BREAKING NEWS
Search

கோச்சடையான் இசை வெளியீட்டில் ரஜினியுடன் அமிதாப் பங்கேற்பு

கோச்சடையான் இசை வெளியீட்டில் ரஜினியுடன் அமிதாப் பங்கேற்பு

Rajinikanth’s Kochadaiyaan Audio Release Date official Confirmed

சென்னை: கோச்சடையான் – தி லெஜன்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், அமிதாப் பச்சன் பங்கேற்கிறார்.

‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 9-ம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் நடக்கிறது.

காலை 10.30 மணிக்கு நடக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டும் 800 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சன், நாயகி தீபிகா படுகோன் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகையர் அத்தனை பேரும் பங்கேற்கின்றனர்.

விழாவில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகிய இருவரும் கலந்துகொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

படத்தைத் தயாரிக்கும் ஈராஸ் இண்டர்நேஷனல், மீடியா ஒன் நிறுவனங்கள் விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
vikramasimha-telugu-latest-85839723525188c183a026.72446435

தெலுங்கில்…

தெலுங்கில் விக்ரம சிம்ஹா என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீடு அடுத்த நாள், மார்ச் 10-ம் தேதி ஹைதராபாதில் வெளியாகிறது. இதில் ரஜினியுடன் சிரஞ்சீவி, மோகன்பாபு, வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

-என்வழி




5 thoughts on “கோச்சடையான் இசை வெளியீட்டில் ரஜினியுடன் அமிதாப் பங்கேற்பு

  1. srikanth1974

    இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு big boss கள் கலந்து கொள்ளும் பெருவிழா
    மட்டுமல்ல இது எங்களின் திருவிழாவும் கூட

  2. மிஸ்டர் பாவலன்

    ரஜினியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் கமல் கலந்துக்கறது
    இல்லை போல இருக்கே… ரொம்ப busy ஆக இருக்காரோ!
    கோச்சடையான் சாதனை படைக்க எங்கள் வாழ்த்துக்கள்!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  3. Premkumar

    Hi sir,
    How can we get the tickets for audio release function?
    Is it possible to get online.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *