BREAKING NEWS
Search

எப்போது தொடங்கப் போகிறீர்கள்?

எப்போது தொடங்கப் போகிறீர்கள்?

Elavarasan_jpg_1507648g
வ்வளவுதான்… ஒரு இளைஞனின் வாழ்க்கையை பல லட்சம் மக்கள் பார்க்க, மனம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத கொடூரத்துடன் கொன்றேபோட்டுவிட்டார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால் சாதி வெறி, காதல் தோல்வி… என்று சொல்லிவிட்டுப் போய்க் கொண்டே இருக்கும் இந்த சமூகம்.

ஆனால் இந்தக் கொலை… இந்த தமிழ்ச் சமூகம் எத்தகைய காட்டுமிராண்டிக் கூட்டம் என்பதன் குறியீடு.

எப்பேர்ப்பட்ட கொடூரத்தையும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் சிந்தி, கருத்து உதிர்த்துவிட்டு கடந்து போய்க்கொண்டே இருக்கும் சுயநலமிகளே இந்த சமூகத்தின் பெரும்பான்மை என்ற அம்மணத்தை துகிலிருந்து காட்டிய கொலை இது!

இதையெல்லாம் விட கொடுமை… கொன்ற கூட்டத்தை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்களை அடக்கி அடக்கி ஓரமாய் நிற்க வைத்த சட்டத்தின் கொடுமை.

என்ன நடக்கிறது இங்கே… இளவரசனின் இறுதிப் பயணத்துக்குக்கூட திருமாவளவனை வரக்கூடாது என தடுத்த சட்டம், இளவரசன் – திவ்யா பிரிந்தே தீர வேண்டும் என்ற வன்முறையை கட்டவிழ்த்த காடையர்களுக்கு பக்கத் துணையாக இருந்ததே!

நான் என் அம்மாவுடன் போகிறேன், காதல் கணவன் வேண்டாம் என ஒரு இளம் பெண் சொல்லும் வரை வாய்தாக்கள் தந்ததே… காட்டுமிராண்டிகளுக்கு மட்டும்தான் காவலா இந்த சட்டம்?

தலித் மக்கள் மட்டுமே அண்ணல் அம்பேத்கர், பெரியாரின் பேரன்கள் அல்ல… அவர்களால் பலனடைந்த அனைவருமே ஒரு சொந்தம் என்ற உணர்விருந்தால் இந்தக் கொலை நடந்திருக்குமா?

பெரும் தலைவர்கள், மக்கள் தலைவர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் பெரியவர்களுக்கு இன்று இந்த உணர்வில்லையே. அவர்களுக்கு இருந்தால்தானே, அவர்களைத் தொடரும் இளைஞர்களுக்கு இருக்கும்.

ஒரு கொடிய உண்மை… இன்றைய இளைஞர்களில் சாதி வெறி… அல்லது குறைந்தபட்ச சாதி உணர்வு இல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ila-last-17

அந்த உணர்வைக் கொல்ல வேண்டிய நேரம் வந்திருக்கிறது. தம்பி இளவரசன் கொலைக்கான உண்மையான இரங்கல், ஒவ்வொருவரும் தங்கள் சாதிய உணர்வைக் கொல்வது மட்டுமே!

எப்போது தொடங்கப் போகிறீர்கள்?

-வினோ

என்வழி
10 thoughts on “எப்போது தொடங்கப் போகிறீர்கள்?

 1. Raj

  தொடங்கலாம் மிஸ்டர் வினோ. ஆனால் அதற்கு முன்னாள் இந்த ஜாதி வாரியான இட ஒதிக்கீட்டை ஒழிப்பீர்களா?

 2. varadhu

  இளவரசனின் மரணம் நிச்சயமாக நாமெல்லாம் வருத்தப்படவேண்டிய ஒன்றுதான் .ஆனால் இத்தனை வருடம் தன்னை ஈ எறும்பு அண்டாமல் பாசத்தை ஊட்டி வளர்த்த தாயையும் தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தையையும் பற்றி கவலைபடாமல் தற்கொலை செய்துகொண்டது மிகவும் வருந்ததக்கது . சுயநலமற்ற தாயின் தந்தையின் அன்பை விடவா பெரியது காதலின் அன்பு.காதலர்கள் இதுபோன்ற தவறான முடிவுகளை காதலர்கள் எடுக்காமல் இருப்பதே நல்லது .எனக்கு அந்த பெற்றோரின் நிலையை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது.இதற்காகவா அந்த பிள்ளையை அவர்கள் பெற்றெடுத்தார்கள்.

 3. மு. செந்தில் குமார்

  “எப்பேர்ப்பட்ட கொடூரத்தையும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் சிந்தி, கருத்து உதிர்த்துவிட்டு கடந்து போய்க்கொண்டே இருக்கும் சுயநலமிகளே இந்த சமூகத்தின் பெரும்பான்மை என்ற அம்மணத்தை துகிலுரித்து காட்டிய கொலை இது!”

  – எதார்த்தத்தில் சராசரி மனிதனால் அப்படித்தான் இருக்க முடிகிறது.

  என்னை பொருத்தவரை சாதி உணர்வு கிடையாது. அது முளை விட முடியாத சூழலிலேய வளர்க்கப்பட்டுள்ளேன்.

  என் திருமணம் ஒரு கலப்புத்திருமணம். ஆனால் காதல் திருமணம் அல்ல. இரு வீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடனேயே நடை பெற்றது. ஜாதியில் மட்டும் வேறு அல்ல. என் மனைவியின் தாய் மொழியும் வேறு. அதுமட்டும் அல்ல எங்கள் இருவரின் சாதியும், சமூகத்தில்/சமூகத்தால் ஒரே தளத்தில் வைத்து பார்கக்கூடியவையும் அல்ல.

  என் வருத்தம், வருத்ததோடு நின்றுவிடாமல் ஜாதி உணர்வை களைய நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்பது தான். இது சார்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் திறம்பட செயல் பட வேண்டும் என்பதே என் அவா.

  இரு வேறு சாதியினால் உண்டாகிற சண்டையோ குறைந்த பட்சம் வாக்குவாதமோ இதுவரை என்னுடைய நேரடி அனுபவத்தில் நான் வசித்த/ வசிக்கிற இடத்திலோ, படித்த பள்ளியிலோ, கல்லூரியிலோ அலுவலக பகுதியிலோ கண்டதில்லை. இது வரை செய்தியின் வாயிலாகத்தான் கேள்விப்பட்டுகொண்டிருக்கிறேன்.

  பல ஆண்டுகளுக்கு முன், என் அறையில் உடன் தங்க ஒருவர் (முன்பின் தெரியாதவர்) வந்தார். இரண்டு மாதங்களில் சென்று விட்டார். ஒரு ஞாயிறு அவர் வெளியில் சென்றுவிட்டு வந்தார். எங்கே சென்றுவிட்டு வருகிறீர்கள் என்று கேட்டேன். அவர் சார்ந்த சாதி சங்கத்தின் கூட்டத்திற்கு என்று சொன்னார். சாதி இல்லையே என்று நான் சொன்னதற்கு…

  அவர் சொன்னது- (இரண்டு மணி நேர வாதத்தின் சுருக்கம்)முட்டாள் தான் அப்படி சொல்வான். மாட்டில் ஜாதி இருக்கிறது (ஜெர்சி, சிந்து, நர்மதா); நாயில் ஜாதி இருக்கிறது; தாவரத்தில் ஜாதி இருக்கிறது; ஏன் மண்ணில் கூட சாதி (செம்மண், கரிசல் மண்..) இருக்கிறது. மனிதனிடம் மட்டும் ஜாதி இல்லை என்று எப்படிச்சொல்கிரீர்கள் என்று கேட்டார்.

  இந்த கருத்தை உங்களுக்கு யார் சொன்னது என்று கேட்டதற்கு, அவர் சார்ந்த ஜாதி சங்கம் என்று சொன்னார். வள்ளுவனை, பாரதியை, பெரியாரை முன் வைத்து எவ்வளவு சொல்லியும் / வாக்குவாதம் செய்தும் தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.

  அந்த இளைஞனை தவறாக மூளைச்சலவை செய்தவர்களே சமூகத்தில் ஜாதி என்கிற புற்று நோயின் ஊற்றுக்கண்.

 4. குமரன்

  தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு என்பது பன்னெடுங்காலமாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான our சிறு இழப்பீடு, அது நிச்சயம் அந்தக் கொடுமைகளுக்கு ஈடு செய்ய முடியாதது ஆகும். இதைஒருவிதப் பரிகாரமாகவும் பார்க்க வேண்டும்.

 5. Ganesh Shankar

  //தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு என்பது பன்னெடுங்காலமாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான our சிறு இழப்பீடு, அது நிச்சயம் அந்தக் கொடுமைகளுக்கு ஈடு செய்ய முடியாதது ஆகும். இதைஒருவிதப் பரிகாரமாகவும் பார்க்க வேண்டும்.//

  சரி தான்.ஆனால், அது இன்று இல்லை.அது அவ்வாறாக செயல்பாடாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அம்பேத்கர் போன்ற பெரும் மனிதர்கள் விரும்பி ஏற்படுத்தி அதற்கும் ஒரு காலக்கெடுவுடன் தான் வைத்திருந்தார்.
  காலக்கெடுவுடன் இல்லை என்றால் இதுவும் ஒரு அடக்குமுறை தான்.
  இன்று இடஒதுக்கீடு என்பது அரசியலுக்கு தான் உதவுகிறது மேலும் காலக்கெடு தாண்டி செயல் பட்டு கொண்டு இருக்கும் பொது ஒரு அடக்குமுறை மற்றும் தரத்திலும் குறையை ஏற்படுத்த தான் செய்யும்.
  “கிரீமி லேயர்” என்ற முறையை இன்று நீக்க வேண்டும் என்று குரல் ஒலித்து கொண்டு இருக்கும் போது,இன்று இது அரசியலை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறது.

 6. குமரன்

  ///காலக்கெடுவுடன் தான் வைத்திருந்தார்.//

  அந்தக் காலக் கேடு போதுமானது இல்லை, இதை உணர்ந்துதான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப் பட்டது.

  குறைந்த பட்சம் சில நூறு ஆண்டுகளாவது அடக்குமுறைக்கு அடிமைத் தனத்துக்கு ஆளானவர்களின் வழித் தோன்றல்களுக்கு, வெறும் அறுபது ஆண்டுகள் தந்த இட ஒதுக்கீடு போதுமானதாக இருக்குமா/ இருந்ததா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

  இன்றைய மாறிய நாகரிக உலகில், எதிலும் “level playing field” அதாவது சமதளமான மைதானம் தேவை என்ற கருத்து ஏற்கப் படுகின்றது. அப்படியானால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்குக் கிடைத்திருக்கும் வசதிகளும் வாய்ப்புகளும், முன்னேறிய சமூகத்துச் சிறுவர்களின் வசதிகளையும் வாய்ப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இன்னமும் குறைபாட்டுடனே இருப்பதை எவரும் உணர முடியும்.

  ஏதோ சிலர் முன்னேறிவிட்டதால், ஒட்டு மொத்தமாக தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டைக் கேள்விக் குறி ஆக்க கூடாது.

  ஆனால், நாங்களும் பிற்பட்ட மக்களே என்று கூறி சலுகைகளை அனுபவிக்கும் சாதியினர், தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் மீது வன்கொடுமையைத் தொடர்ந்து செய்துவருவது வேதனை அளிக்கிறது. ஒருவேளை, தலித்துகள் மீது வன்கொடுமை செய்யும் சாதியினருக்கு, எந்தெந்த ஊர்களில் அப்படிச் செய்கிறார்களோ, அந்த ஊரைச் சேர்ந்த வன்கொடுமை செய்யும் சாதினருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை சில ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதை ஒரு தண்டனையாகத் தருவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். அப்படிப்பட்ட தண்டனைகள் ஒருவேளை வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டக் கூடும்.

 7. P.SIVAKUMAR

  அந்த உணர்வைக் கொல்ல வேண்டிய நேரம் வந்திருக்கிறது. தம்பி இளவரசன் கொலைக்கான உண்மையான இரங்கல், ஒவ்வொருவரும் தங்கள் சாதிய உணர்வைக் கொல்வது மட்டுமே!

  GOOD

 8. Ganesh Shankar

  //அந்தக் காலக் கேடு போதுமானது இல்லை, இதை உணர்ந்துதான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப் பட்டது.//

  இது தவறு.போதுமானது தான்.அதிலும் உள் ஒதுக்கீடு மேலும் பல சாதிகள் தாழ்தபட்டவை என்றும் பிற்படுதபட்டவை என்றும் கூறுவதனாலும்,தாங்களுக்கு கொடுத்து இருக்கும் சலுகையை பயன்படுத்தாமல் இருப்பதனாலும் தான் முன்னேற வில்லையே தவிர.
  ஒருவருக்கு சலுகை கொடுத்து பட்டம் பெற்று முன்னேறும் வாய்ப்பில் நினைத்த முன்னேற்றம் போதாது என்பது மற்ற பிற செயல்களினால் தானே ஒழிய காலக்கெடு போதாது என்பதனால் அல்ல.
  ஓட்டுக்காக அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி விட்டு,காரணத்தை மாற்றி கூறினால் உண்மை எவ்வாறு ஆகும்.

  மேலும்,இட ஒதுக்கீடு என்பது உண்மையில் ஒதுகபட்டவர்களை முன்னேற்ற வழி வகுக்க வேண்டுமே ஒழிய அதற்காக முன்னேறிய சாதி என்று கூறபட்டாலும்,அதில் உண்மையில் முன்னேறாமல் இருக்கும் மனிதர்கள் மற்றும் திறமை இருக்கும் மனிதர்களின் வாய்ப்புகளை பறிப்பது சமுதாயம்,தரம் முன்னேற உதவாது.
  அரசாங்கம் இலவச கல்வி,இலவச பயிற்சி கொடுக்கலாமே ஒழிய,மதிப்பெண் தான் அளவுகோல் என்று இருக்க வேண்டிய இடத்தில் அது இல்லாமல் இருப்பது எவ்வாறு தரத்தை உயர்த்தும்.

  “கிரீமி லேயர்” என்ற முறையை இன்று நீக்க வேண்டும் என்று குரல் ஒலித்து கொண்டு இருக்கும் போது,இன்று இது அரசியலை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறது.

  முன்னேறிய வகுப்பு,பின்னேறிய வகுப்பு என்பதை விட,முன்னேறியவர்கள்,பின்னேறி இருப்பவர்கள் என்று தான் பார்க்க வேண்டும்,அது தான் இதனை விட சரியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *