BREAKING NEWS
Search

இசைப்பிரியாவை உயிருடன் பிடித்து சித்திரவதைப்படுத்தி கொன்ற சிங்கள ராணுவம் – புதிய வீடியோ

இசைப்பிரியாவை உயிருடன் பிடித்து சித்திரவதைப்படுத்தி கொன்ற சிங்கள ராணுவம் – புதிய வீடியோ

 

லண்டன்: பிரபாகரன் மகள் என சந்தேகித்து விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த download (1)இசைப்பிரியாவை சிங்கள ராணுவத்தினர் உயிருடன் பிடித்து சித்திரவதை செய்து கொன்ற புதிய வீடியோவை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்கும் நேரத்தில், அந்த நாடு எத்தகைய மாபாதகங்களைச் செய்துள்ளது என்பது அம்பலமாக்கும் வகையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

பிரிட்டனை மையமாக கொண்டியங்கும் சானல் 4 ஊடகம் இலங்கை இராணுவம் இறுதிப்போரின் போது நிகழ்த்திய போர்க்குற்றங்களை காணொளியாக தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றது.

அந்த வரிசையில் இன்றும் ஒரு சிறு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கtwo 2ள் மேலும் வெளியாகும் என்றும் தெரிகிறது.

காமன் வெல்த் மகாநாடு விரைவில் நடைபெற உள்ள வேளையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது, இலங்கையை மேலும் சிக்கலுக்குள் தள்ளி உள்ளது.

விடுதலைப் புலிகளின் ஊடக செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த இசைப்பிரியா இலங்கை இராணுவத்தால் பல பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட அதிர்ச்சிக்குரிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்தக் காணொளியும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இசைப்பிரியாவைப் பிடிக்கும் இராணுவம் அவரை பிரபாகரனின் மகள் என கூறுவதையும் அதைக் கேட்ட இசைப்பிரியா “ஐயோ அது நானில்லை” என அழுவதும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

இசைப்பிரியா போர் முனையில் கொல்லப்பட்டார் என்ற இலங்கை அரசின் பொய்யை இல்லைkolai என்றும், இசைப்பிரியா இலங்கை இராணுவத்தால் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பதையும் இந்த வீடியோ தெளிவாக காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்

வீடியோ..




3 thoughts on “இசைப்பிரியாவை உயிருடன் பிடித்து சித்திரவதைப்படுத்தி கொன்ற சிங்கள ராணுவம் – புதிய வீடியோ

  1. Venkataramana

    இந்த கொடுமை இனி யாருக்கும் நடக்க கூடாது, இவை அனைத்தும் இந்தியாவுக்கு தெரியும் மேலும் இதில் இந்திய அரசுக்கு முழு பங்கு உண்டு. சோனியா நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *