BREAKING NEWS
Search

2015-ல் சர்வதேச மொழிகளில் கோச்சடையான் வெளியீடு

2015-ல் சர்வதேச மொழிகளில் கோச்சடையான் வெளியீடு

unnamed

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் சர்வதேச மொழிகளில் 2015-ம் ஆண்டு வெளியிடப்படும் என தயாரிப்பாளர் முரளி மனோகர் அறிவித்துள்ளார்.

கோச்சடையான் படம் கடந்த மே மாதம் 23-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, போஜ்புரி மற்றும் பஞ்சாபி மொழிகளில் வெளியானது.

தமிழில் இந்தப் படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் சுமாராகப் போனது. மற்ற மொழிகளில் இந்தப் படம் சரியாகப் போகவில்லை. வெளியீட்டுத் தேதிகளில் நடந்த குழப்பமே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் கோச்சடையானை ஆங்கிலத்தில் வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. 2015-ம் ஆண்டில் இந்தப் படம் சர்வதேச அளவில் ஆங்கிலத்தில் 80க்கும் அதிகமான நாடுகளில் வெளியாகிறது. ஜப்பானி, ப்ரெஞ்சு மொழிகளிலும் படத்தை டப் செய்யும் வேலைகள் நடக்கின்றன.

இதனை படத்தின் தயாரிப்பாளர்களான மீடியா ஒன் நிறுவனத்தின் அதிபர் முரளி மனோகர் நேற்று அறிவித்துள்ளார்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *