BREAKING NEWS
Search

காதலுக்கு எதிரான தமிழகத்தின் சாதி காட்டுமிராண்டித்தனம் ஒரு தொடர்கதை…

தமிழகத்தின் சாதி காட்டுமிராண்டித்தனம் ஒரு தொடர்கதை…

honour_killingகாதல் திருமணங்கள் இயல்பாய் நடக்கின்றன… அதற்கு எதிரான வன்முறைகள்தான் காலகாலமாய் சாதி வெறியர்களாக நாடகங்களைவிட திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன.

2010-ம் ஆண்டு ஒரத்தநாட்டுக்கு அருகில் உள்ள சூரக்கோட்டையைச் சேர்ந்த கள்ளர் இனப் பெண் 24 வயது அபிராமியும், தலித் இளைஞன் மாரிமுத்துவும் காதலில் விழுந்தனர்.

விஷயம் தெரிந்ததும், அபிராமி வீட்டில் 35 வயது குடிகாரன் ஒருவனிடம் இரண்டாம் தாரமாகப் பிடித்துக் கொடுக்க முயற்சித்தனர். அதிலிருந்து தப்பி, மாரிமுத்துவுடன் ஓடிப் போனார்கள். அடைக்கலம் தர ஆளில்லை. ஊரூராய் அலைந்து, கடைசில் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் தஞ்சமடைந்தனர். அவர்கள் ஆதரவில் திருமணம் செய்து கொண்டனர்.

கும்பகோணத்தில் செட்டிலானார்கள். இரண்டு ஆண்டுகள் போராட்டமும் சந்தோஷமுமாக ஓடியது வாழ்க்கை. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. மீண்டும் சூரக்கோட்டைக்கே போய் வாழும் ஆசையுடன் கிராமத்துக்குத் திரும்பினர் இருவரும்.

மாரிமுத்துவின் வீட்டில் ஏற்றுக் கொண்டனர். ஒரு நாள் அபிராமியின் அண்ணன் திடீரென போனில் வந்தான். குழந்தைக்கு தாய்மாமன் சீராக தங்க சங்கிலி வாங்கி வைத்திருக்கிறேன். உன் கணவரை அனுப்பி வாங்கிக்கம்மா என்று கூற, யதார்த்தமாய் மச்சானை சந்திக்கப் போனான் மாரிமுத்து.

போனவன் அன்று திரும்பவே இல்லை. அவனது பிணம், காவிரி ஆற்றங்கரையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சிதறிக் கிடந்தது. அன்றே அந்தக் கொலைக்குப் பொறுப்பேற்று அபிராமியின் அப்பனும் அண்ணனும் சரணடைந்தார்கள். ஆனால் சாட்சிகள் இல்லை என்று நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துவிட்டது.

வெளிச்சத்துக்கு வராத மாரிமுத்துகள், இளவரசன்கள் எத்தனை பேரோ.. போலீஸ், சட்டம், நீதி எல்லாவற்றிலுமே நீக்கமற நிற்கிறது சாதி… அதன் விளைவு இந்தக் கொடுமைகளை ஆரம்பத்திலேயே தடயமின்றி அவர்களால் அழிக்க முடிகிறது!!

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *