BREAKING NEWS
Search

கோச்சடையான் பாக்ஸ் ஆபீஸ்… 12 நாளில் ரூ 85 கோடி.. இது தியேட்டர் வசூல்!

கோச்சடையான் பாக்ஸ் ஆபீஸ்… 12 நாளில் ரூ 85 கோடி.. இது தியேட்டர் வசூல்!

boxoffice-kochadaiiyaan

சென்னை: கோச்சடையான் படத்தின் தியேட்டர் வசூல் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

இந்தப் படம் வெளியான 12 நாட்களில்  ரூ 85 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

ரஜினி 3 வேடங்களில் தோன்றிய கோச்சடையான், அவரது நேரடிப் படமல்ல. அவரது உடல் அசைவுகளைப் படமாக்கி, அனிமேஷனில் பதிவு செய்து எடுக்கப்பட்ட முதல் இந்தியப் படம்.

இந்தப் படம் குறித்து ஏராளமான எதிர்மறைச் செய்திகள் மீடியாவை ஆக்கிரமித்திருந்தன. பொம்மைப் படம் என்ற கிண்டல்கள் இன்றுவரை ஓயவில்லை.

ஆனாலும் படம் வெளியானதிலிருந்து ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். பொதுவான சினிமா விரும்பிகளும் படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக ரஜினியின் குரல், ரஹ்மான் இசை, கேஎஸ் ரவிக்குமாரின் திரைக்கதை இந்தப் படத்தை ரஜினியின் நேரடிப் படத்துக்கு இணையாக மாற்றிவிட்டது.

வசூலைப் பொருத்தவரை, இந்த மூன்றாவது வாரத்திலும் தமிழகத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது கோச்சடையான்.

தெலுங்கிலும் இந்த மூன்றாவது வாரம் வசூல் திருப்தியாகவே அமைந்துள்ளது. இந்திப் பதிப்பு மட்டும் சரியாகப் போகவில்லை என தயாரிப்பாளரே அறிவித்தது நினைவிருக்கலாம்.

கடந்த மே 23-ம் தேதி வெளியான இந்தப் படம், 12 நாட்களில் திரையரங்குகள் மூலம் மட்டுமே ரூ 85 கோடியைக் குவித்துள்ளது. மற்ற மொழி வருவாய், தொலைக்காட்சி உரிமைகள் மூலம் வந்த வருவாய் அனைத்தும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 145 கோடியை இந்தப் படம் ஈட்டியுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 125 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி




14 thoughts on “கோச்சடையான் பாக்ஸ் ஆபீஸ்… 12 நாளில் ரூ 85 கோடி.. இது தியேட்டர் வசூல்!

  1. Rajagopalan

    Please confirm whether this has overtaken Endhiran…

    Getting confused… I just remember Endhiran collected more than 100 crores in 10 days …

    Thalaivar Record has to be broken by thalaivar only.

    Hence please confirm…

  2. jegan n

    happy to hear this.thalaivar keeps rocking inspite of his age …..waiting for linga @ rajini- shanker combo’ s 200 crore project….long live thalaiva……..

  3. Siva

    நான் தலைவரோட தீவிர ரசிகன். ஆனால் இந்த படம் சரியாக போக வில்லை என்பதே உண்மை. ஒரு நல்ல ரசிகனுக்கு அழகே வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு தன் தலைவனை ரசிப்பது தான். தலைவர்க்கும் இந்த படம் நல்ல போக வில்லை என்பது தெரியும். பின் ஏன் இந்த சமாளிப்பு? சோனக்ஷி சின்ஹா கூட நடிப்பது கூட சரியான முடிவு அல்ல. எங்கள் தலைவர் அப்படியெல்லாம் கிடையாது. ஒரு சில விஷயம் அவர் செய்ய மாட்டார் அப்படி என்று நம்பியவன் நான். அவருக்கு என்று ஒரு கொள்கை உண்டு. அப்படி எப்படி என்று சமாளிப்பவன். ஆனால் அவரோடுய எந்த சமித்திய முடிவும் சரி இல்லை.
    அவர் பாக்காத பணமா இல்லை புகழா?

    யாருக்கு என்ன நிருபிக்கணும்? நெறைய பேரு அவர பத்தி பேசும் பொது கஷ்டமா இருக்கு. நடிப்பதை எல்லாம் விட்டு விட்டு மக்களுக்கு எதாவது நல்லது செய்யட்டும். தமிழக மக்களுக்கு எதாவது செய்வேன்னு சொல்லிட்டே இருக்கார். என்ன செய்ய போகிறார்?
    படம் நடிப்பது தான் செய் நன்றி கடனா? என்னை போன்றவர்கள் அவர் படம் பார்ப்பதும் அவரை புகழ்வதும் மட்டும் தான் செய்துள்ளோம். ஆனால் அவர் படம் ரிலீஸ் ஆகும் போது கொடி கட்டுவதும் பாலபிஷேகம் செய்யும் அடிமட்ட ரசிகனுக்காக என்ன செய்ய போகிறார்?

    என்னோடுய புது வீடு க்ரிஹப்ரவேஷம் போது கூட அவர் புகைப்படம் மாட்டி உள்ளேன். எனவே அவர் நல்ல இருக்கணும் அவர் ரசிகன் என்பதில் பெருமை உள்ள ஒருவனாகவே இந்த பதிவு செய்து உள்ளேன். அவரிடம் இதை கொண்டு செல்லுங்கள். நன்றி.

  4. Elango

    சிவா வை போன்று பல நல்ல ரசிகர்கள் உருவாக என்வாழ்த்துக்கள்!

    வினோ அல்லது என் வழியில் நான் நிறைய எதிர்பார்த்தேன் …. அவரின் பல விஷயங்களை பாராட்டியவன் நான் …. ஆனால் ரஜினி என்று வந்துவிட்டால் மட்டும் … நிலை குலைந்து போகிறார்!

    பத்திரிகை… இனைய தளம் ….நடத்துவதில் …ஒரு தொழில் தர்மம் வேண்டும்… மாமியார் உடைத்தால் மண் சட்டி …மருமகள் உடைத்தால் பொன் சட்டி ..பணியில் நடந்து கொள்வது தான் விசித்திரமாக இருகின்றது!

    வினோ விவசாயி இனைய தளம் ஆரம்பித்த பொழுது சந்தோஷத்தின் உட்சிகே போனவன் நான் … அடடா …பல இளைஞர்களை விவசாயத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி என்று எண்ணினேன்!

    இயற்கை வழி விவசாயம் … நம்மாழ்வார் …கருத்துகள் …
    சுபாஷ் பலேகர் ….எழுதிய zero budget farming முறைகள் .. என்று விவசாயத்தை …விழிப்புணர்வு ஏற்படுத்துவார் என்று பார்த்தல் ..????

    ரஜினி எழுந்தார் …நடந்தார் ….அங்கு போனார் …இங்கு போனார் …இவள்ளவு சம்பாதித்தார் … என்று செய்தி எழுதுவதில் காட்டும் ஆர்வம் ….சமுதாயத்தின் மேல் ஒரு பொறுப்புள்ள பத்திரிகையாளராய் இல்லையே ஏன்?

    தயவு செய்து அந்த இனைய தளத்தை மேம்படுத்தி …விவசாயத்திற்கு உங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் இளைஞர்களே!

  5. Thalaivar fan

    For those who r pretending under the name of fans, wat in the world is wrong with u?
    Muthalla onnu purinjikongga. Avar oru nadigar. Oru nadigara irunthu yarukkum teriyatha intha tamil cinema vai ulaga alavil kondu ponavar.ithu avar senja sathanai illaiya? Avar sambarichatai vide, avarai vachu sambarichavargal niraiya per. Athu yenna puthusa ‘avar nadicha yenna, nadikkalenna yenna’nu mathiri ‘avar padam vanthal yarukku yenna laabamnu kelvi ketkirathu? Appo, inimel avar nadikkave kudatha?
    Andru yentha oru yethirparpum illamal avarai rasicha maananilai odutan indru avarai rasikirargal.
    Heroine yar yendral yenna? Padathil tanne, nijathil illaiye.
    Yethuku yeduthalum, tamilanku yenna senjar, tamil naaduku yenna seiya pogirar? Ithutan naatule periya pirachinai, ille? Avarai rasikkiravanngalam onnum yethirpathu cut out, abhisegamlam pannalle. This is just pure affection. Athukagga avarai arasiyalukku varanumma?
    Avarukku yeppo ishtan varutho, appo varathum.

    professional ethics patri pesubavarku ingey vanthu ‘time waste’ panrathulle samuthayam romba valarum.
    Samuthayam mel ivlo akkarai irunthal, captain-idam sibarisu seiya vendiyathutanne. Arasiyalle irukkaravanggalai yellam onnum ketka tairiyam illatavargal rajiniyai madthum korai solvargal.
    Rajini nadanthar, utkantharnu yellam irukkathum. Kalainyar tv, jaya tv-ku podthiya irunthu captain tv arambichu periya sathanai senji samuthayam valarchikku uruthunaiya iruntha captainku vazhtukkal.

  6. M.MARIAPPAN

    நான் நினைத்ததை அப்படியே தலைவர் பேன் சொல்லி விட்டார் .விஜயகாந்த் கட்சி DEPOSIT இல்லாம போச்சு . அத பத்தி பேச வக்கில்லை .எனக்கு வயது 44 ஆகிறது என் மகனுக்கு 16 வயது ஆகிறது .அவனும் தலைவர் வெறியன் .என் மகன் தலைவர் ஏதாவது செய்வாரு என்று நினைக்க வில்லை .அதுதான் தலைவர் மாஸ் .MR இளங்கோ படம் தோல்வி என்று நீங்கள் சொல்வது பூனை கண்ணை மூடிகிட்டா உலகம் இருண்டு போச்சுன்னு நினைக்குமாம் .

  7. Elango

    \\விஜயகாந்த் கட்சி DEPOSIT இல்லாம போச்சு . அத பத்தி பேச வக்கில்லை

    நண்பர் மாரியப்பன் அவர்களே…..இதை பற்றி பேச வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி ..!

    ஏன்யா ….ஒட்டு மொத்த இந்தியாவே வளர்ச்சி பாதையை நோக்கி வாக்களித்தால் …தமிழகத்தில் மட்டும் இன்னும் அதற்கான வக்கிலாமல் போனது ஏன்???

    அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்து …இந்தியாவின் எதிர்காலத்தை தமிழகத்தில் கணித்து ….ஒரு தீர்கதரிசியாய் நின்ற விஜயகாந்தின் வெற்றி கண்ணுக்கு தெரியவில்லையா?

    1. பாரதீய ஜனதா கூட்டணி…. ஆ தி மு க …. மற்றும் தி மு க இல்லாமல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது சாதனை இல்லையா?

    2. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு லட்ச்கனகான ஓட்டுகள் விழுத்தது சாதனை இல்லையா?

    3. மோடியின் அன்பிற்கும் பாசத்திற்கும் … கட்டி அனைத்து … கன்னத்தை பிடித்து ….அசைக்க முடியாத ஆளாய் போன விஜயகாந்தை உலகமே வியந்து பார்த்தது மறந்து போய் விட்டதா?

    இதற்கெல்லாம் காரணம் என்ன? விஜயகாந்தின் கடின உழைப்பும் ….தமிழகத்தில் ஆ தி மு க …. மற்றும் தி மு க இல்லாமல் ஒரு கூட்டணியை வெற்றிகரமாக உருவாகியதும் தான் என்பதை மறுக்க முடியுமா?

    தோல்வி விஜயகாந்திற்கு இல்லை தமிழகத்திற்கு தான் என்பது ஒரு முட்டாளுக்கு கூட உணரமுடியும்!

    வக்கிலாமல் போனது ….பொன்னான வாய்ப்பை இழந்து நிற்கும் தமிழகத்தில் உள்ள குடிக்கும் …காசுக்கும் …பிரயாணிக்கும் ஆசைப்பட்டு இன்னும் இரண்டாண்டு தவிக்க போகும் முட்டாள்கள் தான்!

    அவர் அமைத்து கொடுத்த இந்த பொன்னான வாய்ப்பை 2016 இல் பயன்படுத்தி கொள்ளுங்கள்!

    உங்கள் வக்கில்லா தனத்தை உங்கள் மகனிடமும்…மற்ற இளைஞர்களிடமும் வளர்த்து விடாதீர்கள்!

  8. sundar

    //….அசைக்க முடியாத ஆளாய் போன …….உலகமே வியந்து பார்த்தது மறந்து போய் விட்டதா?
    ஆமா அசைக்கவேவா முடியில.அடப்பாவமே!

  9. sundar

    @M.மாரியப்பன் sir
    ஒரு கருத்த நினைவுல வச்சிங்க..don’t disturb our enemies,when they are committing suicide(Napoleon,the great french emperor சொன்னது).

  10. sundar

    //தோல்வி விஜயகாந்திற்கு இல்லை தமிழகத்திற்கு தான் என்பது ஒரு “முட்டாளுக்கு” கூட உணரமுடியும்!
    யார் அந்த முட்டாள் என்று எங்களாலும் உணர முடிகிறது.

  11. saranya

    அட ஏன் பா சம்மந்தா சம்மந்தம் இல்லாம பேசிட்டிருக்கீங்க. 12 நாள்ல 85 கோடி நு சொன்னீங்க ஓகே. அதுக்கு அப்பறம் என்னதான் பா ஆச்சு. நானும் எத்தனையோ கமெண்ட் பண்ணி அலுத்து போய்டேன் நீங்க சொல்லுங்க வினோ. உங்களுக்கு தெரியாம இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *