BREAKING NEWS
Search

இதோ.. சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் பட பாடல்கள்!

கோச்சடையான் பாடல்கள் லிஸ்ட் – சோனி மியூசிக் வெளியிட்டது!

1966869_10202400230539440_1675882697_n

சென்னை: மார்ச் 9-ம் தேதி வெளியாகவிருக்கும் கோச்சடையான் பட இசைத் தட்டில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பட்டியலை இன்று வெளியிட்டது சோனி மியூசிக் நிறுவனம்.

இந்தப் பட்டியல்படி மொத்தம் 9 பாடல்கள் இசைத் தட்டில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலை அமர கவிஞர் வாலி எழுதியுள்ளார். மற்ற பாடல்களை வைரமுத்து எழுத, ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அவற்றின் விவரம்…

1. எங்கே போகுதோ வானம்..  

எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ள இந்தப் பாடல் ஏற்கெனவே ஆடியோ டீசராக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

2. மெதுவாகத்தான்…

அமர கவிஞர் வாலி எழுதிய பாடல் இது. சூப்பர் ஸ்டாருக்காக அவர் எழுதிய கடைசி பாடல். எஸ் பி பாலசுப்பிரமணியம் – சாதனா சர்க்கம் பாடியுள்ளனர்.

3. மாற்றம் ஒன்றுதான் மாறாதது…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் சொந்தக் குரலில் பாடிய பாடல் இது. ஒரு பாடல் மாதிரி இல்லாமல், வசன கவிதை மாதிரி இந்தப் பாடல் வருகிறது. ரஜினியுடன், ஹரிச்சரணும் பாடியுள்ளார். பாடலில் இடம் பெறும் ஜதி: வி உமாசங்கர்

4. மணப்பெண்ணின் சத்தியம்..

இந்தப் பாடலை லதா ரஜினி பாடியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லதா பாடும் திரைப்படப் பாடல் இது.

5. இதயம்…

சீனிவாஸ், சின்மயி குரல்களில் ஒலிக்கும் இந்தப் பாடல் ஒரு டூயட்.

6. கோச்சடையான்…

இதுதான் படத்தின் தீம் பாடல்.. கேட்க கிட்டத்தட்ட.. தளபதி.. எங்கள் தளபதி பாடல் மாதிரி ஒலிக்கிறது.

7. மணமகனின் சத்தியம்…

ஹரிச்சரண் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். லதா ரஜினி பாடியதன் ஆண் குரல் பதிவு இது.

8. ராணாஸ் டிரீம்

ராணாவின் கனவு எனும் பெயரில் வரும் இந்த இசைத் தொகுப்பை, லண்டன் செஸன்ஸ் ஆர்க்கெஸ்ட்ராவைக் கொண்டு உருவாக்கியுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

9. கர்ம வீரன்

இசைத் தட்டின் கடைசிப் பாடல் இது. படத்தின் க்ளைமாக்ஸ் பாடலும் கூட. ஏ ஆர் ரஹ்மானே பாடியுள்ளார். அவருடன் ரைஹானாவும் பாடியுள்ளார்.

kochadaii-posters

-என்வழி




12 thoughts on “இதோ.. சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் பட பாடல்கள்!

  1. ramesh

    வாங்க தலைவா……………வாழ்த்துக்கள் தலைவா…………………….

  2. R.Gopi

    //2. மெதுவாகத்தான்…
    அமர கவிஞர் வாலி எழுதிய பாடல் இது. சூப்பர் ஸ்டாருக்காக அவர் எழுதிய கடைசி பாடல். எஸ் பி பாலசுப்பிரமணியம் – ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர்.//

    அது SPB & சாதனா சர்கம்….. அப்படிதான் சி.டி.கவர்ல இருக்கு……..
    ___________

    திருத்தப்பட்டது. நன்றி
    -வினோ

  3. Marthu

    இந்த “எங்கே போகுதோ வானம் பாடலை தினமும் கேட்டுக்கொண்டே இறுக்கிறேன்…தலைவர் நம்மோடு பேசுவது போலவே இருக்கும்……

    அந்த கே எஸ் ஆர், அனுஷ்கா புராஜக்ட்ட சற்று விசாரித்து எழுதுங்கள்…அதநம்புவதா வேண்டாமா எனத்தெரியவில்லை…

  4. Anandkg

    Waiting for the Audio release. People like Rajagopal should understand that this is not a full length featur film. It is an animated film that too INDIA’S FIRST Performance captured photo realistic film in 3D. Similer to Avatar and Tintin. You may not see a LIVE thalaivar, you will enjoy thalaivar in a different format, we need to accept the change of latest technology that too for the first time in INDIA by Thalaivar.

    Lets lookforward to welcome the one and only Kochadaiyan.

  5. JAI

    வாழ்த்துக்கள் தலைவா !
    எந்திரனின் சாதனையை தகர்ப்பதற்கு!!!

  6. கணேசன் நா

    காத்திருக்கிறோம் தலைவா! விருந்திற்கு…………

  7. endhiraa

    சூப்பர் ! பாடல்களுக்காக காத்திருக்கிறேன் !! நன்றி வினோ ஜி !

  8. srikanth1974

    கர்ம வீரன் பாடல் உலகத் தமிழர்களின் தேசிய கீதமாக ஒலிக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *