BREAKING NEWS
Search

தமிழ் மக்கள் அன்புக்கு நான் தரும் பரிசு கோச்சடையான்! – சூப்பர் ஸ்டார் ரஜினி

தமிழ் மக்கள் அன்புக்கு நான் தரும் பரிசு கோச்சடையான்! – இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி

JOE_0146

சென்னை: தமிழ் மக்களுக்கு புதுசா ஏதாவது ஒண்ணு பண்ணனும், அவங்க காட்டுற அன்புக்கு நான் ஏதாவது செய்யணும்னு நினைச்சு பண்ணதுதான் இந்த கோச்சடையான், என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ஆதி, ஷோபனா, ருக்மணி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் படம் ‘கோச்சடையான்’.

ஏ ஆர் ரஹ்மான் இசையில், வாலி, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளனர். கே எஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி, சவுந்தர்யாவின் இயக்கத்தை மேற்பார்வையும் செய்துள்ளார்.

முரளி மனோகர் தயாரிக்க, ஈராஸ் நிறுவனம் இப்படத்தினை வெளியிடுகிறது.

இந்தியாவில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘கோச்சடையான்’தான்.

JOE_0157

இந்தப் படத்தின் இசை வெளியீடு விழா சென்னையில் சத்யம் திரையரங்கில் நேற்று நடந்தது. இந்த விழாவைப் பார்க்கவும், வெளியில் ரஜினியைப் பார்க்கவும் திரண்டிருந்த கூட்டம் வரலாறு காணாதது என்றால் மிகையல்ல. சத்யம் அரங்குக்கு பக்கத்திலிருந்த கட்டிடங்களிலெல்லாம்  ஏறி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஷாரூக்கான், கே.பாலசந்தர், ஷங்கர், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். ‘கோச்சடையான்’ படத்தின் இசையை சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

தியேட்டரை அதிர வைத்த ரசிகர்களின் கரகோஷம் விசில் மழைக்கிடையே பேச வந்தார் தலைவர். அவரது பேச்சு முழுமையாக…

rajini-speech-1

“இது கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அல்ல. இப்படம் உருவாவதற்கு யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கு எல்லாம் நன்றி சொல்லும் விழா.

இப்போ நான் நிறைய பேசுறத விட, இந்த படத்தோட வெற்றி விழாவில் நான் நிறையப் பேச போகிறேன். முதல்ல இந்த படம் இப்படி உருவாகும் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

எனக்கு எப்பவுமே ராஜா ராணி கதை என்றாலே ரொம்ப இஷ்டம். ரொம்ப பிடிக்கும். 150 படங்கள் நான் பண்ணியிருந்தால்கூட, ஒரு ராஜா ராணி கதை நான் பண்ணவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்துக்கிட்டே இருந்தது. இனிமேல் எனக்கு பணமோ, புகழோ தேவையில்லை. எனக்கு ஆண்டவன் புண்ணியத்தில் எல்லாமே நீங்க கொடுத்திருக்கீங்க.

இதுவரைக்கும் தமிழ் சினிமால ஏன் இந்தியாவில் கூட யாருமே பண்ணாத ஒரு ராஜா ராணி படம் செய்யணும்னு முடிவு பண்ணித்தான் ‘ராணா’ படம் தொடங்கினேன். அந்தப் படத்தோட கதையை நான் 20 வருஷமா மனசுக்குள்ள வச்சிருந்தேன். அந்தப் படம் தொடங்கின நேரத்துல எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அதற்கு பிறகு என்னாச்சு அப்படிங்குறது உங்களுக்கே தெரியும்.

ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பினாலும், ‘ராணா’ கதைக்கு நிறைய உடல் உழைப்பு தேவைப்பட்டுச்சு. அப்போதைக்கு அது முடியாம போச்சு. ஒரு நாள் முரளி மனோகர் எனக்கு போன் பண்ணி ‘ராணா’வுக்கு மேலே கே.எஸ்.ரவிகுமார் ‘கோச்சடையான்’ அப்படினு ஒரு கதை பண்ணியிருக்கார். கேட்டுப் பாருங்கனு சொன்னாங்க. இப்போ பண்ண முடியாதே, 2 வருஷமாவது ஆகுமே அப்படினு சொன்னேன். இல்ல. நீங்க முதல்ல கேளுங்க. அதை எப்படி பண்ணலாம்னு அப்புறம் பார்க்கலாம்னு சொன்னாங்க. சரி கேட்கிறேனு கேட்டேன்.

‘ராணா’வே எனக்கு ரொம்ப பிடிச்ச கதை. ‘ராணா’வை விட எனக்கு ‘கோச்சடையான்’ கதை ரொம்ப பிடிச்சது. நல்லாயிருக்கு ஆனா இதை இப்போ எப்படி பண்றதுனு கேட்டேன். நீங்க சரினு சொன்னீங்கன்னா ஒரு ஐடியா இருக்கு. ‘சுல்தான்’னு ஒரு படம் ஏற்கனவே செளந்தர்யா பண்ணியிருக்காங்க. அதனால இந்த கதையை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துல பண்ணலாம்னு சொன்னாங்க. எனக்கு டெக்னாலஜி பத்தி தெரியாது. எனக்கு நம்பிக்கை வேற இல்லை.

தமிழ் மக்களுக்கு புதுசா ஏதாவது ஒண்ணு பண்ணனும், அவங்க காட்டுற அன்புக்கு நான் ஏதாவது செய்யணும், ரொம்ப பெருசா பண்ணனும் முடிவு பண்ணினேன். இந்தப் படத்தைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல பேர்கிட்ட கேட்டேன், பேசினேன். இந்தப் படம் பண்றதுக்கு 5, 6 வருஷமாகும். 700 கோடியாகுமேனு சொன்னாங்க. இல்ல. அவ்வளவு செலவு எல்லாம் ஆகாது. நம்மோட பட்ஜெட்லயே பண்ண முடியும்னு சொன்னாங்க.

உடனே சவுந்தர்யாகிட்ட பேசினேன். என்னம்மா… பெரிய பொறுப்பு இருக்குமே. பண்ண முடியுமானு கேட்டேன். நான் பண்ணி காட்றேன்னு சொன்னாங்க. இந்த படம் இந்தளவிற்கு வந்ததிற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த ஊக்கம்தான். இந்தப் படத்துக்கு பட்ட கஷ்டத்தை வாயால எல்லாம் சொல்ல முடியாது. இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிருக்குன்னா அதற்கு உழைச்சவங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நான் படம் பாத்துட்டேன். இப்போ 3டி பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்னு எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு.

இதைவிட பெரிசாக இசை வெளியீட்டு விழாவை நடத்தத்தான் முடிவு செய்திருந்தார்கள். நான்தான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். படத்தின் வெற்றிவிழாவை மிகப் பெரிய அளவில், எஸ்பி முத்துராமன் சார் கேட்டுக் கொண்ட மாதிரி நடத்தலாம்.

சவுந்தர்யா, ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். இப்ப அவங்க படம் இயக்குறாங்க அப்படின்னா அதற்கு தனுஷ், அஸ்வின் மற்றும் அவங்களோட குடும்பத்தினர் தான் காரணம். அவங்களோட குழந்தையா நினைச்சு, அவங்களை ஊக்குவிக்கிறாங்க. அவங்களுக்கு தான்நான் நன்றி சொல்லணும்.

rajini - speech-2
இன்னும் ஐஸ்வர்யா, சவுந்தர்யா நிறைய படங்கள் பண்ணனும். அதே நேரத்தில், குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நல்ல குடிமக்களை உருவாக்க முடியும் என்பது எனது கருத்து. குழந்தைகளுக்கு 10, 12 வயசு ஆகுற வரைக்கும் நல்லா பாத்து வளர்த்துட்டு, அதற்கு பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த படம் வந்த பிறகு நிறைய பேர் இயக்கச் சொல்லி சவுந்தர்யாவைக் கேட்பாங்க. 2 குழந்தைகளை பெற்றுக் கொடுத்துட்டு அதற்கு பிறகு நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்க அப்படின்னு நான் சொல்லிக்கறேன்.

என் பொண்ணு சவுந்தர்யா ரொம்ப கஷ்டப்பட்டுருக்கு. எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. சவுந்தர்யா இப்படியெல்லாம் பேசுவாங்களான்னு… செளந்தர்யாவை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு. அவங்க முதல்ல ஆக்‌ஷன் அப்படினு சொன்னப்போ எனக்கு சிரிப்பு வந்துருச்சு. ரவிக்குமார் சார்.. நீங்க வாங்க.. இவரு ஆக்‌ஷன் எல்லாம் சொல்லட்டும், நீங்க கட் மட்டும் சொல்லுங்கனு சொன்னேன்” என்றார்.

-என்வழி
14 thoughts on “தமிழ் மக்கள் அன்புக்கு நான் தரும் பரிசு கோச்சடையான்! – சூப்பர் ஸ்டார் ரஜினி

 1. J.Venkatesh

  Thalaivar is always Great. Tralier is fantastic. Our fan support & family audience support will make it grand sucess. Count starts now.

 2. uday

  அனிமேஷன் படம் என்னமோ மாதிரி இருக்கு.. குரல் மட்டும் தான் தலைவர் .. ற்றைலோர் பார்க்கும் போது படம் ஓடுமான்னு எனக்கே கேள்விக்குரிய இருக்கு.. ரியால இருந்த செம்மைய இருக்கும்னு தோணுது ..

 3. குமரன்

  டிரெயிலர் வந்து விட்டது.

  “பார்த்தாயா எங்கள் நாட்டின் ரத கஜ துரக பதாதிகள்!!”

 4. Mahendran

  இது முழுக்க முழுக்க ஒரு கார்ட்டூன் படம்தான்! இந்த படத்திற்கு ரஜினி, சரத், நாசர், ஆதி போன்ற முன்னணி நடிகர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்! அவ்வளவுதான்! இதை ஆரம்பத்திலேயே சௌந்தர்யா சொல்லி இருந்தால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருக்க மாட்டார்கள்! அவதார் மாதிரி என்று சொல்லி நம்மையும் தன்னுடைய தந்தையையும் நன்றாக ஏமாற்றி விட்டார் தலைவர் மகள்! இது குழந்தைகளுக்கான படம்! வேறொன்றும் சொல்வதற்கில்லை!

 5. mohanraj

  நான் ரஜினி வெறியன் . அவர் நல்ல மனிதர் அவர் எது செய்தாலும் கடவுள் அருள் அவருக்கு உண்டு, அவரது கோச்சடயான் படம் தமிழ் சினிமாவிற்கு மட்டும் இல்ல இந்திய சினிமாவிற்கே புதிய சகாப்தமாக அமைய வாழ்த்துகிறேன்…)- என்றும் தலைவர் காட்டும் வழியில் ……… mohanraj madurai

 6. kumaran

  கடவுள் அருளலால் நல்லது நடக்க வேண்டும்.

 7. VEL

  This is INDIA’S First Motion Capturing flim and we Proud To be a SUPER STAR FAN
  That our Thalaivar is Only Hero TO do this ..
  The only Hero in INDIA to act in 4 types of flims B&w,COLOR,3D,PHOTO REALASTIC

 8. balamurugan

  பாஸ்
  எப்பயும நீங்க உங்க என்ஜாய் மென்ட பாகதிங்க .இது 4 வது ‘performance capture ‘ film in world .please appreciate the Indian cinema worker’s,to explore our culture, through cinema.

 9. M.MARIAPPAN

  எனக்கு 44 வயசு ஆகிறது நான் தலைவரின் தீவிர ரசிகன் . இது இந்தியாவில் ஒரு புதிய முயற்ச்சி இது உண்மையில் ஒரு அவதார் மாதிரி படம் தான் . ட்ரைலர் மிகவும் அருமையாக உள்ளது .கோச்சடையான் ஹிமாலய வெற்றி பெற கடவுளை பிராத்திக்கிறேன் . அதனால் mr . மகேந்திரன் அவர்களே புதிய முயற்சியை பாராட்டுங்கள் .வாழ்க தலைவர் வெல்க கோச்சடையான் .

 10. J.Venkatesh

  3000 கோடியில் அவதாரும் , 4000 கோடியில் டின் டின் எடுத்தார்கள். நாமோ 125 கோடியில் எடுத்துள்ளோம். 5% செலவில் இப்படி ஒரு புது முயற்சியை நாம் பாராட்டவேண்டும்.

  தலைவருக்காக எத்தனனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

 11. மிஸ்டர் பாவலன்

  //சுட்டி டிவி யில் படம் பார்த்தது போல இருக்கு//

  ரஜினி என்ற மாஸ் ஹீரோ பெயர் இருப்பதால் படம் எப்படியும்
  சில வாரம் housefull ஆக ஓடி நல்ல வசூல் பார்த்து விடும்.. ஆனால் இது
  ஷங்கரோட ரோபோ மாதிரியோ, இல்லை சிவாஜியோ மாதிரியோ
  பெயர் வாங்கும்னு தோணலை. இந்தப் படத்தால் சௌந்தர்யாவின்
  திறமைக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்துள்ளது. அவரை வாழ்த்துவோம்!

  Better luck next time!!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 12. Tiger

  அன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம்.

  நான் தங்களின் கடைகோடி ரசிகன். எனது பள்ளிக்காலத்தில் ரிலீஸான சிவா படத்தைப் பார்க்க தேனி கிருஷ்ணா திரையரங்கில் பத்து மணிக்காட்சிக்கு ஏழுமணிக்கே போய் காத்துகிடந்து, டிக்கெட் கவுண்டரில் நுழைய முடியாமல் மூச்சுத் திணறியவன். தேனியில் பிரபலமான தங்கக்குதிரை ரசிகர் மன்றத்து அண்ணன்கள்தான் என்னை தலைக்கு மேலே தூக்கி கவுண்டருக்குள் திணித்தார்கள். அப்படியும் எவனோ ஒரு புத்திசாலி ஈசியாக டிக்கெட் எடுக்க ஒரு பாக்கெட் வாஷிலைன் களிம்பை எல்லோர் தலையிலும் தடவி விட்டான். அவர்கள் அசந்த நேரம் பார்த்து அவன் உள்ளே புகுந்து டிக்கெட்டை வாங்கி திரையரங்கில் புகுந்தான்.. அப்படி சிவா படத்தை தலை நிறைய களிம்பும், வாசமும் அடிப்பது தெரியாமல்கூட உங்கள் முகத்தை பார்த்து ரசித்து மகிழ்ந்தவன் நான்.

  உங்களால் ஏதேனும் மாற்றம் வராதா என்று ஏங்கிக் கிடந்தவர்களில் நானும் ஒருவன். காலம் உருண்டோடி விட்டது. உங்கள் வீட்டில் உங்களை சந்தித்து உரையாடும் பாக்கியத்தையும் பெற்றேன். ஆனால் கடந்த சில நிகழ்வுகள் என்னைப் போலவே தமிழகம் முழுதும் உள்ள ரசிகர்களையும் மன வேதனையடைய வைத்துள்ளது. கோச்சடையான் பாடல்களை வெளியிட்டு நீங்கள் “வெற்றி விழாவில் ரசிகர்களை சந்திப்பேன்.” என்று சொன்னீர்கள். இதன் அர்த்தம் ரசிகர்கள் எல்லோரும் திரண்டுவந்து படத்தை பார்த்து வழக்கம் போல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆக்க வேண்டும் என்பதுதானே? அதுதான் ஒவ்வொரு முறையும் உங்கள் மேல் உள்ள பாசத்தால் ரசிகர்கள் நடத்தி வைக்கிறார்களே. ஆனால் இதே போல் நீங்கள் நூறு முறை சொன்னதை ஒருமுறை கூட நிறைவேற்றியதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா. உங்களுக்கு இருக்கும் வேலைகளில் அது ஞாபகத்தில் இருக்குமோ இல்லையோ.

  தேர்தல் தேர்தலுக்கு அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதி போல நீங்களும் உங்களின் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் இதுபோல் ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தும் வார்த்தைகளை பேசிவருகிறீர்கள். ரசிகர்கள் உங்க்ளை எப்போதும் உயர்ந்த இடத்தில் வைத்துதான் பார்க்கிறார்கள். . ஆனால் நீங்கள் அவர்களை வெறும் பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கிறீர்கள்.

  இப்படி இதற்கு முன் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். முதன் முறையாக நதிகள் இணைப்பிற்கு ஒரு கோடி கொடுப்பதாக அறிவித்தீர்கள். அது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறதே. நதிகளை இணைப்பது நடக்கிற கதையா என்பது உங்களுக்கு தெரியாதா என்ன. அந்தத் தொகையை முதல் வரவாக வைத்து ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருந்தீர்களென்றால் கூட உங்களுக்கு இருக்கும் மக்கள் சக்திக்கும், ரசிகர்கள் பலத்திற்கும் இந்நேரம் பலகோடிகள் சேர்ந்து இயற்கையை காப்பாற்ற வலுவான அமைப்பு உருவாகியிருக்கும். அல்லது நதிகள் இணைப்பு பற்றி துல்லியமான திட்டத்தோடும், மக்கள்சக்தி என்ற இயக்கத்தோடும் பல காலம் போராடிவந்த எம்.உதயக்குமார் போன்றோருக்காவது ஆதரவு கொடுத்திருக்களாம். ஆனால் யாராலும் கண்டுகொள்ளப்படாமலே அவரும் மறைந்து போனார்.

  ராகவேந்திரா திருமண மண்டபத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று அறிவித்தீர்கள். அதன் பிறகு அதன் பயன்கள் என்ன, செயல்பாடுகள் என்ன என்று எப்போதாவது யாராவது கேட்டிருப்பார்களா. இது நாள்வரை மக்களுக்கு அர்ப்பணிக்கபட்டதன் பயன் பற்றி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடமுடியுமா. ஆனால் சும்மா ஒன்றும் நீங்கள் அர்ப்பணிக்கவில்லை. அந்த மண்டபம் அமைந்த இடம் பற்றி சில சர்ச்சைகள் வந்ததால் அப்படியொரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டீர்கள் என்றுதானே சொல்கிறார்கள்.

  பாபா படம் வெளியானபோது என்ன நடந்தது. நீங்கள் பயன்படுத்திய பொருட்கள், உங்கள் உருவம் பதித்த பனியன், கர்சீஃப், டாலர், செருப்பு இத்யாதி இத்யாதி என்று எல்லாவற்றையும் கூறுகட்டி வைத்து ரசிகர்களிடம் காசு பார்த்தாரே உங்கள் மனைவி லதா. அப்போது மௌனமாகதானே இருந்தீர்கள். அப்படியென்ன பணத்தேவை வந்தது உங்களுக்கு என்று எந்த ரசிகனும் கேட்கவில்லை. அப்பாவிகள் அதையும் வாங்கிகொண்டு உங்கள் கல்லாவை நிறைத்தார்கள்.

  கொத்துக்கொத்தாக பெண்கள், குழந்தைகள் என்று ஈழத்தில் செத்து மடிந்த போது நாடே கொந்தளித்து எழுந்தது. மாணவர்கள், வழக்கறிஞர்கள் என்று மக்கள் தெருவிற்கு வந்து போராடினார்கள். அப்போதும் கனத்த மௌனம். அரசியல் பற்றி அல்ல ஒரு மனிதாபி மானத்திற்காகவாவது ஒரு வருத்தம் தெரிவித்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் எங்கோ இருந்த சஞசய்தத் சிறைப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிடுகிறீர்கள். நீதிமன்றமே அவர் குற்றவாளி என்று அறிவித்த பிறகு

  எங்களுக்கு ஏன் வருத்தம் வந்தது. எந்த குற்றமும் செய்யாமல் சின்னஞ்சிறு குழந்தைகள் செத்து விழுந்தபோது உங்களுக்கு வருத்தமாக இல்லையா. நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கு தமிழன் வேண்டும். உங்கள் பாசத்தை காட்டுவதற்கு வேறு ஒரு இடம் வேண்டுமா.

  அவ்வளவு ஏன் இதே சௌந்தர்யா திருமணத்தின் போது நடந்தது என்ன? ரசிகர்கர்களை திருமணத்திற்கு அழைக்கவில்லையா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு “ரசிகர்களுக்கு தனியாக திருமண விருந்து வைப்பேன். எங்கே எப்படி என்பது பற்றி பின்னர் அறிவிப்பேன் என்றீர்கள். அதையும் ஈசியாக மறந்துவிட்டீர்கள். ஒருவேளை சாப்பாடு இல்லாமலா உங்கள் விருந்தை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஒரு வேளை என்றாலும் நம் தலைவன் வீட்டு விருந்து என்ற திருப்தி அவர்கள் வாழ்நாள் முழுதும் போதுமே.

  நீங்கள் உடல் நலமில்லாதபோது நடந்தது எதுவுமே உங்களுக்கு தெரியாது. பத்திரிகையாளன் என்பதையும் மீறி போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் பலத்த காவலையும் மீறி நான் நுழைந்தேன். என்னைப் போல் இன்னும் சில ரசிகர்களும் அங்கு இருந்தனர். அங்கு வந்த லதா அவர்கள், ”நீங்கள் எல்லாம் ஏன் இங்கு வந்தீர்கள்”. என்று கேட்டு அத்தனை பேரையும் கலங்கவைத்தார். ஆனாலும் எப்படியாவது பார்த்துவிடமாட்டோமா என்று நடு ரோட்டில் சுற்றியலைந்தது ரசிகக்கூட்டம். கண்காட்சி நடத்தி பணம் சம்பாத்தித்த ரசிகர்களிடம் இன்னும் கொஞ்சம் பக்குவமாகவே தெரிவித்திருக்கலாம். இன்னும் ஒரு சோகம் கேளுங்கள் நீங்கள் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு போகும் முன் வீட்டுக்கு வருகிறீர்கள் என்ற தகவல் தெரிந்து பத்திரிகையாளர்கள் சிலர் உங்கள் போயஸ் தோட்டத்து வீட்டில் கூடினோம். அந்த ஏரியாவில்தான் எந்த கடையும் இருக்காதே.. நீண்ட நேரமாகிவிட்டது. எல்லோருக்கும் தாகம். வேறு வழியில்லை. உங்கள் வீட்டு கேட்டருகே வாட்டர் கேன் வைக்கப்பட்டிருந்தது. பத்திரிகையாளர் ஒருவர் போய் அங்கிருந்தவரிடம் தண்ணீர் கேட்டதற்கு தர மறுத்துவிட்டார். வீட்டிலிருப்பவர்கள் சொல்லாமல் எதையும் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். எங்கள் நிருபர் ஒருவர் “அட கர்நாடகமே” என்று தலையில் அடித்துக்கொண்டார். அது மாநிலத்துப் பெயருக்காக அலல. அடிப்படை விஷயமே தெரியாதவர்களை அப்படி சொல்வது வழக்கம். அப்போதுதான் நீங்கள் எப்படிபட்ட சூழலில் இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.

  பல கோடி ரசிகர்களும் தமிழர்களும் உங்கள் மீது வைத்த பாசத்திற்கு எதைத் திருப்பித் தரப்போகிறீர்கள். கடைசிவரைக்கும் அவர்களை டிக்கெட் வாங்கும் இயந்திரங்களாக்கி வைப்பதுதானா. அல்லது இன்னும் பாட்டு வரிகளில்தான் நன்றி சொல்லப் போகிறீர்களா. சமூகத்திற்கு உங்கள் பெயர் சொல்லும்படி எதையும் செய்யப்போவதில்லையா. உங்கள் துறையில் இருக்கும் நடிகர் விவேக் சமூக அக்கறையோடு இதுவரைக்கும் தமிழகம் முழுதும் 22.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறார். மரம் வளர்[ப்பதன் அவசியத்தைப் பற்றி நாடு முழுதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தும் வருகிறார்.. இப்போது விவேக்கின் இந்த பணி தமிழக விவசாயிகள் கைக்கு போயிருக்கிறது. தினத்தந்தி நாளிதழ் பலமுறை தலையங்கத்தில் அவரை பாராட்டியிருக்கிறது. இவர் போன்றவர்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலே உங்கள் ரசிகர்களும் மரம் வளர்ப்பதில் கவனம் செலுத்துவார்களே
  ஒரு விஷயம் ரஜினி சார் எல்லா நடிகர்களுக்கும் எம்.ஜி.ஆர். போல் ஆக வேண்டும் என்று மட்டும் ஆசையிருக்கிறது ஆனால் அவர் போல் தர்மம் செய்ய வேண்டும் என்பது யாருக்கும் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

  இப்படி கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டு உங்கள் மகள் சௌந்தர்யா இழுத்து வைத்த கடனை அடைக்க “இந்த பொம்மை படத்தையும் ஓட வையுங்கள்.” என்று கைகூப்பி வேண்டுகிறீர்கள். இதற்கு நீங்கள் அரசியவாதியாகவே ஆகியிருக்கலாம்.

  அன்புடன்
  இப்போதும் உங்கள் ரசிகனாகவே இருக்கும்

  தேனி கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *