BREAKING NEWS
Search

வீர மகன் மன்னித்தால் அது வரலாறு… – ‘கர்ம வீரன்’ கோச்சடையான் பாட்டு!

வீர மகன் மன்னித்தால் அது வரலாறு… – ‘கர்ம வீரன்’ கோச்சடையான் பாட்டு!

kochadaiyaan1

ஆர் ரஹ்மான் இசையில் கர்ம வீரன் பாடல் என்ற தலைப்பில் கோச்சடையான் படத்தில் இடம்பெற்ற வைரமுத்துவின் அடுத்த பாடல் இது.

ஆகாய மேகங்கள் பொழியும்போது
ஆதாயம் கேளாது
தாய்நாடு காக்கின்ற உள்ளம் என்றும்
தனக்காக வாழாது
ஏ வீரனே கர்ம வீரனே கடமை வீரனே
தோல்விகளாலே துவண்டு விடாதே
வெற்றிகளாலே வெறி கொள்ளாதே

கல்லடி கல்லடி படுமென்பதாலே
மரம் காய்க்காமல் போவதில்லை
சொல்லடி சொல்லடி படுமென்பதாலே
வெற்றி காணாமல் போவதில்லை

மாலைகளைக் கண்டு மயங்காதே
மலைகளைக் கண்டு கலங்காதே

காற்றே கற்றெ நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதேயில்லை ‍‍‍‍‍ உன்
வாழ்விலே சத்தியம் தோற்பதேயில்லை

நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா ‍ நீ
ஓடிக்கொண்டே இரு
நிம்மதி வாழ்வில் வேண்டுமா
பாடிக்கொண்டே இரு

கோழை மகன் மன்னித்தால் அது
பெரிதல்ல பெரிதல்ல‌
வீர மகன் மன்னித்தால் அது
வரலாறு வரலாறு

பொன்னும் மண்ணும்
வென்று முடிப்பவன்
கடமை வீரனே அந்தப்
பொன்னை ஒருநாள்
மண்ணாய்ப் பார்ப்பவன் கர்ம வீரனே

என்வழி




7 thoughts on “வீர மகன் மன்னித்தால் அது வரலாறு… – ‘கர்ம வீரன்’ கோச்சடையான் பாட்டு!

  1. chithamparam

    கோச்சடையான பாடல்கள் விரைவில் என்று இன்று வெளியான போஸ்டர் HD Quality இருக்கா.இருந்தால் எனது இமெயிலுக்கு அனுப்பவும்

  2. chithamparam

    கோச்சடையான பாடல்கள் விரைவில் என்று இன்று வெளியான போஸ்டர் HD Quality இருக்கா.இருந்தால் எனது இமெயிலுக்கு அனுப்பவும் ஆங்கில போஸ்டர் HD என்னிடம் இருக்கு தமிழ் போஸ்டர் HD வேணும்

  3. srikanth1974

    ஈழத் தமிழர்களுக்கும் -என்

    இந்தியத் தமிழர்களுக்கும்

    உலகத் தமிழர்களுக்கும்

    உண்மைத் தமிழர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கும் இப்பாடல் அனைத்துத் தமிழர்களின் தேசிய கீதமாக ஒலிக்கட்டும்.

  4. Elango

    உலக நாயகன்கலின் 1000 கோடி வசூல் கனவுகளுக்கு உயிர் ஊட்டும் வல்லமை நம் தலைவருக்கு மட்டுமே சாத்தியம்…

  5. மிஸ்டர் பாவலன்

    விஸ்வரூபம்-2 படத்திற்கு உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பும்,
    பரபரப்பும் இருக்கிறது. படத்தில் வரும் சண்டைக்காட்சிகளும்,
    காதல் காட்சிகளும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும் என
    அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது. கோச்சடையானுக்கு
    பெரும் போட்டி தரும் விஸ்வரூபம்-2 படத்தை வரவேற்க
    ரசிகர்கள் தயாராக உள்ளனர். நன்றி!

    -=== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *