BREAKING NEWS
Search

இன்று முதல் கோச்சடையான் முன்பதிவு ஆரம்பம்!

இன்று முதல் கோச்சடையான் முன்பதிவு… அதிரும் அரங்குகள்!

MDSF330877-M

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் வரும் 23-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

இதற்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது. அபிராமி மெகா மாலில் மட்டும் மூன்று தினங்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கிவிட்டது.

ரஜினியின் கோச்சடையான் படம் கடந்த 9-ந்தேதி வெளிவர இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் வெளியீடு வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

2டி ரெடி, 3டி தாமதம்

இப்படம் 6 மொழிகளிலும் 2டி வடிவத்தில் தயாராகி ஏற்கனவே தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டது. இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் 3டி வடிவத்தில் தயாரான படத்துக்கும் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. 23 – ந்தேதி படம் உறுதியாக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் முன்பதிவு

இதையடுத்து தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியது. சென்னையில் சத்யம், சாந்தம், செரீன், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, உட்லன்ட்ஸ், சாந்தி, ஆல்பட், அபிராமி, பி.வி.ஆர். பெரம்பூர், எஸ் 2, ஏ.வி.எம். ராஜேஸ்வரி, உதயம் சூரியன், சந்திரன், சைதை ராஜ், மகாராணி, ஐட்ரீம், பாரத், வேளச்சேரி லக்ஸ், மாயாஜால் உள்ளிட்ட 50 அரங்குகளில் திரையிடப்படுகிறது.

இவற்றில் சத்யம் கட்டுப்பாட்டில் உள்ள அரங்குகள், மாயாஜால், ஐநாக்ஸ் போன்ற பெரிய மால்களில் இன்னும் புக்கிங் ஆரம்பமாகவில்லை. விரைவில் ஆரம்பமாகும் என அறிவித்துள்ளனர்.

6000 அரங்குகள்

தமிழ்நாட்டில் மட்டும் 500 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்படுகிறது. உலகம் முழுவதும் ஏற்கனவே 4 ஆயிரம் தியேட்டர்களில் இப்படத்தை திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தன. தற்போது மேலும் 2 ஆயிரம் தியேட்டர்களில் படம் திரையிடப்பட உள்ளது. மொத்தம் 6 ஆயிரம் தியேட்டர்களில் படம் வெளியாவதாக ஈராஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

2 மணி நேரத்தில் 1,25,000 டிக்கெட்டுகள்

சென்னையில் கடந்த 9 – ந்தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட போதே இரண்டு மணி நேரத்தில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. பிறகு முன்பதிவு நிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

அபிராமியில்…

அமிராமி மெகா மாலில் நான்கு அரங்குகளிலும் கோச்சடையான் வெளியாகிறது. இந்த அரங்குகளில் டிக்கெட் முன்பதிவை மூன்று தினங்கள் முன்பாகவே தொடங்கிவிட்டனர். அபிராமியில் முதல் வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீரும் நிலையில் உள்ளன.

-என்வழி




8 thoughts on “இன்று முதல் கோச்சடையான் முன்பதிவு ஆரம்பம்!

  1. Rajpart

    மதுரை போன்ற நகரங்களில் தியேட்டர் பெயரையே இன்னும் அறிவிக்கவில்லை. மறுபடியும் தேதி மாறுமோ என்ற சந்தேகம் உள்ளது. 2D & 3D வித்தியாசம் என்ன என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  2. Rajagopalan

    y my comment removed?
    But still many theatres didnt open in chennai…I am just asking why it is so?

  3. Rajini Fan (Before Kochadayan)

    டேய் ஏன்டா புழுகுறீங்க……
    அபிராமில இன்னும் saturdayke டிக்கெட் இருக்குடா….
    விட்டா 100 நாளைக்கும் டிக்கெட் fullnu சொல்லுவீங்க…

    ஓடாத படத்துக்கு தேவை இல்லாத விளம்பரம்…

    பாபா படத்த விட இது மோசமா flop ஆகா போகுது

  4. venkatesh

    Dear All, am in Kenya – Nairobi, came here for Project work…. Is the Film releasing in Nairobi by any chance….

  5. Rajini Fan (Before Kochadayan)

    எதற்காக என் கமெண்ட் அழிக்கிறீர்கள் வினோ…..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *