BREAKING NEWS
Search

தயவு செய்து டாக்டர்கள்கிட்ட போகாதீங்க! – இது தலைவர் ரஜினியின் அட்வைஸ்

தயவு செய்து டாக்டர்கள்கிட்ட போகாதீங்க! – இது தலைவர் ரஜினியின் அட்வைஸ்

rajini-screen2

“ஆர்எம்வீ சார்.. நீங்கள் ஹாஸ்பிடலுக்கே போனதில்லை என்று சொன்னீங்கள்ல.. சத்தியமா இனி நீங்க ஹாஸ்பிடலுக்கே போகக் கூடாது. டாக்டரை வச்சிக்கிட்டு சொல்லக் கூடாதுதாதான்.. நான் போய் வந்த ஆளு.. நரகங்க.  அய்யய்யோ.. யாருமே அங்க போகக் கூடாதுங்க.

மிகவும் மகிழ்ச்சி. இனியும் ஹாஸ்பிடலுக்கு போகாமல் இருக்கும்படி உங்கள் உடல்நிலை இருக்கவேண்டும். நான் ஹாஸ்பிடலுக்கு போய்ட்டு வந்த ஆள் என்பதால் சொல்கிறேன். ஹாஸ்பிடல் போவது நரகம்.

ஒரு 30-40 வயசுல நல்ல பேமிலி வாழ்க்கை நடத்தணும்னா எக்ஸர்ஸைஸ்ல கவனம் செலுத்துங்க… புட்ல கவனமா இருங்க.. நல்லா பாத்துக்கங்க.. நான்தான் நல்லா பாத்துக்கல..

பட்.. நல்லா சாவணும்னு சொன்னா.. தயவு செஞ்சி 50-க்கு மேல நல்லா எக்ஸர்ஸைஸ் பண்ணுங்க. டெய்லி பண்ணுங்க.. நான் அனுபவிச்சி சொல்றேன்… இந்த டாக்டர்கள் கிட்ட மட்டும் போகாதீங்க. தயவு செய்து டாக்டர்கள் தப்பா எடுத்துக்க வேணாம்.

Rajini-rmv9
தயவு செய்து ஆர்எம்வீ அவர்கள் எப்போதுமே இப்படி இருக்கணும்.. அவர் வீட்ல போய் நான் பார்க்கணும்.. அவர் எப்பவும் நல்லா, சந்தோஷமா இருக்கணும். நான் விரும்பி சந்தோஷமா அவர் கால்ல விழுந்து ஆசி பெற்றேன். நிறைய இடத்துக்கு கூப்புட்றாங்க. ஆனா எல்லா இடத்துக்கும் போகமுடியாது. விருப்பம் உள்ள இருந்து வரணும். நான் இங்க ஆத்மார்த்தமா வந்திருக்கேன்.”

– சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆர்எம்வீ பிறந்த நாள் விழாவில்!

 

-என்வழி




2 thoughts on “தயவு செய்து டாக்டர்கள்கிட்ட போகாதீங்க! – இது தலைவர் ரஜினியின் அட்வைஸ்

  1. விஸ்வநாதன்

    உண்மையான யதார்த்தமான பேச்சு. தலைவர் ரஜினி அவர்கள் எப்பவுமே மனதில் உள்ளதை தான் பேசுவார். அதன் படியே செயல் படுவார். பிறரை போல எழுது வைத்து கொண்டு பேச சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு தெரியாது.
    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நோய் நொடி ஏதுமில்லாமல் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  2. Rajagopalan

    News coming about Kabali & Dhanu are not good.
    Yesterday it came in Jannal Magazine. Today in Kumudam reporter…
    Iam not saying these will be true.. But still dont want thalaivar to get into another trouble.
    For Dhanu itself , this much problem means, for Lyca if they Produce Endhiran 2 , i cant imagine. For dhanu atleast, it is only money problems, but Lyca is very much sensitive issue.
    I dont know whether you will publish this or delete..
    But dont mistale me for telling this….But still dont want thalaivar to get into another trouble.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *