BREAKING NEWS
Search

கத்தி – நமது பார்வையில்!

கத்தி – நமது பார்வையில்!

Vijay-in-Kaththi-4ந்த தீபாவளிக்கு இரண்டு படங்கள்தான் வெளியாகின. ஒன்று வருமா வராதா என கடைசி நிமிஷம் வரை இழுத்துக் கொண்டிருந்த, கடைசி நேரத்தில் நீக்கப்பட்ட லைகாவின் கத்தி. தயாரிப்பாளர் பெயரையே போடாமல் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே படம் இந்த கத்தியாகத்தான் இருக்கும். வேறு பேனரில் வராமல், மொட்டையாக இந்தப் படம் வருவதே, இதன் உண்மையான உரிமையாளர்கள் லைகாதான் என சொல்லிவிடுகின்றன.

கத்தி அங்கங்கே ஷார்ப்.. அநேக இடங்களில் மொக்கை.

இந்தப் படம் தாங்கி வந்திருக்கும் செய்தி பாராட்டத்தக்கது. விவசாயிகளின் தண்ணீரை கார்ப்பொரேட்டுகள் திருடும் அயோக்கியத்தனத்தை முன்வைக்கிறார்கள். எல்லோரும் நிஜமாகவே இன்று அந்த போராட்டத்தை நோக்கித்தான் நகர்த்தப்பட்டு வருகிறோம்.

இந்த நல்ல செய்தியைச் சொல்லியிருக்கும் விஜய், படத்தில் வருவதைப் போன்ற ஒரு பகாசுர குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத் தூதராக வந்து, ‘கோக் குடிங்க’ முகத்துக்கு நேரே பாட்டிலை நீட்டியவர்தான். இயக்குநர் முருகதாஸோ, பெரிய கார்ப்பொரேட் தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளை. இந்த முரண்பாட்டை மீறி, இருவரும் இந்தப் பிரச்சினையைத் திரையில் பதிவு செய்திருப்பதற்காக பாராட்டுகள் (ஆரம்பத்திலிருந்தே அடுத்த முதல்வர் கனவிலிருக்கும் ஒருவர் இந்த மாதிரி விளம்பரங்களில் தோன்றலாமா வேண்டாமா என்பதை யோசித்திருக்க வேண்டாமா?).

அதாவது பாராட்டு என்பது இந்த மட்டோடு சரி.

மற்றபடி கதிரேசனாக வரும் விஜய்யின் கோமாளித்தனங்கள், அவருக்கும் சமந்தாவுக்கான ஜவ்வு.. ஸாரி லவ்வு, சதீஷ் என்ற மொக்கை காமெடியன், சென்னைக்கு வரும் குடிநீரை நிறுத்த ஐடியா மணி விஜய் போடும் டுபாக்கூர் திட்டங்கள், அனிருத்தின் அட்டக் காப்பி இசை, காதறுக்கும் பாடல்கள்… இவற்றைத் தாங்கும் வல்லமை படைத்தவர்கள்… கோ அஹெட்!

சினிமாத்தனங்கள், லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், அவை வெளியில் சற்றும் தெரியாத மாதிரி அழுத்தமான ரமணா, துப்பாக்கி தந்த முருகதாஸிடம் இன்னும் எதிர்ப்பார்த்தோம். அவரோ, ‘ஐயாம் வெயிட்டிங்’கையே ரிப்பீட்டடித்திருக்கிறார்!

-என்வழி
2 thoughts on “கத்தி – நமது பார்வையில்!

 1. மிஸ்டர் பாவலன்

  இந்தப் படத்தின் கதை – கோபி – என்பவர் எழுதிய கதையின்
  அப்பட்ட மான காப்பி என சில இணைய தளங்களில் செய்தி
  உலாவி உருகிறது.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 2. Elango

  இயற்கை வழி விவசாய விஞ்ஜா ணி நம்மாழ்வார் அய்யாவின் போராட்டங்களை பற்றி படத்தில் கொண்டு வந்ததற்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *