BREAKING NEWS
Search

என்ன… ஏது… எப்படி? – ஜெயலலிதாவை கேள்வி கேட்கும் கருணாநிதி

ஜெயலலிதாவை ராவணன் சந்தித்தது எதற்காக? – கருணாநிதி

மிழகத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெறும் நிலையில் அதைக் கவனிக்க முதல்வரோ அல்லது அமைச்சர்களோ தலைநகரில் இருக்கிறார்களா என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பல்வேறு குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்ட சசிகலா உறவினர் ராவணன், முதல்வர் ஜெயலலிதாவை இப்போது கொடநாட்டுக்கே போய் சந்தித்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

அந்தக் காலத்தில் அரசர் அமைச்சரை அழைத்து “மந்திரி, மாநகர் தனில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?” என்று கேட்பாராம்.

தற்போது அரசருக்குப் பதிலாக, நமது முதல்வர், கொடைநாட்டிற்கே அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்து, நாட்டிலே மழை ஒழுங்காகப் பெய்கிறதா என்று விசாரித்துக் கொண் டிருக்கிறார்.

முதலமைச்சர் கொடநாட்டில் இத்தனை நாட்கள் தங்கவும், அவரைப் பார்ப்பதற்காக அதிகாரிகளும், அமைச்சர்களும் “யாத்திரை” செய்ய ஆகின்ற செலவு எவ்வளவு? அதெல்லாம் மக்கள் தரும் வரிப் பணம்தானே? இன்றைய அ.தி.மு.க. ஆட்சி யிலே நேற்று ஒரு நாளில் மட்டும் என்னென்ன நடைபெற்றதாக இன்று ஏடுகளில் வந்துள்ள செய்திகளை மட்டும் தொகுத்துள்ளேன்.

(அப்படி வந்துள்ள குற்றச்சம்பவங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.)

இவற்றைப் பற்றியெல்லாம் கவனிக்க முதல் அமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ தலைநகரிலே இருக்கிறார்களா?

ஆனால் அன்றாடம் முதல் அமைச்சர் பெயரால் ஒரு அறிவிப்பு மட்டும், துப்புரவுப் பணியாளர் நியமனம், வருவாய்க் கிராமங்கள் உயர்வு, கவுரவ விரிவுரையாளர் நியமனம் என்று மட்டும் கொடநாட்டிலே இருந்தவாறே “பேக்ஸ்” மூலமாகவே வந்து கொண்டிருக்கின்றன. அந்த அறிவிப்புகள் எல்லாம் முறையாக அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் விவாதிக்கப்பட்டு, அதன் பிறகு வெளி வர வேண்டியவை அல்லவா?

அவ்வாறு அந்த அறிவிப்புகள் வருகின்றனவா? செயல்படுத்தப் போகின்ற அறிவிப்புகள்தானே விவாதித்து முடிவெடுக்கப்பட்டு அதன் பிறகு வெளியிடப்படும். இந்த அறிவிப்புகள் எல்லாம், வெறும் அறிவிப்புக்காக மட்டும்தானே என்று கேட்கலாம். அரசு என்று ஒன்று அமைந்த பிறகு, அந்த அரசு செயல்படுகிறதோ இல்லையோ, செயல்படுவது போன்ற தோற்றமாவது இருக்க வேண்டாமா?

முதலமைச்சர் நினைத்தால் சசிகலா மீதும், அவருடைய கணவர் மீதும், அவர்களுக்கு வேண்டிய ராவணன், திவாகரன் போன்ற வர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார். அடுக்கடுக்கான வழக்குகளைப் பதிவு செய்வார்.

ராவணன் வந்தது எதற்காக?

தற்போது அந்த வழக்கிலே குற்றம் சாட்டப்பட்ட ராவணனை கொடைநாட்டிற்கே அழைத்துப் பேசுகிறார் என்பது உண்மையென்றால் இவைகள் எல்லாம் யாரை ஏமாற்றுகின்ற செயல்கள்?

அவர்கள் மீதெல்லாம் போடப்பட்ட வழக்குகள் என்னவாயிற்று? நடராஜன் மீது புகார் என்றார்கள். பிறகு கொடுக்கப்பட்ட புகார்கள் திரும்பப் பெறப்பட்டன என்கிறார்கள். அப்படி யென்றால் பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை? அந்தப் புகார் பொய்யானதா, மெய்யானதா என்று காவல் துறை முறையாக முதல் நிலை விசாரணை நடத்தாதது ஏன்? காவல் துறையினரின் அந்தத் தவறான நடவடிக்கைக்குக் காரணம் என்ன?

அந்த வழக்கிலே சம்பந்தப்பட்டவர் சிறையிலிருந்து வெளியே வந்ததும், அவரை “என்கவுண்டர்” செய்ய முயற்சி நடைபெற்றதாக இந்த ஆட்சியினர் மீது குற்றம் சாட்டினாரே; அதற்கு இந்த அரசின் பதில் என்ன? அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையே அவர்தான் தயாரித்துக் கொடுத்தேன் என்றார்.

முதல் அமைச்சருக்கு பேசவே தெரியாது, நான்தான் எழுதிக் கொடுத்தேன் என்றார். அவைகள் எல்லாம் உண்மைகளா? இந்த அரசு அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் இருப்பதிலிருந்து, அவர் சொன்னதெல்லாம் உண்மை என்றுதானே மக்கள் நம்புவார்கள்.

அதன்பிறகு அவர் வாயே திறக்கவில்லையே? என்ன காரணம்? வாயைத் திறக்கக் கூடாது என்று அடக்கி வைக்கப்பட்டு விட்டாரா? இந்த அரசினால் பயமுறுத்தப்பட்டு விட்டாரா?

குற்றம் சாட்டப்பட்டு, சிறையிலே அடைக்கப்பட்ட ராவணன் முதல் அமைச்சரைச் சந்திப்பதற்காக கொடநாடு வந்தார் என்று ஏடுகளில் வந்த செய்தி உண்மையா இல்லையா? அது உண்மை என்றால், அவர் என்ன பேசுவதற்காக வந்தார்? அந்த உண்மைகள் எல்லாம் நாட்டிற்குத் தெரிய வேண்டியது இல்லையா?

எதிர்க்கட்சியினரைப் பழி வாங்குவது ஒன்றுதானே முறையாக நடக்கிறது. வேறு என்ன நடக்கிறது நாட்டிலே? இதற்கு ஆட்சி என்றா பெயர்; “காட்சி”கள்தானே மாறி மாறி அரங்கேறுகின்றன என்று கலைஞர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

-என்வழி செய்திகள்
6 thoughts on “என்ன… ஏது… எப்படி? – ஜெயலலிதாவை கேள்வி கேட்கும் கருணாநிதி

 1. buruhani

  இந்த வயசிலும் இத்தனை சுறு சுறுப்பு ,இதையே தாங்கள் ஆச்சியில் இருக்கும் போது மகள் செய்யும் குற்றங்களையும் பற்றியும் ஒரு தொகுப்பு எழுதி இருந்தால் மக்கள் இதை பற்றியும் யோசிக்க செய்வார்கள் காலம் கடந்த செயலுக்கு மதிப்பு கிடையாது அய்யா .தாங்களின் கூடவே இருந்து கொண்டு சுயநலவாதியாக இருக்கும் வல்லூருகலை முதலில் கலை எடுக்க யோசியுங்கள் அதுதான் நமது அரசியலுக்கு நல்லது

 2. srikanth

  அன்று நீங்கள் vidhaiththadhuthan இன்று அறுவடை செய்கிறீர்கள்

 3. Kumar

  வினோ இது என்ன என்வழியா இல்ல முரசொலியா……கருணாவுக்கு இப்படி சப்போர்ட் பண்ணுறதுக்கு பதில் வைகோ மாதிரி நல்ல அரசியல்வாதியை promote பண்ணுங்க….

  கருணாக்கு சொம்பு தூக்க சன், கலைஞர், முரசொலி அது இதுனு நெறைய மீடியா இருக்கு…..வைகோ எல்லாம் எந்த மீடியா ஆதரவும் இல்லாதவர்…..

  கருணாக்கு சப்போர்ட் பண்ணும் வகையில் தினமும் ஒரு article போடுறீங்க….instead please promote politicians like Vaiko, Tamilaruvi Maniyan who really strives for Tamilnadu welfare…..

  Karuna is no different from Jaya…..in the act of opposing Jaya, your articles are too biased towards Karuna, which gives bitter taste…..

  if there is any article in thatstamil against Jaya that are being published in envazhi, at the same time if there is any such article against karuna or DMK they are not published in envazhi…..

  I’m neither asking you to support Jaya nor oppose Karuna….these two crooked politicians are a shame to Tamilnadu….but to promote good politicians like Vaiko….

  Hope there are many readers who agrees with me (ofcourse except few of them who are pro-DMK….)

 4. enkaruthu

  ஹலோ குமார் ரொம்ப பொங்காதீங்க.இது ஒரு கலைஞர் என்ற ஒரு அரசியல்வாதி கொடுத்த பேட்டியைதான் இங்கே ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் வினோ அவர்கள் போட்டிருக்கிறார்.ஜெயா கொடுத்த பேட்டியையும் வினோ அவர்கள் அப்படியே இங்கே பல முறை போட்டிருப்பதை நன்றாக இந்த தளத்தில் வந்த அனைத்து கட்டுரைகளையும் படித்து விட்டு தெளிவு பெறவும்.

  நீங்கள் சொல்வதை பார்த்தால் உங்கள் நமச்சளுக்கு ஏற்றது போலவே கட்டுரை வரவேண்டும் என்று உங்கள் தலைவியை போலவே ஆணை போடுவீர்கள் போல.நல்லா இருக்குப்பா உங்கள் நடுநிலை.

 5. குமரன்

  இன்றைக்கு முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு வேண்டாதவர்களைப் பழி வாங்க போலீசை வைத்து வழக்குப்போடுவதும் அவர்கள் தனக்கு வேண்டியதை செய்ததும் அல்லது பணிந்ததும் அவர்களைப் போலீஸ் கண்டுகொள்ளாமல் போவதும் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.

  இது தவறான போக்கு. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனுஷனையும் கடிக்கும் நிலையில் நாளை ஜெயாவும் போலீசும் கூட இருப்பார். அது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

  உலகின் சர்வாதிகாரிகள் முதலில் துவங்கியது இப்படித்தான்.

  இந்த சூழலில் கருணாநிதி (தனிப்பட்ட தனது வெறுப்பின் காரணமாக ஜெயாவை எதிர்ப்பதற்காக என்றாலும் கூட ) எதிர்க் கட்சி என்ற முறையிலும், தமிழ்நாட்டில் ஜெயாவைத் தவிர மக்கள் ஆதரவைப் பரவலாகப் பெற்றவர் என்ற முறையிலும் ஆற்றிய மகத்தான ஜனநாயகக் கடமை இது.

  இவர் எழுப்பிய கேள்விகள் நியாயமானவை. மனித உரிமைகளுக்கு அடிப்படையான கேள்விகள். இந்தக் கேள்விகளை இரண்டு பொதுவுடமைக் கட்சிகளும் பலக்கவும் உரக்கவும் கேட்காதது தமிழ்நாட்டின் துயரம்.

  எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்தும் இந்தக் கேள்விகளை சட்டமன்றத்தில் எழுப்பவேண்டும்.

  ஜெயா சர்வாதிகார, பாசிசப் பாதையில் பயணிக்காமல் இருக்க இது தேவை.

 6. குமரன்

  தேவராஜன், என்கருத்து, தினகர் ஆகியோர் எனது இந்த மேல்கண்ட மறுமொழியை படித்துக் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *