BREAKING NEWS
Search

கோச்சடையான் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்! – படங்கள்

கோச்சடையான் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்!

kochadaii-3a

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் இசை வெளியீட்டு விழா ஜூரம் எங்கும்… மீடியா, ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் என எல்லோரின் ஆவலையுமே எகிற வைத்துள்ளது படம் குறித்து தினசரி வரும் தகவல்களும் படங்களும்.

இந்த விழாவில் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்பது, ஒவ்வொரு ரசிகரின் கனவாகவும் உள்ளது. கிட்டத்தட்ட தலைவர் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு இணையான கனவு இது.

சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ்கள் தரப்பட்டு வருகின்றன. அப்படி தரப்பட்ட ஒரு 3 டி அழைப்பிதழின் நகல் உங்கள் பார்வைக்கு.

இந்த அழைப்பிதழ்படி நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் அமிதாப் அல்ல… ரஜினி ரசிகரான ஷாரூக்கான். இவருடன், தலைவரின் சினிமா குரு கே பாலச்சந்தர், எஸ் பி முத்துராமன், ஏவிஎம் சரவணன், நண்பர் மோகன் பாபு, இயக்குநர் ஷங்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மீடியாவுக்கான அழைப்பிதழ் நாளைதான் தரப்பட உள்ளது. ரசிகர்களில் 200 பேருக்கு மட்டும் ராகவேந்திரா மண்டபத்தில் அனுமதி பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அது போதாது என்பதால் தங்களுக்கு அதிகமாக அனுமதி சீட்டு வேண்டும் அல்லது மண்டபத்தில் வைத்து தனியாக தலைவர் பார்த்து சிடி வழங்கினால் கூட போதும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1926083_293071877514677_898524019_o

இதற்கிடையே, கோச்சடையான் இசை வெளியீட்டு நிகழ்வை நேரலையாக தனது இணையதளத்தில் ஒளிபரப்புகிறது ஈராஸ் நிறுவனம்.

-என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “கோச்சடையான் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்! – படங்கள்

  1. anbudan ravi

    இப்படி தலைவரின் செய்திகளை சுடச்சுட அள்ளித்தெளித்து எங்களை திக்கு முக்காட வைத்துவிட்டீர்களே நண்பரே….எதிர்பார்ப்பு எகிறிவிட்டது…..படம் எப்பொழுது நண்பரே வெளிவருகிறது? மேலும் தள்ளிப்போகாமல் இருந்தால் நல்லது.

    அன்புடன் ரவி.

  2. sokka1288

    Album rocking…( only after two hearing .. it ll change after songs in repeat mode )
    MY pick are
    Matram ondru than maradathu
    Karma veeran
    Engal Kochadaiyaan
    Ranas dream – all the above mentioned are totally different songs from usual music , especially Rana’s Dream orchestra superb.
    maanapenin sathiyam and manamaganin sathiyam are carnatic feel songs
    Simply semma album

  3. மிஸ்டர் பாவலன்

    உலக நாயகன் கமல்ஹாசன் கண்டிப்பாக கலந்து கொண்டிருக்க வேண்டிய
    நிகழ்ச்சி இது. ஆயிரம் காரணம் கமல் சொன்னாலும் அவற்றை ஏற்க
    முடியாது! இது போன்ற அவர் செயல்கள் தான் அவர் ரசிகர்களுக்கு
    புதிராக உள்ளது! கோச்சடையான் பெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  4. srikanth1974

    திரு.பாவலன் சார் அவர்களின் ஆதரவு கருத்து
    எங்களுக்கு மிகவும் ஆறுதல் அளித்துள்ளது.
    மிக்க நன்றி சார்.
    என்றும் உங்கள் அன்புச்சகோதரன்
    ப.ஸ்ரீகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *