BREAKING NEWS
Search

கோச்சடையான் வசூல் மூன்று நாட்களில் ரூ 42 கோடி.. டிவி உரிமை, இதர வருவாய் உள்பட ரூ 100 கோடி ஈட்டி சாதனை!

கோச்சடையான் வசூல் மூன்று நாட்களில் ரூ 42 கோடி.. டிவி உரிமை, இதர வருவாய் உள்பட ரூ 100 கோடி ஈட்டி சாதனை!

10015036_640490619355340_8692280853995577157_n

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ 42 கோடியை வசூலித்துள்ளது.

டிவி உரிமை மற்றும் பிற வருவாயையும் சேர்த்தால், இந்தப் படம் இப்போதே ரூ 100 கோடியை எட்டி சாதனைப் படைத்துள்ளது.

இதனை ஈராஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதோடு, இதனை Power Of Thalaivar என்றும் வர்ணித்துள்ளது.

கோச்சடையான் படம் படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாகவே வெளிநாடுகளில் சிறப்புக் காட்சிகள் போடப்பட்டன. இந்தக் காட்சிகளுக்கு திரண்டு வந்தனர் ரஜினி ரசிகர்கள். அரங்குகள் நிரம்பி வழிந்தன.

இந்த சிறப்புக் காட்சியில் மட்டுமே ரூ 5கோடிக்கு மேல் வசூல் கிடைத்தது. மேலும் படம் குறித்த சாதக விமர்சனங்கள் வந்ததால், படம் வெளியான அன்று அத்தனை திரையரங்குகளிலும் திருவிழாக் கோலம்தான்.

முதல் மூன்று நாட்களில் மட்டும் கோச்சடையான் தியேட்டர்கள் மூலம் ரூ 42 கோடியை ஈட்டியுள்ளது கோச்சடையான். இதில் இந்தியாவில் வசூலான தொகை மட்டும் ரூ 30 கோடி. வெளிநாடுகளில் ரூ 12 கோடி. குறிப்பாக வளைகுடா மற்றும் மலேசியாவில் படத்துக்கு சிறப்பான வரவேற்பு இருந்தது.

சென்னை மாநகரில் மட்டும் இந்த மூன்று நாட்களில் ரூ 4.16 கோடியைக் குவித்து சாதனைப் படைத்துள்ளது கோச்சடையான்.

eros-state

ரூ 100 கோடி

திரையரங்க வசூல் தவிர்த்து, 6 மொழிகளில் படத்தின் சேட்டிலைட் உரிமைகள், இசை வெளியீட்டு உரிமை, கார்பன் மொபைல் மற்றும் ஏர்டெல்லுடன் போட்ட ஒப்பந்த உரிமை, ரிங் டோன் உரிமை, வீடியோ கேம்ஸ் என அனைத்து வழியிலும் வந்த வருவாய் ரூ 100 கோடியைத் தாண்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சினிமா வசூலில் இது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில்…

இந்தப் படம் அமெரிக்காவில் அதிக அரங்குகளில் வெளியானது. இன்னும் பல அரங்குகளின் வசூல் நிலவரம் வெளியாகவில்லை. அதையும் சேர்த்தால் வசூல் இன்னும் அதிகமாக இருக்கும்.

-என்வழி




4 thoughts on “கோச்சடையான் வசூல் மூன்று நாட்களில் ரூ 42 கோடி.. டிவி உரிமை, இதர வருவாய் உள்பட ரூ 100 கோடி ஈட்டி சாதனை!

  1. VAZEER, KUWAIT

    கிரேட்…. “பொம்மை”யாக வந்தாலும் “உண்மை”யாக வந்தாலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான் என்பதற்கு மீண்டுமொறு சான்று…. 3 நாட்களில் 100 கோடி வசூலித்துள்ளதே இது “பொம்ம” படமா இல்ல “செம்ம” படமா? உங்க மனசாட்சியை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்….

  2. Theodore

    பிரமாதம்! ஆனால் இது எந்திரன் வசூலை விட குறைவா ? ஏனெனில், எந்திரன் வீகெண்ட் கலக்சென் சுமார் 100 கோடி என்று கேள்விப்பட்டேன்.

  3. Deen_uk

    உண்மையில் எனக்கு இது ஒரு மோசன் கேப்சர் படமாக தெரியவில்லை.தலைவரின் குரலில் படம் பார்க்கும்போது தலைவரின் வழக்கமான உயிரோட்டமுள்ள கலக்கல் படம் தான்.இல்லையென்றால் ஒரு காட்சியில் நம்மை அறியாமல் அழுகை வந்து இருக்காது..தலைவர் always rocks ..செம விறுவிறுப்பு மற்றும் ரஹ்மானின் backround ஸ்கோர்..நம்மை ஒரு மாயாஜால உலகுக்கு கொண்டு செல்வது உண்மை…கலக்கல் படம்.தேங்க்ஸ் டு triple R ( ரஜினி ரஹ்மான் ரவிக்குமார் )!!!! மற்றும் எனது அன்பு சகோதரி சௌந்தர்யாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *