BREAKING NEWS
Search

பத்து லட்சம் கோச்சடையான் எக்ஸ்க்ளூசிவ் செல்போன் மற்றும் டேப்கள்! – கார்பன் நிறுவனம் வெளியிடுகிறது

பத்து லட்சம் கோச்சடையான் எக்ஸ்க்ளூசிவ் செல்போன்கள்! – கார்பன் நிறுவனம் வெளியிடுகிறது

BTsDieuCYAAVaLB

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் வெளியாவதையொட்டி 1 மில்லியன் எக்ஸ்க்ளூசிவ் செல்போன்கள் மற்றும் டேப்களை  கார்பன் மொபைல் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த செல்போன்களை பிப்ரவரி மத்தியில் நடைபெறவுள்ள கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு விற்பனை செய்யவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஈராஸ், மீடியா ஒன், கார்பன் நிறுவனங்களின் ஒப்பந்தப்படி 10 லட்சம் கார்பன் – கோச்சடையான் எக்ஸ்க்ளூசிவ் மொபைல்கள், டேப்கள் படத்தின் ஸ்க்ரீன் சேவர்கள், சிறப்பு ரிங்டோன்கள் மற்றும் ட்ரைலர்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளன.

Karbonn_Mobiles_Rajinikanth_Phones_Tablets

இவற்றை கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் அறிமுகம் செய்யவிருக்கின்றனர். ஆடியோ சிடிக்களுடன் இந்த மொபைல்கள் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடுகள் நடப்பதாக ஈராஸ் நிறுவனம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

-என்வழி




3 thoughts on “பத்து லட்சம் கோச்சடையான் எக்ஸ்க்ளூசிவ் செல்போன் மற்றும் டேப்கள்! – கார்பன் நிறுவனம் வெளியிடுகிறது

  1. Rajagopalan

    This time atleast Kochadayan will see the light of the day? Confirmed this time it will release?Keeping fingers crossed….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *