BREAKING NEWS
Search

தொழில் நுட்ப காரணங்களால் தாமதம்… கோச்சடையான் மே 23ம் தேதி திரைக்கு வரும்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தொழில் நுட்ப காரணங்களால் தாமதம்… கோச்சடையான் மே 23ம் தேதி திரைக்கு வரும்! – ஈராஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

KOCHADAIIYAAN-POSTER

சென்னை: தவிர்க்க முடியாத தொழில் நுட்ப காரணங்களால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் வெளியீடு மே 23-ம் தேதிக்கு தள்ளிப் போய்விட்டதாக ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி:

ஈராஸ் இண்டர்நேஷனல் மீடியா லிட்  இந்திய திரையுலகில் ஒரு மாபெரும் சர்வதேச நிறுவனம். கோச்சடையான் திரைப்படத்தை ஒரு உயர் தொழில் நுட்பத்தில் வெகு விரைவில் திரைக்கு வருவதற்கு இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீடியாஒன் க்ளோபல் லிமிட்டடுடன் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது.

சவுந்தர்யாவின் டைரக்ஷனில் உருவாகிய இந்தத் திரைப்படம் மே 9 ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது, இந்தப் படம் உலகில் பல நாடுகளில் 6000 ப்ரிண்டுகளுக்கு மேல் 2டி மற்றும் 3டியில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய ரிலீஸ் செய்வதற்கு பல ப்ரிண்ட்கள் தயாராகும் நிலையில் சில தொழில் நுட்ப காரணங்களினால் கோச்சடையான் படம் மே 23 ம் தேதி ரிலீஸ் ஆவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

முழு மூச்சுடன் கோச்சடையான் குழுவினர் மிகுந்த ஆவலுடன் மே 9ஐ எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர். ஆனால் தவிர்க்க முடியாத, எதிர்பார்க்காத சில தொழில் நுட்ப காரணங்களினாலும், படம் 2டி மற்றும் 3டியில் தயாராக வேண்டியதாலும் தேதியை மாற்றும் ஒரு கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி என்று ஆறு இந்திய மொழிகளில் உலகமெங்கும் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. கோச்சடையான் படத்தில் நீங்கள் பார்ப்பதற்கு ஒரு புதிய தொழில் நுட்பத்தை, மிக நுணுக்கமாக, ‘சலனப் பதிவாக்கம்’ என்னும் தொழில் நுட்பத்தில் எடுக்கப்படும் படமாகும்.

ரசிகர்களுடைய ஆரவாரம் பெரிய முறையில் ஆரம்பித்துள்ளது. இது வெகுவிரைவில் அவர்கள் மகிழ்ந்து ரசிப்பதற்காக திரையரங்குகளுக்கு இரண்டு வாரங்களில் விரைந்து வந்து கொண்டிருக்கிறது.

இப்படம் நம் சூப்பர் ஸ்டார் மூன்று வேடங்களிலும், தீபிகா படுகோண், சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா மற்றும் ருக்மணி நடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட தயாரிப்பில் ஆஸ்கர் வின்னர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவாக்கம் செய்துள்ளார்.

உலக அளவில் பெருமை வாய்ந்த பைன் உட் ஸ்டுடியோஸ், லண்டன் சென்ட்ராய்டு ஸ்டுடியோஸ், பல உயரிய தொழில் நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் வேலை செய்துள்ளனர். தென் இந்தியாவை சேர்ந்த வல்லுநர்களும், சீனாவைச் சேர்ந்த பல வல்லுநர்களும் இத்திரைப்படத்தில் வேலை செய்துள்ளனர்.

press release - kochadaiiyaan
சர்வதேச புகழ்பெற்ற படங்களான வேர்ல்டு வார் – 2, பைரேட்ஸ் ஆப் கரீபியன், அயன்மேன் – 2, ஹாரிபாட்டர், பெவர்லி ஹில்ஸ் என்ற படங்களுக்கு வேலை செய்த ஸ்டுடியோ நம் கோச்சடையான் படத்துக்கு வேலை செய்துள்ளது.

மே 23 அன்று உலகமெங்கும் 2டி மற்றும் 3டி யில் மக்களை மகிழ்விக்க விரைந்து வருகிறார்,கோச்சடையான்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

-என்வழி
9 thoughts on “தொழில் நுட்ப காரணங்களால் தாமதம்… கோச்சடையான் மே 23ம் தேதி திரைக்கு வரும்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 1. Sekar

  THALAIVAA PL. INTERFERE. MY HEART IS BROKEN. CAN YOU PLEASE MAKE SURE THERE IS NO MORE DELAY IN THE RELEASE OF THE FILM “KOTCHADAIYAAN”

  LONG LIVE OUR SUPER STAR RAJINI AVARGAL.

 2. Rajagopalan

  People are not beleiving this kind of scrap from the EROS… Coz of EROS & its problems, all us are suffering…

 3. Rajagopalan

  dissapointed to the core…
  why thalaivar not saying / doing anything?
  May 23rd not good date for not only overseas but hear also , All schools will reopen in june 1st week & also XMEN & Godzilla releasing…
  Surely collections will come down…
  All these distributors must not be given LINGA…
  All these guys when profit comes takes home but when loss occurs they want their money back…
  Really this is true தங்க முட்டை ( கள்) போடுற வாத்து கதிதான்……
  God please save thalaivar…

 4. makkal neyam.. noble.t

  எத்தனை பேர் சேர்ந்தாலும் தடுக்க முடியும் , ஆனா aryan உங்கள மாதிரி ஆட்களால கோச்சடையானை தடுக்கவே மு-மு-முடியாது….

 5. suresh kumar

  This is to inform all Rajini fans not to worry just because our thalaivar movie got postponed. Since it is releasing in 6000 screens and 6 Languages some technical difficulty would have taken place. as everybody knows these motion technology movie is first of its kind for Indian film. Thalaivar always rocks even if it is delayed that is for sure.
  Long Live Thalaiavaa ……………
  admin@vellorerajinifans.com

 6. நாஞ்சில் மகன்

  இன்று மே 9ம் தேதி படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் கூடுதல் பிரிண்ட் போட இருப்பதாலும், அனிமேஷன் வேலைகள் இருப்பதாலும் படத்தை மே 23ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக படக்குழு தெரிவித்தது. ஆனால் உண்மையான காரணம் அது இல்லை என்றும், படம் அதிகபட்ஜெட்டில் உருவாகி இருப்பதால் படத்தை விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் வாங்க மறுப்பதால் படம் தள்ளிப்போய் இருப்பதாக கூறப்படுகிறது.

  இதற்கிடையே கோச்சடையான் படம் கோடையை கோட்டை விட்டுள்ளது. எப்படி? கோச்சடையான், அனிமேஷன் படம் என்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக அனிமேஷன் படங்களுக்கு குழந்தைகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். தற்போது பள்ளிகளில் விடுமுறை விடப்பட்டு இருப்பதால் குழந்தைகள் மத்தியிலும் இப்படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும். ஆனால் பல்வேறு பிரச்னைகளால் இப்படம் தள்ளிப்போய் மே இறுதியில் ரிலீஸாக இருக்கிறது. அதன்பிறகு ஒரு வாரத்தில் பள்ளிகளும் திறக்க இருக்கிறது. இதனால் பெரிய கலெக்ஷ்ன் எதுவும் இருக்காது. ஆக இந்த கோடையை முழுமையாக கோட்டை விட்டுள்ளது கோச்சடையான்.

 7. Basha

  கவலையாக தான் உள்ளது ……… தலைவர் வளர்ச்சியை கண்டு கடப்புஅவோர் அதிகம்?

  இதற்கு தலைவரின் பதிலையே நினைத்து கொள்கிறேன்……..

  நண்பா எல்லாம் கொஞ்சம் காலம் ……. ஹி ஹி ஹி ஹி…….. எல்லாம் கடந்து போகும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *