BREAKING NEWS
Search

கோச்சடையான் தியேட்டர் வசூல்… 5 நாளில் ரூ 51 கோடி..!

கோச்சடையான் தியேட்டர் வசூல்… 5 நாளில் ரூ 51 கோடி.. வருவாய் 110 கோடியைத் தாண்டியது!
  BoefflyIUAAUsCp
கோச்சடையான் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இதில் முதல் 5 நாட்களுக்கான கலெக்ஷன் ரிப்போர்ட் கிடைத்துள்ளது. இதுவரை தியேட்டர்கள் மூலம் ரூ 51 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது இந்தப் படம்.
இதன் மூலம் படத்தின் மொத்த வருவாய் ரூ 100 கோடியைத் தாண்டியது.
மேலும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் ரூ 50 கோடியைத் தாண்டிய முதல் படம் கோச்சடையான்தான்.
ரஜினி, தீபிகா படுகோன் நடிக்க, சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் கடந்த 23-ம் தேதி உலகெங்கும் வெளியானது. 6 மொழிகளில், 3000-க்கும் அதிகமான அரங்குகளில் படம் வெளியானது. முதலில் 6000 அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டவர்கள், பின்னர் கடைசி நேர நெருக்கடி காரணமாக அதில் பாதி அளவு தியேட்டர்களில்தான் வெளியிட்டனர். வெளிநாடுகளில் எக்ஸ் மேன் படம் ரிலீசானதால், கோச்சடையானுக்கு அதிக அரங்குகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது.
 kochadaii
படம் வெளியான பிறகு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக தமிழில் பெரும் வெற்றி பெற்றுள்ளது இந்தப் படம்.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் 42 கோடியை வசூலித்த கோச்சடையான், அடுத்த இரு தினங்களில் மேலும் 9 கோடியை வசூலித்துள்ளது. இவை வார நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் ரூ 15 கோடியும், உள்நாட்டில் ரூ 36 கோடியையும் ஈட்டியுள்ளது இந்தப் படம்.
இன்றிலிருந்து வார விடுமுறை தினங்கள் என்பதால் வசூல் மேலும் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இரண்டாவது வாரத்திலும் கோச்சடையான் ஆதிக்கம் தொடர்வதால், தியேட்டர்கள் மூலம் மட்டுமே ரூ 100 கோடி வசூல் சாத்தியமாகும் எனத் தெரிகிறது.
வெளிநாடுகளில் இந்தப் படத்தின் வசூல் தொகை விவரம்:
அமெரிக்கா: ரூ 3.21 கோடி
மலேசியா: ரூ 1.22 கோடி
பிரிட்டன் (அயர்லாந்து உள்பட) : ரூ 80 லட்சம்
ஆஸ்திரேலியா: ரூ 65 லட்சம்
வளைகுடா நாடுகள், இலங்கை, ஆப்ரிக்க நாடுகள், ஜெர்மனி, பிரான்ஸில் வசூலான தொகை விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை!
-என்வழி4 thoughts on “கோச்சடையான் தியேட்டர் வசூல்… 5 நாளில் ரூ 51 கோடி..!

 1. johny

  Limitations of motion capture

  At this moment technologies defect.lets appreciate தி
  Hard effort by thalaivar daughter.excellent defects வித்
  Limitations

  Specific hardware and special software programs are required to obtain and process the data.The cost of the software, equipment and personnel required can be prohibitive for small productions.The capture system may have specific requirements for the space it is operated in, depending on camera field of view or magnetic distortion.When problems occur, it is easier to reshoot the scene rather than trying to manipulate the data. Only a few systems allow real time viewing of the data to decide if the take needs to be redone.The initial results are limited to what can be performed within the capture volume without extra editing of the data.Movement that does not follow the laws of physics cannot be captured.Traditional animation techniques, such as added emphasis on anticipation and follow through, secondary motion or manipulating the shape of the character, as with squash and stretch animation techniques, must be added later.If the computer model has different proportions from the capture subject, artifacts may occur. For example, if a cartoon character has large, over-sized hands, these may intersect the character’s body if the human performer is not careful with their physical motion.

 2. banurekha

  முரளி மனோகர் தயாரிப்பாளர் படம் சரியாய் போகல என்று பேட்டி கொடுக்கிறார்.

  ஹிந்தியில் வரவேற்பே இல்லை என்றும் சொல்லுகிறார்.

  நீங்க நூறு கோடி ஆயிரம் கோடி என்று சொல்றீங்க

  எதை சார் நம்ப?

  தமிழ் படங்களின் சரியான வசூலை யாருமே வெளியிட மாட்டார்களா?

  நானும் ரஜினி ரசிகை தான். படம் நல்லா இருக்கு.

  கடந்த சனி கிழமை மாலை எங்கள் ஊரில் பொள்ளாச்சியில் பார்த்தேன். கூட்டமே இல்லை என்பது தான் வருத்தம்.

  உண்மை செய்திகளை வெளியிடுங்கள் ஆதாரத்துடன்.

  பொத்தாம் பொதுவாக அடிச்சு விட்டு மற்ற ரசிகர்கள் கிண்டல் பண்ற மாதிரி ஆக்கி விடாதீர்கள்

 3. Siva

  எஸ் Banurekha . என் கருத்து வெளியிட வில்லை. நானும் தலைவர் ரசிகன் தான். இதே மாதிரி கேள்வி தான் கேட்டேன். தலைவரே கூட எதிர் வாதங்களை ஏற்பவர் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *