BREAKING NEWS
Search

ரஜினியைத் திட்டியதற்காக வருந்திய கேபி! – ப்ளாஷ்பேக்

ரஜினியைத் திட்டியதற்காக வருந்திய கேபி! – ப்ளாஷ்பேக்

rajini-kb-kamal

பாலசந்தர்: ஏவி.எம். ஸ்டூடியோவில் ‘அவர்கள்’ படப்பிடிப்பின்போது நான் உன்னைத் திட்டியது உனக்கு நினைவிருக்கிறதா?

ரஜினி: “உனக்கு நடிப்பு வராது, உன்னால் நான் தலையைப் பிச்சுக்கணும். இன்ஸ்டிட்யூட்ல நீ என்ன படிச்சி கிழிச்சியோ! ‘மூன்று முடிச்சு’படத்துல வசனம் கம்மி. சிகரெட்டை தூக்கிப் போடறது, அதைப் போடறதுன்னு ஸ்டைலா போயிருச்சு. ஆனா இது வசனம் நிறைய இருக்கிற கேரக்டர். இவனுக்காக நான் கேரக்டரை மாத்த முடியாது. இவனை மாத்திட்டு ஜெய்கணேசை கொண்டு வாங்க’ன்னு சொல்லி ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு நீங்க போனது, இன்னைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது.

பாலசந்தர்: `உனக்கு நடிப்பே வராது’ என்று உரிமையுடன் அன்று உன்னைத் திட்டினாலும் பின்னர் நான் வருத்தப்பட்டேன். அந்தப் படத்தில் அற்புதமாக நடித்தாய்.  அகில இந்தியாவிலும் ஒரு `சூப்பர் ஸ்டார்’ என்கிறப் பெயரை இன்று நீ பெற்றுவிட்டாய். அதற்காகப் பெருமைப்படுபவன் என்னைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்?

ரஜினி: நிச்சயமாக.. அந்த உரிமை உங்களுக்கு உண்டு!

-ரஜினி – கேபி பேட்டியின் ஒரு பகுதி… (1985). இயக்குநர்கள் சங்க விழாவில் ரஜினியை கேபி பேட்டி கண்டபோது இதைத்தான் நினைவுபடுத்தினார்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *