BREAKING NEWS
Search

மீண்டும் தள்ளிப் போகிறது கோச்சடையான்!

மீண்டும் தள்ளிப் போகிறது கோச்சடையான்!

unnamed

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் தரவேண்டிய கடன் தொகையை தராததால், படத்தை வெளியிடுவதை நிறுத்துவதாக விநியோகஸ்தர்கள் அறிவிக்க, அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவு நிறுத்தப்பட்டது.

கோச்சடையான் படம் நாளை மறுநாள் வெளியாகாது. வரும் மே-ம் தேதியன்று வெளியாகும் எனத் தெரிகிறது.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தினசரி ஒரு பிரச்சினையைச் சந்தித்து வருகிறது இந்தப் படம்.

அத்தனை நாள் இருந்த இடம் தெரியாமல் இருந்த தமிழ் சினிமா கூட்டமைப்பு என்ற ஒன்று, திடீரென முளைத்து படத்துக்கு எதிராக கொடிபிடிக்க ஆரம்பித்தது. தயாரிப்பாளர் முரளி மனோகரின் பழைய கடன்களையெல்லாம் அடைத்தால்தான் (ரூ 36 கோடி) கோச்சடையானை ரிலீஸ் பண்ணவிடுவோம் என்றார்கள்.

இந்தக் கடன்களெல்லாம் சூர்யாவின் மாற்றான் உள்ளிட்ட படங்களை முரளி மனோகர் வெளியிட்டதால் வந்தது. அதை கோச்சடையான் ரிலீஸின்போது கறந்துவிட வேண்டும் என்பதால் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தனர்.

அந்தப் பிரச்சினையை ஒருவழியாகப் பேசி படத்தை 9-ம் தேதியே வெளியிட முடிவு செய்து விளம்பரங்கள் வெளியாகின.

ஒரு பக்கம் திரையரங்க உரிமையாளர்கள் அதிக சதவீதம் வேண்டி பிரச்சினை செய்ய ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் விநியோகஸ்தர்கள் தங்களுக்கு தரவேண்டிய ரூ 36 கோடியை இப்போதே வைத்தாக வேண்டும் என நெருக்கடி கொடுக்க, கடைசியில் கோச்சடையான் அதற்கு பலியாகிவிட்டது.

இப்போதைய நிலவரப்படி, கோச்சடையான் படம் வரும் 9-ம் தேதி வெளியாகாது. வரும் 23-ம் தேதி வெளியாகும் என ரசிகர் மன்றங்கள் மற்றும் தியேட்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் தள்ளிப் போனது குறித்து விரைவில் அறிக்கை வெளியிட உள்ளனர்.

சமீப வருடங்களில் எந்தப் படத்துக்கும் நடக்காத அளவு படு வேகமாக இந்தப் படத்துக்கான முன்பதிவு நடந்தது.  இப்போது பட வெளியீடு தள்ளிப் போனதால், முன்பதிவு செய்யப்பட்ட தொகையை விரும்புபவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது 23-ம் தேதி வரை பொறுத்திருக்கலாம்.

கோச்சடையானுக்காக அனைத்து திரையரங்குகள் முன்பும் ரசிகர்கள் சார்பில் வைக்கப்பட்ட பிரமாண்ட கட் அவுட்டுகள், பேனர்களை ரசிகர்கள் இப்போது கழற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரமாண்ட திருமணம், கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது போன்ற ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

-என்வழி
12 thoughts on “மீண்டும் தள்ளிப் போகிறது கோச்சடையான்!

 1. jegan n

  dissapoited dissapointed dissapointed to the core.school leave mudinjapuram release Panni ena kidaika poguthu inime………thalaivar Ku sothanai meendum arampichuduchu

 2. anbudan ravi

  இதயம் நொறுங்கிவிட்டது தலைவா.

  அன்புடன் ரவி.

 3. jey_uk

  may 23rd is not good date to release as for collection in overseas, Godzilla and x-men releasing….cannot get many screen in overseas..

 4. குமரன்

  ஒரு படத்துக்கான பணத்தை இன்னொரு படத்தின் ரிலீஸின் போது வசூல் செய்வது என்பது அராஜகமான பிளாக் மெயில். திரைப் படத்துறையில் சங்கம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாகத் தமது காரியத்தைக் கவனித்துக் கொள்ளும் போக்கு பல காலமாகவே இருக்கிறது. ரெட் கார்ட் போடுவது என்பதை நீதிமன்றங்கள் தடை செய்ய வேண்டும். கமல் திரையைரங்கு உரிமையாளர்கள் மீது காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியாவிடம் வழக்குப் பதிந்ததைப் போல இப்போது தயாரிப்பாளர் பதிய வேண்டும்.

 5. குமரன்

  சங்கம் என்ற பெயரில் நடப்பது கட்டப் பஞ்சாயத்து. இப்படித்தான் அஜீத்தை கருணாநிதியின் பாசத் தலைவனின் பாராட்டு விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டியதற்கு அவர் அந்த மேடையிலேயே தைரியமாகப் போட்டு உடைத்ததும் அதற்குத் தலைவர் எழுந்து நின்று கை தட்டியதும் சரித்திரம். இந்தக் கட்டப் பஞ்சாயத்து முறை ஒழிந்தால் அன்றி விடிவு காலம் கிடையாது.

 6. Sheshank

  Hm…interesting, the official press release says technical difficulties for the delay!

  @jey_uk – I believe Godzilla is coming out next week in US.

 7. ganesh

  தங்க முட்டை ( கள்) போடுற வாத்து கதிதான்……
  ..
  ஆனால் கத்தி வச்சி விளையாடுறது தலைவரின் ரத்தம்……
  தலைவர் முகத்தில் மகிழ்ச்சி கொஞ்சம் கூட இல்ல …..
  🙁

 8. Rajagopalan

  boss whats happening?
  dissapointed to the core…
  why thalaivar not saying / doing anything?
  May 23rd not good date for not only overseas but hear also , All schools will reopen in june 1st week & also XMEN & Godzilla releasing…
  Surely collections will come down…
  All these distributors must not be given LINGA…
  All these guys when profit comes takes home but when loss occurs they want their money back…
  Really this is true தங்க முட்டை ( கள்) போடுற வாத்து கதிதான்……
  God please save thalaivar…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *