BREAKING NEWS
Search

கோச்சடையான் வெளியீட்டையொட்டி ரசிகர்கள் புனித தீபம் ஏந்தி ஊர்வலம்!

கோச்சடையான் வெளியீட்டையொட்டி ரசிகர்கள் புனித தீபம் ஏந்தி ஊர்வலம்!

1526967_1501737863387077_1295247601_n

மே 22-ம் தேதி கோச்சடையான் வெளியாவதையொட்டி, ரசிகர்கள் நெல்லை உவரியிலிருந்து கொண்டுவரப்படும் புனித தீபத்துடன் சென்னை கிண்டியிலிருந்து ஊர்வலமாகப் புறப்படுகின்றனர்.

இந்த தீபச் சுடரை ரஜினி மனைவி லதாவிடம் ஒப்படைக்கின்றனர்.

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ள கோச்சடையான் படம் வரும் மே 23-ம் தேதி உலகமெங்கும் 6000 அரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இந்தப் படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

சைதை பகுதி ரசிகர்கள், மன்றத்தின் பொறுப்பாளர் சைதை ரவி மற்றும் நந்தம்பாக்கம் சண்முகப்பாண்டியன் தலைமையில், சென்னை கிண்டியிலிருந்து பிரமாண்ட ஊர்வலம் நடத்துகின்றனர்.

இந்த ஊர்வலத்தில் நெல்லை மாவட்டம் உவரியில் உள்ள சிவன் கோயிலிருந்து கொண்டுவரப்படும் புனித தீபச் சுடவை ஏந்தி ரசிகர்கள் ஊர்வலமாகச் செல்கின்றனர்.

கோச்சடையான் பிரமாண்ட வெற்றிக்காக பிரார்த்தனை செய்யப்பட்டு கொண்டுவரப்படும் இந்த ஜோதி, நெல்லை தொடங்கி, ஒவ்வொரு மாவட்டமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடைசியில்  மே 22-ம் தேதி மாலை சென்னையை வந்தடைகிறது. அசோக் நகரில் உள்ள உதயம் திரையரங்கம் வரை இந்த ஊர்வலம் நடக்கிறது.

இதில் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ராமதாஸ், சூர்யா மற்றும் ரவி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

பின்னர் அங்கு லதா ரஜினிகாந்த்திடம் புனித தீபச் சுடர் ஒப்படைக்கப்படுகிறது.

கோச்சடையான் வெளியாவதைக் கொண்டாடும் வகையில், மே 22-ம் தேதி சைதை பகுதி ரசிகர்கள் உதயம் திரையரங்கில் 100 அடி நீள ஜொலிக்கும் மெகா பேனர் அமைக்கிறார்கள். அதையும் லதா ரஜினி பார்வையிடுகிறார்.

-என்வழி




One thought on “கோச்சடையான் வெளியீட்டையொட்டி ரசிகர்கள் புனித தீபம் ஏந்தி ஊர்வலம்!

  1. இனியவன்

    நாளை எனது ஊரில் தீபத்தை வரவேற்க்கிறோம். எனது ஊர் பெரம்பலூர் மாவட்ட எல்லை. இவன் பாடாலூர் இனியவன் அன்பு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *