BREAKING NEWS
Search

அமெரிக்காவில் புதிய வரலாறு படைக்கும் கோச்சடையான்.. முதல் முறையாக 200 அரங்குகளில் ரிலீஸ்!

அமெரிக்காவில் புதிய வரலாறு படைக்கும் கோச்சடையான்.. முதல் முறையாக 200 அரங்குகளில் ரிலீஸ்!

KOCHADAIIYAAN-POSTER

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாவதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்’ புதிய வரலாறு படைக்கிறது.

இந்த நாட்டில் இத்தனை அரங்குகளில் வெளியாகும் முதல் வெளிநாட்டுப் படம் கோச்சடையான் மட்டுமே. வேறு எந்த நாட்டுப் படத்துக்கும் இவ்வளவு அரங்குகள் கிடைத்ததில்லை, அமெரிக்க சினிமா வரலாற்றில்!

அமெரிக்காவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அட்மஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும், இந்தி பதிப்பை ஈராஸ் நிறுவனமும் வெளியிடுகின்றன.

தமிழ் மொழியில் மட்டும் கோச்சடையான் 100 திரையரங்குகளுக்கும் அதிகமாக அமெரிக்காவில் திரையிடப்படுகிறது. இதன் தெலுங்கு, இந்தி மற்றும் இதர மொழி பதிப்புகள் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாக உள்ளன.

முன்னதாக எந்திரன் 85 அரங்குகளில் வெளியானது. இதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் முந்தய சாதனையை அவரே முறியடிக்கிறார்.

78 அரங்குகளில் வெளியான அஜீத்தின் ஆரம்பம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அட்மஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் வெளியிட்ட ஜில்லா மற்றும் வீரம் தலா 70 அரங்குகளில் வெளியானது. முன்னதாக, சூர்யாவின் சிங்கம் 2 படத்துக்கு 63 திரையரங்குகள் கிடைத்தன.

கோச்சடையான் தமிழில், 80 திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. வேறு எந்த இந்திய மொழிப்படங்களும் இத்தனை 3D அரங்குகளில் வெளியானது இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவில் 3D யில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமும் கோச்சடையான்தான்.

cSfdsagsaerg

படையப்பா முதல் கோச்சடையான் வரை

அட்மஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிர்வாக இயக்குனர் ராம் முத்து இதுகுறித்துக் கூறுகையில், “அமெரிக்காவில் இந்திய படங்களுக்கான வர்த்தக வாய்ப்பை வெளிப்படுத்திய சூப்பர் ஸ்டாரின் படையப்பா, 32 ஆயிரம் டாலர்கள் முதலீட்டில்  200 ஆயிரம் டாலர்கள் வசூல் செய்தது. 2007ல் வெளியான சிவாஜி படத்தின் வசூல் இன்னும் பல மடங்குஅதிகரித்தது. கமல்ஹாசனின் தசாவதாரம் சிவாஜிக்கு அடுத்த வசூலைத்தான் கொடுத்தது.

அமெரிக்க அரங்குகளில் எந்திரன் திரைப்படம் தமிழில் மட்டும் 1.6 மில்லியன் டாலர்களும், தெலுங்கு இந்தி உட்பட மூன்று மொழிகளிலும் சேர்த்து 2.6 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து புதிய வரலாறு படைத்தது.

தற்போது மூன்று மொழிகளிலும் சேர்த்து 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் கோச்சடையான் முந்தய சாதனைகளை முறியடிக்கும்” என நம்புவதாக  தெரிவித்தார்.

முதல் வெளிநாட்டுப் படம்

மேலும் “அமெரிக்காவில் திரையிடப்படும் வெளிநாட்டு படங்களில், 200 அரங்குகளுக்கும் அதிகமாக வெளியாகும் முதல் படம் என்ற பெருமை ’கோச்சடையான்’ படத்திற்கு கிடைத்துள்ளது,’ என்றும் ராம் முத்து தெரிவித்தார்

தமிழகத்தில் மே 9ம் தேதி வெள்ளிக்கிழமை கோச்சடையான் வெளியாகும் நிலையில், அமெரிக்கா முழுவதும் வியாழக்கிழமை ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. தியேட்டர்  மற்றும் விவரங்களை விரைவில் அறிவிக்க இருப்பதாக அட்மஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அமெரிக்காவில் எந்திரன் ரசிகர் காட்சிகள் மாபெரும் சாதனை படைத்தது. மோஷன் கேப்சரிங் டெக்னாலாஜி என்றாலும், மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் ரஜினி படம் என்பதால் அமெரிக்க ரசிகர்களிடமும் கோச்சடையான் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இப்போதிலிருந்தே முன்பதிவுக்கான விசாரணைகள் தொடங்கிவிட்டன.

குறிப்பு: அமெரிக்காவில் கோச்சடையான் வெளியாகும் அரங்குகள் பட்டியல் விரைவில், என்வழியில்…

-உதயன்

-என்வழி




9 thoughts on “அமெரிக்காவில் புதிய வரலாறு படைக்கும் கோச்சடையான்.. முதல் முறையாக 200 அரங்குகளில் ரிலீஸ்!

  1. RajCh

    While this isn’t a surprise, but please correct the article or press release by this distrib. In North America – all tamil distributors are strategically lowering the actual collections of Tamil movies to get better deal in the next ones. Rentrak actuals are not published instead 30 % lower margin is reported. Carefully notice- taran adarsh stopped publishing tamil US collections because of this pressure. He publishes only corp movie like raja rani where actuals in US is reported. Atmus is one among the Tamil distrib which shows lesser collections. Not/ never to be trusted. They will strategically downplay the Koch collections to grab lingaa. Wait & see. Take this to Koch team. I am living long enough here than most of these guys to know this info.
    Coming back to endhiran- it collected 4.5 mi in Tamil. They are strategically downplaying it. Check moviecitynews, taran tweets or even Eros press release(21 cr -US). They say 1.5 mi – what a joke. Truth is even if it’s 1.5 mi still no tamil movie in US can touch it.
    Editor pls take this to concerned authorities

  2. Karthik

    எந்திரன் திரைப்படத்தின் உண்மையான வசூல் விபரம் வேண்டுமென்றே சில அமெரிக்க விநியோகஸ்தர்களினால் குறைத்துக் காட்டப்பட்டிருக்கிறது. RENTRAK இன் வலைத்தள விபரத்தின் படி எந்திரன் திரைப்படத்தின் முதல் மூன்று நாள் வசூல் விபரம் –
    தமிழ் 1.52 மில்லியன்
    ஹிந்தி 0.16 மில்
    தெலுங்கு 0.48 மில்
    பிரிமியர் காட்சி வசூல் 0.52 மில்
    முதல் 3 நாள் மொத்த வசூல் 2.68 மில்.

    இரண்டாவது வார இறுதியில் மொத்தமாக 3.6மில்லியன் வசூலித்திருந்தது.

    Bollywood Hungama Box office analyst Mr Taran Adarsh இன் தகவல்படி எந்திரன் வட அமெரிக்காவில் (US + Canada) மாத்திரம் 4.3 மில்லியன் டொலர்கள் வசூலித்திருந்தது

  3. Karthik

    எந்திரன் 139 அரங்குகள் (தமிழ் 64, ஹிந்தி 39 & தெலுங்கு 36)
    விஷ்வரூபம் 85 அரங்குகள்

  4. யுஎஸ் பாகஸ் ஆபீஸ்

    யு.எஸ் பாக்ஸ் ஆபீஸ் பற்றி தெரியாமல் சிலர் இங்கே கருத்துக்களை கொட்டியுள்ளார்கள். தியேட்டர்காரர்கள் மட்டும் தான் டிக்கெட்டுகளை விற்க முடியும், ரசிகர் காட்சி என்றால் கூட, குறிப்பிட்ட தியேட்டர் கவுண்டரிலோ, அல்லது ஆன்லைன் தளத்திலோ மட்டுமே வாங்க முடியும். 99 சதவீதம் கிரெடிட் கார்டுகள் மூலம் தான் பணப்பரிவர்த்தனை. தியேட்டர்காரர்களைப் பொறுத்தவரை அது இந்தியப்படமா, ஹாலிவுட்டா என்ற கவலை எல்லாம் இல்லை. அன்றைய வரவுகளுக்கு அவர்கள் கணக்கு காட்டியாக வேண்டும். எந்த அரங்கத்தில் எந்த காட்சியில் எந்த படம் என்பது ஒரு வாரத்திற்கு முன்னதாகவே சிஸ்டத்தில் பதிவு செய்யப்பட்டுவிடும். வசூலைக் குறைத்துக் காட்டவோ, மாற்றிக்காட்டவோ முடியாது. அப்படி செய்யும் பட்சத்தில் தியேட்டர்காரர்கள் பெரிய சட்டச்சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். அமெரிக்காவில் இத்தகைய சட்டங்கள் மிகவும் கடுமையானது. எந்திரன் வசூலையோ, கோச்சடையான் வசூலையோ குறைத்துக் காட்டி அவர்கள் தியேட்டருக்கே உலை வைப்பார்களா என்ன? சும்மாங்காட்டியும் பீலா உடுறதை நிறுத்துங்கப்பா. இவர்கள் கோச்சடையான் லோக்கல் வினியோக உரிமை கிடைக்காத வயித்தெரிச்சல் பார்ட்டிகளோ என்னமோ?

  5. யுஎஸ் பாக்ஸ் ஆபீஸ்

    Read the subtitle ‘ Weekend Estimates – October 1-3, 2010′ and in the list “Robot/Endhiran Ficus/B4U 2.1 (15,260) New 139 2.1”
    Hope everyone understands the difference between’ Estimate’ and ‘ Actual’

  6. RajCh

    USboxoffice – are u dumb as mud. In us most of the 2nd 3rd tier cities don’t report collections as Guys give tickets sitting near the counter -tickets will be bought from stores like staples. Cities like Omaha or Salt Lake City will not have big cinemas to report actuals. It’s exhibitors screening it. It’s more & more getting controlled now in endiran time it was not.
    I believe u must be sitting in 3rd world country. We know the diff between actuals & estimates. I mentioned that even if u omit the last weekend collection (last weekend estimate includes 3rd weekend actuals- understand ) now goto movie city news and check
    Last weekend estimates the 3rd week actuals which is 3.4 mi
    Go give a swirlie.
    Why would we be stomach Burning parties when we say collections are more. We are not in that biz and have no intentions of entering that. I believe karthik has rentrak login & he can get u screen shot.

    Continue living in denial. No one gives a rats a**
    Vino – if u find anything offensive pls moderate & post. Can’t stand these smart ass folks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *