BREAKING NEWS
Search

வாரத்தில் ஒரு நாள் இந்தியில் கையெழுத்து! – கருணாநிதி கண்டனம்

வாரத்தில் ஒரு நாள் இந்தியில் கையெழுத்து! – கருணாநிதி கண்டனம்


சென்னை: வாரம் ஒரு நாள் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேருவின் உறுதிமொழியை நீர்மேல் குமிழியாவதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

29-6-2012 அன்று நடைபெற்ற அலுவலக மொழி நடைமுறைப்படுத்துதல் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, ஆயுள் காப்பீட்டுக் கழக, தென் மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார் என்றும், அதில் அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக திங்கள் கிழமைகளில் இந்தியில் கையெழுத்திட வேண்டும், கடிதங்கள் மற்றும் தகவல்களில் இந்தியில் கையெழுத்திட்டு, இந்தி மொழி தொடர்பு அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சுற்றறிக்கைகளினால்தான் முன்பு இந்தி எதிர்ப்புப் போராட்டமே தொடங்கியது. பண்டித நேரு இந்தி பேசாத மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டு மீண்டும் தேவையில்லாமல் இந்தியைத் திணிக்க எத்தனிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மத்திய அரசு இதுபற்றி கவனித்து தக்க நடவடிக்கை எடுக்குமா என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி! நேருவின் வாக்குறுதியே நீர்மேல் குமிழியாவதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது!

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

-என்வழி செய்திகள்
8 thoughts on “வாரத்தில் ஒரு நாள் இந்தியில் கையெழுத்து! – கருணாநிதி கண்டனம்

 1. குமரன்

  திங்கள் கிழமை எந்தக் கடிதத்திலும் கையெழுத்தே இடவில்லை என்றால் என்ன செய்ய முடியும்? போராட்டம் இந்த மாதிரிதான் ஆரம்பிக்க வேண்டும்.

  உருப்படியான வேலையை விட்டு இந்த வேலை செய்யும் அந்த அதிகாரியை உத்தரப் பிரதேசத்துக்கு மாற்றுதலே உத்தமம்.

 2. Manoharan

  குமரன் உங்கள் யோசனை நிச்சயம் எடுபடும்.

 3. குமரன்

  அடுத்து வரும் திங்களுக்குள் இந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப் பட்டுவிட்டது!

  http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3663329.ece
  Employees were instructed to sign all letters in Hindi at least on Mondays

  A circular of the Life Insurance Corporation of India (LIC) asking its employees to sign all letters and communication in Hindi, at least on Mondays, was withdrawn following a protest from trade unions.

  “The instruction ran as a scroll on the intranet of LIC on July 9. We immediately expressed our protest and it was withdrawn,” K. Swaminathan, general secretary of the All India Insurance Employees Association (AIIEA), South Zone, told The Hindu.

  According to Mr. Swaminathan, the advisory said, “Under the instruction of the Zonal Manager, employees are requested to sign the letters in Hindi at least on Mondays.”

  “When we took up the issue with the management, we were told it was only a request. Then we asked if it was just a request why should they say that it was under the Zonal Manager’s instruction. The circular was withdrawn and the management has not pursued it after that,” Mr Swaminathan said. The union has conveyed this to its employees.

  He said learning Hindi was not an issue and many employees did so out of interest. “But you cannot compel anyone on the issue of language. We are going through a time when there is much competition in the insurance sector. Instead of concentrating on that, the management raked up an unnecessary controversy,” he said.

  NEHRU’S PROMISE

  The issue was flagged by DMK president M. Karunanidhi on Friday. He objected to the circular, accusing the Centre of imposing Hindi and throwing to the winds the promise of Jawaharlal Nehru that the language would not be imposed on non-Hindi communities.

  Mr. Karunanidhi claimed the decision to issue a circular was taken at a meeting of the Official Language Implementation Committee on June 29 and that the Zonal Manager (Human Resources) had sought the employees’ cooperation for its implementation.

  “Similar actions in the past had led to the anti-Hindi agitation in Tamil Nadu. The question before us is whether Nehru’s promise is just a bubble,” he asked.

 4. enkaruthu

  //திங்கள் கிழமை எந்தக் கடிதத்திலும் கையெழுத்தே இடவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?//

  சில நடைமுறை சிக்கல்கள் இதில் இருந்தாலும் நல்ல யோசனைதான்.

 5. Mariappan S

  ஹிந்தியில கையெழுத்து போட்டா சீக்கிரம் பதவி உயர்வு என்று சொன்னாலே போதும். மக்கள் தானா ஹிந்தி படிப்பாங்க .

 6. மிஸ்டர் பாவலன்

  //ஹிந்தியில கையெழுத்து போட்டா சீக்கிரம் பதவி உயர்வு என்று சொன்னாலே போதும். மக்கள் தானா ஹிந்தி படிப்பாங்க .// (மனோகரன்)

  ஸ்டாலின் நடத்தும் CBSE பள்ளி English Medium.அங்கு ஹிந்தி சொல்லிக்
  கொடுக்கப் படுகிறது. கலைஞர் குடும்பத்தில் பலரும் ஹிந்தி, ஆங்கிலம்
  பேசுவதில் திறமையானவர்கள் – முரசொலி மாறன், தயாநிதி மாறன்,
  கலாநிதி மாறன், கனிமொழி முதலானோர். பேரன்கள் “O.K., O.K.” வகை.

  வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *