BREAKING NEWS
Search

டிசம்பர் 25-ம் தேதி கோச்சடையான் இசை வெளியீடு… நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கிறது!

டிசம்பர் 25-ம் தேதி கோச்சடையான் இசை வெளியீடு… நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கிறது!

teassr-5a
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீடு வரும் டிசம்பர் 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த விழா பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக அரங்கை முன்பதிவு செய்ததோடு, ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், திரைத் துறையினர், பொதுப் பிரிவினர் என அனைத்துத் தரப்பினருக்கும் அனுமதிச் சீட்டுகள் தயாராகி வருகின்றன.

முன்னதாக தலைவரின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி கோச்சடையான் இசை வெளியீட்டை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தின் இறுதி பிரிண்ட் தயார் செய்யும் பணிக்காக சவுந்தர்யா வெளிநாடு சென்றிருப்பதால், மேலும் இரண்டு வாரங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளது இசை வெளியீடு.

audio-kochadai
ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள கோச்சடையான் பாடல்கள் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளன. இதில் தமிழ் மற்றும் இந்தியில் ரஜினியே தன் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாடல் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போதுதான் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து இறுதி அறிவிப்பு வெளியாகும்.

-என்வழி ஸ்பெஷல்
27 thoughts on “டிசம்பர் 25-ம் தேதி கோச்சடையான் இசை வெளியீடு… நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கிறது!

 1. naveen

  சத்தியமாக சந்தோஷமாக இல்லை!!!! இன்னும் ஜவ்வாக இழுக்க வேண்டியது தானே!!! சத்தியமாக ரஜினி ரசிகனாக பிறந்ததில் வேதனையும் எமற்றமுமே அதிகம்

 2. Jey

  இந்த தேதியையாவது கடைசிவரை மாற்றாமல் இருந்தால் சரி. மாவீரன் வண்டி கிளம்பிவிட்டது! ஒதுங்கு ஒதுங்கு

 3. anbudan ravi

  தேதி மாறாது என்று நம்புவோமாக……மாறிக்கொண்டே இருந்தால் சுவராஸ்யம் முற்றிலும் குறைந்துவிடும்….தலைவர் படத்துக்காக காத்திருக்கும் கண்கள்.

  அன்புடன் ரவி.

 4. Rajan

  மிக்க நன்றி வினோ

  என்னடா படம் குறித்து செய்தியே இல்லை என்று காத்து இருந்தோம் .. நல்ல செய்திக்கு நன்றி ..

  சீக்கிரம் இசை வெளியீடு விழா முன் பதிவு குறித்தும் கூறுங்கள்

  தலைவர் தரிசனத்துக்கு காத்திருக்கும் பல கோடி பேரில் ஒருவன்

  ராஜன்.,

 5. மிஸ்டர் பாவலன்

  இந்தப் படத்தை குருவி ரசிகர்கள் கிண்டல் செய்வது எனக்கு
  கேட்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. படம் மாபெரும் வெற்றி அடைய
  செய்வது நாம் கொடுக்கும் நல்ல பதிலாக இருக்கும். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 6. sakthi

  அடுத்த தீபாவளிக்காவது படம் வந்தால் சரி…

 7. sims

  இது வரைக்கும் சௌந்தர்யா அவர்கள் ஆடியோ ரிலீஸ் பற்றியோ பட வெளியீடு பற்றியோ எதுவும் தெரிவிக்கவில்லை. ஒவ்வொருவரும் தாங்கள் அறிந்ததையும் ஊகிப்பதையும் வைத்துக்கொண்டு செய்தியைப் பரவவிடுகிறார்கள். அதைப்படிப்பவர்களும் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி புரிந்து கொள்ளாது ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்றி வைத்துள்ளார்கள்.நிலமை இவ்வளவு விபரீதமான பிறகு சௌந்தர்யா தரப்பு மௌனம் காப்பதில் அர்த்தம் இல்லை குறைந்தபட்சம் “வதந்திகளை நம்பவேண்டாம் நானே விரைவில் அறிவிக்கிறேன்” என்றாவது ஒரு Tweet செய்யலாம்.

  எல்வாவற்றுக்கும் மேலாக ரசிகர்களாகிய நாம் பொறுமை காப்பது முக்கியம். இத்திரைப்படம் புதியதொழில்நுட்பத்தில் தயாராகிறது. இதற்கு போதுமான அவகாசம் வழங்கப்பட்டால் மட்டுமே நாம் எதிர்பார்க்கும் தரத்தில் படத்தை வழங்கமுடியும். இதே அளவான Pressure ஜேம்ஸ் கமரூனுக்கும் வழங்கப்பட்டிருந்தால் அவதார் திரைப்படம் இதே அளவு தரத்தில் வந்திருக்குமா என்பது சந்தேகமே…

  ஆரம்பத்தில் படக்குழுவினர் செய்த தவறு கோச்சடையான அவதார் டின்டின் போன்ற திரைப்படங்களைப் போன்று வருகிறது என்று கூறியது. அவர்கள் கூறிய காரணம் வேறு நாம் பரிந்து கொண்டது வேறு. அவர்கள் கூறியது Performance Capture எனும் தெழில்நுட்பத்தை புரிய வைக்கவே. அன்றிலிருந்து நாம் கோச்சடையானை அவதாருடன் ஒப்பிட ஆரம்பித்து விட்டோம். உண்மையில் அவதார் படம் இலகுவானது ஏனெனில் 7 அடியில் நீல உருவத்தில் வினோதமான உருவை சிறிது தவறுகள் கூட அறியப்படாது. ஆனால் கோச்சடையான அப்படியல்ல ரஜினிகாந்த் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் அணுஅணுவாக தெரிந்து வைத்துள்ளனர். அவர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்வதில் அவசரம் காட்டக் கூடாது.

  பல ரசிகர்கள் தலைவர் மீதுள்ள பாசத்தினால் சௌந்தர்யா அவர்கள் தலைவர் படத்தை தோற்கடித்துவிடுவார்.தலைவரின் பெயரைக் கெடுத்து விடுவார் என்றெல்லாம் பலவாறு எழுதுகிறார்கள். தயவுசெய்து அப்படி எழுதாதீர்கள். தலைவரின் மகள் என்றால் எங்கள் குடும்பத்தில் ஒருவரல்லவா? உங்களின் சகோதரி அல்லவா? உங்கள் குடும்பத்திலிருந்து ஒருவர் புதியமுயற்சி செய்யும் போது இப்படித்தான் அவரை Discourage செய்வீர்களா? சிந்தியுங்கள் இது இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சி அது அவர்களுக்கும் தெரியும். சௌந்தர்யா அவர்களுடன் பக்கபலமாக இருந்து படத்தை மாபெரும் வெற்றியடைய செய்வது எமது கடமையாகும்.ரசிகர்களே தலைவர் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் போது அவர் தனது அப்பா மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பார்

  1000 ரூபா கொடுத்து படம் பார்க்கும் நாமே இவ்வளவு யோசிக்கும் போது 100 கோடிக்கு மேல் பணம் போடுபவர்கள் படத்தின் தரத்தைப் பற்றி யோசிக்காமலா போடுவார்கள்?

  மற்றவர்கள் படத்தைப்பற்றியோ தலைவரைப்பற்றியோ எது வேண்டுமானாலும் கிண்டல் அடிக்கட்டும் நாம் சௌந்தர்யா அவர்களுடனும் தலைவருடனும் பக்கபலமாக நின்று படத்தினை வரவேற்று மாபெரும் வெற்றியடையச் செய்வோம்…..

 8. Manoharan

  என்னைபொருத்தவரை ரஜினிக்கு இந்த படத்தின் வெற்றியில் சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. அதாவது ஒவ்வொரு படமும் அதற்க்கு முந்தைய படத்தின் வசூலை முறியடிக்கும். அதுதான் ரஜினி படங்களை பொருத்தவரை உண்மையான வெற்றி. ஆனால் கோச்சடையான் அதை செய்யுமா என்பதில் ரஜினிக்கே சந்தேகம் இருப்பது போல் தோன்றுகிறது. காரணம் இது மற்ற படங்களை போல் லைவ் படம் அல்ல. சொந்தர்யா முதலில் சொன்னபோது இப்படம் அவதார்,டின்டின் போல் மோசன் கேப்சரிங் படம் என்று சொன்னார். ஆனால் கிட்டத்தட்ட நம்மவர்கள் எல்லோருமே அவதார் படம் போல் இருக்கும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் டீசர் வெளியான பின் அது டின்டின் போல இருந்தது . அதாவது அவதார் படம் வேற்று கிரகத்தில் நடக்கும் கதை என்பதால் அதன் மோசன் கேப்சரிங் அனிமேசன் வேறு மாதிரி இருக்கும்.அதில் வரும் எந்த விஷயத்தையும் நாம் பார்த்ததில்லை என்பதால் அவதாரில் வரும் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் டின்டின் படத்தை ஒரிஜினல் மனித உருவத்தை மோசன் கேப்சரிங் டெக்னாலஜியில் அனிமேட் செய்து உருவாக்கியிருந்தார்கள். கோச்சடையானுக்கும் இதே டெக்னாலஜிதான். சொல்லப்போனால் அவதார்,டின்டின் இரண்டிலும் ஸ்டார் ஹீரோக்கள் இல்லை. அதனால் அவர்கள் வேலை கொஞ்சம் சுலபம். ஆனால் கோச்சடையானில் ஒரு பாப்புலர் ஹீரோவை திரையில் கொண்டுவருவதால் அவரின் முகபாவங்களை மக்கள் துல்லியமாக லைவ் படத்தில் இருப்பது போன்று இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இதுதான் பிரச்சனையே. உடல் மொழியை கொண்டுவரும் அளவுக்கு முகபாவங்களை கொண்டுவரமுடியுமா என்பது சந்தேகமே. டீசரில் ரஜினியின் நடையும் ,ஸ்டைலும் லைவ் படம் போலவே உள்ளது. ஆனால் அவர் சிரிப்பதும், பார்ப்பதும் இது ஒரு அனிமேசன் படம் என்பதை உணர்த்துகிறது. இது நம் மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துவிட்டது. இதை மக்களுக்கு படம் வருவதற்கு முன்னரே புரியவைக்கவேண்டும். அது சௌந்தர்யாவின் கையில் உள்ளது. நிறைய பேர் இதை பொம்மை படம் என்கிறார்கள். இது அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது. ஒன்று ஒரிஜினல், அப்படி இல்லாவிட்டால் அது பொம்மை இதுதான் நம்மவர்களின் பார்வை. ஆனால் இதற்க்கு நடுவில் இரண்டும் சேர்ந்த ஒன்று இருக்கிறது, அதுதான் இப்படம் என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். காரணம் இந்தியாவில் இதுதான் முதன்முறை. சொல்லப்போனால் ஆங்கில படங்கள் அல்லாமல் இதுதான் முதல் முறை. இந்த டெக்னாலஜியில்தான் இப்படம் வருகிறது என்பதை கடைக்கோடி ரசிகனும் புரிந்துகொண்டுவிட்டால் அல்லது புரிந்து கொள்ள விரும்பிவிட்டாலே இப்படம் மாபெரும் வெற்றியடையும். கதை,திரைக்கதை நன்றாக அமைந்துவிட்டலே மற்றது சுலபமாகிவிடும். டீசருக்கு கிடைத்த விமர்சனங்களை வைத்து படத்தை எடைபோட முடியாது. ஆனால் இது எல்லாவற்றையும் விட பிரச்சனை என்னவென்றால் படம் கொஞ்சம் சுமாராக இருந்தால் கூட ரஜினியை கீழே தள்ள சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,வருங்கால சூ……ஸ்டார்கள். கோச்சடையான் பொங்கலுக்கு வரும் என்று அறிவித்தபின்னரும் வீரம், ஜில்லாவின் அறிவிப்பு வருகிறது என்றால் என்ன அர்த்தம் ? இது அனிமேசன் படம்தானே, எடுபடுவது சந்தேகம், அப்படி எடுபடாவிட்டால் தங்களை தாங்களே முடிசூட்டிக் கொள்ளலாம் என்னும் பேராசைதான் . முடியை கட்டி மலையை இழுக்கலாம் ,வந்தால் மலை .போனால் முடி என்பதுதான் இரு அட்டக் கத்திகளின் எண்ணம். இதே லைவ் படமாக இருந்திருந்தால், அறிவிப்பு வந்தவுடன் துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடியிருப்பார்கள். ரஜினி ரிஸ்க் எடுத்துவிட்டார். இனி அதை பற்றி யோசிக்காமல் சரியான விளம்பரங்கள் மற்றும் படத்தை பற்றி சரியான பார்வையை ரசிகனிடம் சேர்த்துவிட்டால் இது எந்திரனை முறியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 9. Manoharan

  இந்த கமெண்டை போட்டவுடன்தான், உங்கள் முகனூலில் குறிப்பிட்ட லிங்கை படித்தேன். மற்றவர்களுக்காக ரஜினி வழி விட்டிருந்தால் சரிதான். ஆனால் அவர்கள் எண்ணம் வேறு மாதிரி இருக்கிறது.

 10. Basha

  ஈந்தாஆ முடிவு மிகவும் வருதாமாக இருக்கிறது…… சொன்ன சொன்னமாதிரி நடக்கணும் அதா தலைவர் Style

  That is missing I Feel So about My God film Statuss

 11. anbu patrison

  இ அம சுரேஷ் தட் ரஜினி டுக்த்டேர் வில் ஸ்பாயில் ரஜினி நேம் பெகுசே இன் ரஜினி பிலிம் லிஸ்ட் திஸ் is the பிரஸ்ட் பிலிம் தட் தே ஹவெ சங்கேத் டயஸ் இன் ஆல் ஆஸ்பெக்ட்ஸ் பிரோம் காஸ்செட்டே ரிலீஸ் டு மொவயே ரிலீஸ், வெயிட் அண்ட் சி, அபிடேர் திஸ் மொவயே ரஜினி நேம் வில் பெ ச்பொஇலெட் பி ஹேர் டுக்த்டேர், நோ பிளான் தென் வி தே ஆர் டெல்லிங் தட்ஸ் t

 12. anbu patrison

  i am sure that rajini daughter will spoil rajini name because in rajini film history this is the first film that dates has been changing, when trailer released they told one date, after that they told one date, now you r telling one date,see rajini is not telling any thing about this movie but assistant is telling all news, i am sure this is mega flop then baba.I am true heart rajini fan but this is not good news

 13. anbu patrison

  next X-mas, Next new year, next pongal, next republicday, next tamil newyear u all use all date for releasing CD and movie ok va or u can use 2015 year too…………… bad news

 14. sakthi

  தமிழ் சினிமாவில் ஒரு வியாதி…. படம் அட்டர் ப்ளாப் என்று அப்பட்டமாகத் தெரிந்த பிறகும், இதை பெருமை பீத்தலுக்காக 100 நாள் வரை ஓட்டுவது.

  இந்த ட்ரெண்டை தமிழில் ஆரம்பித்தது யாராக இருந்தாலும், அதிகமாகப் பயன்படுத்திய சாட்சாத் நம்ம விஜய்தான் (பேன்ஸ்ன்ற பேர்ல குதிக்காம, நிதானமா யோசிங்கப்பா!).

  முதன் முதலில் விஜய் நடித்த நாளைய தீர்ப்பில் ஆரம்பித்தது இந்த நூறு நாள் ஓட்டும் அழுகுணி ஆட்டம்.

  அப்போதெல்லாம் இதற்கென்றே நகரில் சில அரங்குகள் இருந்தன. மோட்சம், கிருஷ்ணவேணி, கமலா, இப்போது கோபிகிருஷ்ணா, ராதா… சில நேரங்களில் தேவி பாலா அல்லது கலா இவற்றில் ஏதாவது ஒரு உப்புமா படம் 100 நாள் காலைக் காட்சியாக ஓடி, அந்த ஆண்டின் நூறு நாள் பட லிஸ்டில் இடம் பிடித்துவிடும்.

  விஜய் நடித்த விஷ்ணு, தேவா, செந்தூரபாண்டி, மாண்புமிகு மாணவன், கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், ஒன்ஸ்மோர், நிலாவே வா, என்றென்றும் காதல் போன்ற படங்களின் நூறு நாள் ஓட்டம், மேற்கூறிய திரையரங்குகள் ஏதாவது ஒன்றில் நடந்திருக்கும்.

  விஜய் பெரிய நடிகராகி, சில்வர் ஜூப்ளி படங்களைக் கொடுக்க ஆரம்பித்த பிறகும்கூட இந்த பழக்கத்தை அவரால் அல்லது அவர் தந்தையால் விடவே முடியவில்லை. சச்சின் என்றொரு படம் வந்தது நினைவிருக்கலாம். அந்தப் படத்தை வீம்புக்காக கமலா தியேட்டரில் மட்டும் நூறு நாட்கள் ஓட்டினார்கள். நூறாவது நாளன்று அந்தத் தியேட்டரில் பதினாறு பேர்தான் இருந்தார்கள்.

  நூறாவது நாளிலேயே இந்த நிலை என்றால், அடுத்த நூறு நாட்கள் எப்படி இருந்திருக்கும்! காலக் கொடுமை… அப்படியும் இன்னும் நூறு நாட்கள் ஓட்டி, அதை இருநூறு நாட்கள் ஓடிய படமாகக் காட்டினார்கள்.

  இதோ இப்போது தலைவா படம்…

  இந்தப் படம் எப்படி வெளியானது என சினிமா ரசிகர்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான். வெளி மாநிலங்களிலெல்லாம் ரிலீசாகி, படம் தேறாது என எல்லோரும் ஒருமனதாக பிறகுதான் தமிழகத்தில் வெளியிட முடிந்தது.

  வெளியான முதல் வாரமே பெரும்பாலான திரையரங்குகளில் தூக்கிவிட்டார்கள். ஆனால் அசராமல் தரணியெங்கும் அதிரடி வெற்றி என்ற அறிவிப்போடு 10வது நாள் போஸ்டர் அடித்தார்கள். சென்னையில் நான்கைந்து அரங்குகளில் கூட ஓடாத நிலையில், ஏகப்பட்ட தியேட்டர்கள் பெயரைப் போட்டு மகத்தான 25வது நாள் என அடுத்த விளம்பரத்தையும் வெளியிட்டார்கள்.

  சரி இத்தோடு விட்டுவிடுவார்கள் என்று பார்த்தால், பேபி ஆல்பட் தியேட்டர் பெயரைப் போட்டு வெற்றிகரமான 50 வது நாள் என போஸ்டர்- பேப்பர் விளம்பரங்கள்!

  இந்த நிலையில்தான் படத்தை நூறு நாட்கள் ஓட்டாமல் விடப்போவதில்லை என்பதில் தீவிரமாக உள்ளார்களாம். அதாவது ஜனங்க பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் பணம் கொடுத்தாவது படத்தை நூறு நாட்கள் வரை ஓட்டுவது!

  விஜய் படங்கள் என்றல்ல… மக்களிடம் தோற்றுப் போன பெரிய நட்சத்திரங்களின் குப்பைப் படங்களை வெட்டியாக ஓட்டும் அத்தனைப் பேருக்குமே இந்த விமர்சனம் பொருந்தும்.

  எதுக்கு இதெல்லாம்…. பேசாம தியேட்டர் பெயரே போடாமல் (ரிலீசாகி) வெற்றிகரமான 100வது நாள்னு போஸ்டர் அடிச்சி ஒட்டிக்கிங்கப்பா!

 15. kumaran

  எப்ப வந்தாலும் எப்படி வந்தாலும் ஓகே தான்.

 16. குமரன்

  எத்தனை தடவைதான் தள்ளிப் போடுவார்கள்?
  இப்பவாவது வந்தால் சரி.

 17. rishi

  பொங்கலுக்கு படம் வெளியீடு அப்படின்னு அதிகாரபூர்வமான அறிவிப்பு கொடுத்தாங்களே தயாரிப்பாளர்கள் – உண்மையா?

  வீரம் ஜில்லா படம் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர்கள் குறித்து உங்கள் பதிவை எதிர்பார்கிறேன்.

 18. மிஸ்டர் பாவலன்

  //எத்தனை தடவைதான் தள்ளிப் போடுவார்கள்?
  இப்பவாவது வந்தால் சரி.// (குமரன்)

  கடைசியாக வந்த செய்திகளின் படி கோச்சடையான் படம்
  பொங்கல் ரிலீஸ் இல்லை. ஜனவரி இறுதியில் விஸ்வரூபம்-2
  படம் களம் இறங்குவதால் கோச்சடையான் ரிலீஸ் சிறிது
  தாமதம் ஆகலாம் எனப் பேசப்பட்டு வருகிறது.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 19. மிஸ்டர் பாவலன்

  மனோகரனின் துவக்கம்:
  “என்னைபொருத்தவரை ரஜினிக்கு இந்த படத்தின் வெற்றியில் சந்தேகம் இருப்பதாக தெரிகிறது.”

  மனோகரனின் முடிவு:
  “ரஜினி ரிஸ்க் எடுத்துவிட்டார். இனி அதை பற்றி யோசிக்காமல் சரியான
  விளம்பரங்கள் மற்றும் படத்தை பற்றி சரியான பார்வையை ரசிகனிடம்
  சேர்த்துவிட்டால் இது எந்திரனை முறியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.”

  இந்த படம் பற்றிய எல்லா முடிவுகளும் சௌந்தர்யா மூலம் நமக்கு
  மீடியாவில் வருவதால் குழப்பம் இருக்கிறது. படத்தின் trailer-ஐப்
  பார்த்தபின் கமல் ரசிகர்கள் படத்தின் வசூல் சாதனையைக் குறித்து என்னிடம்
  ஐயம் தெரிவித்தார்கள். எந்திரன் சாதனையை இது முறியடிக்கும் எனத்
  தோன்றவில்லை. ஆனால் நீங்கள் சரியாகக் குறிப்பிட்டது போல் ரிஸ்க்
  எடுத்து விட்டாலும் அதிகம் தாமதப் படுத்தாமல் வெளியிட்டால் நல்லது.
  நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 20. rajagopalan

  படம் கொஞ்சம் சுமாராக இருந்தால் கூட ரஜினியை கீழே தள்ள சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,வருங்கால சூ……ஸ்டார்கள். கோச்சடையான் பொங்கலுக்கு வரும் என்று அறிவித்தபின்னரும் வீரம், ஜில்லாவின் அறிவிப்பு வருகிறது என்றால் என்ன அர்த்தம் ? இது அனிமேசன் படம்தானே, எடுபடுவது சந்தேகம், அப்படி எடுபடாவிட்டால் தங்களை தாங்களே முடிசூட்டிக் கொள்ளலாம் என்னும் பேராசைதான் . – I ALSO AGREE WITH THIS…

  But how many days they will post pone the dates… What ia the real confusion going on?
  Iam also a Rajini fans & my friends also. But all lost hopes on this movie…
  Hope thalaivar starts another movie with KS Ravikumar or sHANKAR asap…

 21. ashok

  Dear Friends,
  Super star has the most success rate in flim industry, so he knows what to do with his flims. better be cool and enjoy the flim when it comes to screen. he is the brand ,who brings the audience to the theater only for his name . He don’t need any advertisement like other actors.

 22. Manoharan

  @ மிஸ்டர் பாவலன். ரிலீஸ் தேதி 100% உறுதியானால்தான் ரஜினி அதை தெரிவிப்பார். பார்ப்போம்.

 23. மிஸ்டர் பாவலன்

  மனோகரன் அவர்களே.. விஸ்வரூபம்-2 படத்தை பற்றி
  உங்கள் கருத்து என்ன? முதல் வாரம் தியேட்டரில் போய்
  பார்க்க ப்ளான் இருக்கா? விஸ்வரூபம்-1 படத்தை விட
  விஸ்வரூபம்-2 படம் அதிக விலைக்கு ஏரியாக்கள் விற்பதாக
  செய்திகளில் நான் படித்தேன். பெரும் பரபரப்பில் விஸ்வரூபம்-2
  வர இருக்கிறது. கோச்சடையான் வேறு நாளில் வெளி வர
  இருப்பதால் ஒரு பெரும் போட்டி தவிர்க்கப்பட்டு இருக்கிறது.
  நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 24. Manoharan

  @மிஸ்டர் பாவலன். படத்தின் ரிசல்ட் நன்றாக இருந்தால் முதல் வாரம் பார்ப்பேன். ஆனால் பெரும்பாலும் கமல் படங்களை நான் எதிர்பார்ப்பதில்லை. நடிகர்களில் ரஜினி படத்தை மட்டுமே எதிர்ப்பார்த்து பழகிவிட்டது. பார்ப்போம். நன்றி.

 25. மிஸ்டர் பாவலன்

  //@மிஸ்டர் பாவலன். படத்தின் ரிசல்ட் நன்றாக இருந்தால் முதல் வாரம் பார்ப்பேன். ஆனால் பெரும்பாலும் கமல் படங்களை நான் எதிர்பார்ப்பதில்லை. நடிகர்களில் ரஜினி படத்தை மட்டுமே எதிர்ப்பார்த்து பழகிவிட்டது. பார்ப்போம். நன்றி.// (மனோகரன்)

  நண்பர் மனோகரன் அவர்களே.. உங்கள் கருத்துக்கு நன்றி.
  கமல் ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ என்ற படம் ஒரு ஆங்கிலப்
  படத்தில் இருந்து கதை காப்பி அடிக்கப் பட்டு, ‘எந்திரன்’ படம்
  போல வியாபார முயற்சிகள் எடுக்கப் பட்டு, ‘ரஜினி intro’ போல
  ஒரு காட்சி அமைக்கப் பட்டு, ஹாலிவுட் நடிகை போல் த்ரிஷாவை
  ஹீரோயின் ஆக புக் செய்து, பல முயற்சிகள் எடுத்தும் ரிசல்ட்
  சரியில்லை. இரண்டு வாரம் கழித்து பார்க்கலாம் என இருந்தேன்,
  ஆனால் படமே தியேட்டரில் இருந்து தூக்கி விட்டார்கள்.
  ரஜினி படம் அளவிற்கு எதிர்பார்ப்பு கமல் படத்திற்கு இல்லை
  என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்! குமுதம் ரஜினி சிறப்பு
  இதழில் வைரமுத்து “விஸ்வரூபம்-2′ படத்திற்கு சிறப்பு பாடல்
  வரிகளை எழுதியுள்ளார். இந்த படத்தின் ‘intro’ பாடலும்
  விஸ்வரூபம்-1 படம் போலவே இருக்கிறது. நடுவில் வரும்
  சில வரிகள் மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. theme song இரண்டு
  படத்திலும் ஒன்று தான்! (விஸ்வரூபம்.. “யார் இவன் தெரிகிறதா?”
  என்ற பாடல்.. சிறப்பான வரிகள் – வைரமுத்து எழுதியது). நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *