BREAKING NEWS
Search

கோச்சடையானுக்கு முடிந்தது சென்சார்… எந்த கட்டுமில்லாமல் யு சான்று!

கோச்சடையானுக்கு முடிந்தது சென்சார்… எந்த கட்டுமில்லாமல் யு சான்று!

1185533_844698875556515_161625411_n
கோச்சடையான் படத்தின் சென்சார் பணிகள் முடிந்தன. படத்துக்கு எந்த கட்டும் இல்லாத யு சான்று தந்துள்ளனர்.

ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ள, இந்தியாவின் முதல் நடிப்பு பதிவாக்க தொழில்நுட்பத் திரைப்படம் கோச்சடையான். தீபிகா படுகோன், ஷோபனா இருவரும் அவருக்கு ஜோடிகளாக நடித்துள்ளனர்.

கேஎஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை எழுத, சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சரத்குமார், ஜாக்கி ஷெராப், நாசர், ஆதி உள்பட பலரும் நடித்துள்ள இந்தப் படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் உருவத்தை மீண்டும் உலவ வைத்துள்ளனர்.

1904131_844697892223280_379685797_n

இந்தப் படத்தை ஏப்ரல் மாதமே வெளியிட்டு விடும் முயற்சியில் உள்ளனர்.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதால், இதன் தமிழ்ப் பதிப்பை சென்சாருக்குப் போட்டுக் காட்டினார் சவுந்தர்யா. படம் பார்த்த சென்சார் குழுவினர் பிரமித்துப் போய்விட்டார்களாம்.

படத்துக்கு அனைவரும் பார்க்கத் தகுந்த படம் என்ற யு சான்று அளித்துள்ளனர்.

தெலுங்கு, இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிப் படங்களை அந்தந்த பிராந்திய சென்சாருக்குப் போட்டிக் காட்டி சான்றிதழ் பெறும் முயற்சியில் உள்ளார் சவுந்தர்யா.

-என்வழி




7 thoughts on “கோச்சடையானுக்கு முடிந்தது சென்சார்… எந்த கட்டுமில்லாமல் யு சான்று!

  1. bahrainbaba

    வினோ,

    மூன்று வேடங்களா?.. புது தகவலா இருக்கு.. ?..

    பஹ்ரைன் பாபா

  2. பரமசிவம்

    படம் மாபெரும் வெற்றி பெரும். வெற்றி விழாவில் ரஜனி அவர்கள் ரசிகர்களை அழைத்து அளவளாவுவார் என தெரிகிறது. நானும் அதில் ஒருவனாக இருப்பேன்.;

  3. kumaran

    அடுத்து K S ரவிக்குமார் படம் எப்போது ?

  4. Rajan

    @ பஹ்ரைன்பாபா, ஆம் சௌந்தர்யா இசை வெளியீட்டின் பொது சொன்னாரே …

    கோச்சடையானுக்கு இரு புதல்வர்கள் ராணா மற்றும் சேனா….

    எத்தனை வேடமோ அதை விட அதிக சந்தோசம் நமக்கு காத்து இருக்கிறது …தலைவரின் தரிசனத்துக்கு காத்திருக்கும் கோடானு கோடி பேரில் ஒருவன்

    ராஜன்.

  5. Aryan

    என்ன சார் ..?
    கார்ட்டூன் படத்துக்கு யாராவது கட் குடுப்பாங்களா..? இத போய் பெருமையா சொல்லுறீங்க ..?

  6. கணேசன் நா

    மிஸ்டர் ஆர்யன் மற்றும் அவரை போலவே பேசுபவர்கள் கவனத்திற்கு,

    உங்களுக்கு வேண்டும்ன அது கார்ட்டூன் படமா இருக்கலாம். ஆனால், எங்களுக்கு, திரைப்படங்களில் புதுமையை ரசிபவர்களுக்கு அப்படி ஒன்றும் இல்லை.

    இந்த முயற்சியை தலைவரை விட வேறு உலக நாயகர்கள் செய்து இருந்தால் உங்களை போன்றவர்கள் ஆஹா, ஓஹோ, என்று காது கிழிய கத்திருபிர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும்.

    போதும், உங்களின் தேவையற்ற வீண் புழுகல்களை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *