெளியாகியுள்ளது. இந்த இரு படத்துக்குமே போட்டி சற்று கடுமையாகத்தான் உள்ளது.

இந்தியில் 1200 திரையரங்குகளுக்கும் அதிகமாக கோச்சடையான் வெளியாகிறது. மும்பை, டெல்லி, புனே, அகமதாபாத், கொல்கத்தா, குர்கான் போன்ற நகரங்களில் தமிழ் கோச்சடையானும் கணிசமான அரங்குகளில் வெளியாகிறது. இன்று அங்கு வெளியாகும் ஒரே இந்திப் படம் ஹீரோபட்னி. இதில் ஹீரோ யார் தெரியுமா.. கோச்சடையானில் நடித்துள்ள ஜாக்கி ஷெராபின் மகன்!

kochadaii-sri lanka

இலங்கையில்…

கோச்சடையான் வெளியீடு சென்னையில் களைகட்டியுள்ளது. ரஜினி படங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 80 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன சென்னையிலும் புற நகரிலும். மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் மொத்தமாக கோச்சடையானுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக மாயாஜால் தனது 16 அரங்குகளையும் கோச்சடையானுக்கு ஒதுக்கி, நாளொன்றுக்கு 100 காட்சிகள் நடத்துகிறது.

சென்னை மற்றும் புறநகர்களில் மட்டும் ஒரு நாளைக்கு 350 காட்சிகள் நடத்துகின்றன திரையரங்குகள். இது வேறு எந்த ஹீரோவும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத எண்ணிக்கை ஆகும். அதேநேரம், எப்போதுமே ரஜினி படங்களை வாங்கித் திரையிடும் சில அரங்குகள் இந்த முறை அமைதியாக நிற்பதையும் பார்க்க முடிகிறது.

உலகளவில்..

சர்வதேச அளவில் மட்டும் கோச்சடையான் 2500 அரங்குகளுக்கும் அதிகமாக வெளியாகிறது. அமெரிக்காவில் 250 ப்ளஸ் அரங்குகள், ஐரோப்பாவில் மட்டுமே 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கோச்சடையான் வெளியாகிறது. ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையில் வெளியாகும் ஒரே தமிழ்ப் படம் கோச்சடையான்தான்.

ரஜினி படங்களுக்கான முக்கியச் சந்தையாகத் திகழும் தென்னாப்பிரிக்காவில், அதிக அரங்குகள் இந்த முறை கோச்சடையானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

சீனா மற்றும் ஹாங்காங்கிலும் கோச்சடையான் சில அரங்குகளில் வெளியாகிறது. மலேசியா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் கோச்சடையான் நேற்றே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வளைகுடா நாடுகளில் 230க்கும் அதிகமான அரங்குகளில் கோச்சடையான் வெளியாகியுள்ளது.

Rajinikanth Kochadaiyaan Movie Latest Photos, Deepika Padukone Hot Photos in Kochadaiyaan Movie

இதுவரை எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இல்லாத பெரிய ஓபனிங் கோச்சடையானுக்குக் கிடைத்துள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் சிறப்புக் காட்சிக்காக வசூலான தொகையே பல கோடி என்று செய்திகள் வந்துள்ளன. அமெரிக்காவில் இந்தப் படத்துக்கு 25 முதல் 40 டாலர்கள் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

இப்போதைய நிலவரப்படி, கோச்சடையானுக்கு முதல் மூன்று நாட்களின் முடிவில் ரூ 100 கோடி வரை வசூலாகும் என கணக்கிட்டுள்ளனர் பாக்ஸ் ஆபீசில். அந்த சாதனையையும் படைப்பார் நம் கோச்சடையான் என்ற நம்பிக்கை உள்ளது.

-என்வழி




2 thoughts on “அதிர வைக்கும் ஓபனிங்குடன் இன்றுமுதல் உலகெங்கும் 6000 அரங்குகளில் கோச்சடையான்!

  1. Rajagopalan

    Seen the movie at 7 AM in Mayajal…
    Movie is good…Initial thought was whether the movie will be to much cartoon like stuff…
    But the movie is gr8…All can enjoy…
    Within Short Span of Time & budget, Kochadayan team had done the job neatly…
    Simple story… easy to understand… awesome dialogues to the core…… great war sequences… Good imagination from Soundarya.. particularly the war sequences…
    In the climax Thodarum Displayed… May be Rana in the offering based on the response to this movie…
    Good Family movie…
    But dont expect like Avatar….For Indian standards its really a great attempt & the whole team had passed successfuly…
    Hats off… Andavan epodhume thalaivan pakkam…

  2. Rajagopalan

    When thalaivar says Parthaya Engal Natin Radha Gaja Thuradha Padadhigalai in his magical voice, we are getting goose bumps…

    Thalaiva Edhu unnal Matume seya mudiyum…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *