BREAKING NEWS
Search

கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்!

பெருந்தன்மையின் மறுபெயர் ரஜினி!

கால் நூற்றாண்டு காலமாக தமிழக அரசியல் களத்துக்கே நன்கு தெரியும், ரஜினிகாந்த் என்பவர் அரசியலுக்கு வருவார், அவரைத்தான் மக்களும் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது. 2002-ம் ஆண்டு காவிரி நதி நீருக்காக ரஜினிகாந்த் தன்னந்தனியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, “ரஜினி அரசியலுக்குப் போய்விட்டார்,” என்று பகிரங்கமாகச் சொன்னவர் கமல் ஹாஸன். உங்களுக்கு அரசியல் ஆர்வமில்லையா என்று கேட்டபோது, “என் அரசியல் ஆட்காட்டி விரலில் மை வைக்கும் அளவுக்குத்தான். அதற்கு மேல் எனக்கு அரசியல் தெரியாது,” என்றார். இந்த பதிலை அவர் அதற்குப் பின்னும் பல ஆண்டுகள் சொல்லிக் கொண்டே இருந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுச் செய்தி வெளியாகி, “சார்ந்தோருக்கு இரங்கல்,” என துக்கச் செய்தியில் அரசியல் கலந்து சொல்லும் வரை கமல் ஹாஸன் அரசியல் பேசவில்லை. அதன் பிறகுதான் அவருக்கு அபார துணிச்சல் வந்து, எடப்பாடி, ஓபிஎஸ் கோஷ்டிகளை எதிர்த்து ட்விட்டரில் அரசியல் பேசினார்.

ஆனால் ரஜினி அரசியல் அப்படியல்ல. ஆரம்பத்திலிருந்தே அவர் ‘ஆண்டவன் சொன்னா அருணாச்சலம் (ரஜினி) செய்வான்’ என்றுதான் கூறி வந்தார். அரசியல் வேண்டாம் என்றோ, அரசியலுக்கு வரமாட்டேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசியவர் ரஜினி. இன்னும் ஒருபடி மேலே போய், முதல்வர் மேடையிலேயே, எதிர்க்கட்சித் தலைவரைப் பாராட்டிய தைரியசாலி ரஜினி மட்டுமே.

ரஜினியைக் கவனித்து வந்தவர்கள் ஒன்றைத் தெளிவாக அறியலாம்… 2011-ம் ஆண்டிலிருந்து.. அதாவது ஜெயலலிதா முதல்வரான பின், ரஜினியின் உடல் நிலை குன்றி, அவர் மீண்டும் மறுபிறவி எடுத்து வந்ததிலிருந்து ரஜினியின் பேச்சு முன்னை விட புதிய உத்வேகத்தில் இருந்தது.

ரஜினி மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனை செல்கிறார். செல்லும் முன் அவர் விடுத்த ஆடியோ செய்தியில், “பணம் கொடுக்கிறீங்க, நடிக்கிறேன். இதுக்கே இவ்வளவு அன்பு காட்றீங்களே… ஆனா நிச்சயமா ஒண்ணு சொல்லிக்கிறேன்… இந்த தமிழ் நாடும் தமிழ் மக்களும் பெருமைப்படும் அளவுக்கு நான் ஏதாவது செய்வேன்,” என்றார். அந்த வார்த்தைகளை அவர் அதன் பிறகும் கூட பலமுறை பல மேடைகளில் சொல்லிவிட்டார்.

தான் சொன்னதைச் செயலில் காட்டும் முடிவுக்கு அவர் வந்தது கடந்த 2016-ல். அப்போதெல்லாம் கமல் ஹாஸன் பிஸியாக சினிமா பேசிக் கொண்டிருந்தார். உத்தம வில்லனாக மாறி இரு பெரும் தயாரிப்பாளர்களை மூழ்கடித்துக் கொண்டிருந்தார். எப்போது ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம் ஆனதோ, அன்று தொலைந்தது கமல் ஹாஸனின் தூக்கம்.

இதில் ஒளிவு மறைவே கிடையாது… மொத்த அரசியல் உலகுக்கும் தெரியும். எங்கே ரஜினி முந்திவிடப் போகிறாரோ… சினிமாவைப் போல அரசியலிலும் அவருக்கு அடுத்த இடம்தானா நமக்கு? என்ற ஆதங்கமே அவரது பொறாமையாக வளர்ந்தது. அரசியல் என்ற பெயரில் வாய்க்கு வந்தபடி பேசினார், ட்வீட்டினார், ரஜினியை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வம்புக்கிழுத்தார், காவிச்சாயம் பூச முனைந்தார்… கட்சி ஆரம்பிப்பதாகச் சொன்னார்… அமெரிக்கா போயும் தன் பேச்சு எடுபட ரஜினியைத்தான் இழுத்தார்… இன்று, ரஜினி வீட்டுக்கே போய் அரசியல் பயணத்துக்கு ஆசி கோருகிறார்.

நிச்சயம் இது விஷமத்தனமான அரசியல்தான். ரஜினி களமிறங்கினால், ஆட்சி அவரிடம்தான் என அனைவருக்குமே தெரியும். அந்த சூழலில் கமல் அவசர கோலத்தில் அரசியல் கட்சி ஆரம்பிப்பது ஏன்? ஒன்று பொறாமை… அல்லது வேறு யாரோ ஒருவரின் தூண்டுதல்.. அசைன்மென்ட். இந்த இரண்டைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. காரணம் அரசியலுக்கு முக்கியத் தேவையான தொண்டர் பலம், தனக்கு எந்த அளவுக்கு உள்ளது என்பது கமலுக்கு நன்கு தெரியும். அதைவிட, அந்த தொண்டர் பலத்துக்கு ஊட்டமளிக்கத் தேவையான பணம் குறித்த அறிவு அவருக்கு அபாரம். ஏதோ சினிமாவில் சம்பாதித்து சினிமாவிலேயே செலவழிக்கும் கலாரசிகன் என அவரை சில அப்பாவிகள் நினைக்கிறார்கள். உண்மையில் ரஜினியை விட பலமடங்கு சொத்து சேர்த்திருப்பவர் கமல் ஹாஸன் என்கிறது திரையுலகம். ‘அவருக்கு சொத்துக்களைக் கட்டிக் காக்கத்தான் தெரியுமே தவிர, அரசியல் எனும் கடலில் கரைக்கத் தெரியாது’ என்பார் கமலுடன் நெருக்கமாக இருந்த ஒரு எழுத்தாளர்.

ரஜினியின் வெற்றியைத் தாமதப்படுத்த வேண்டும் அல்லது கலைத்துவிட வேண்டும் என்பதுதான் கமலுக்கு தரப்பட்டுள்ள அசைன்மென்ட். அந்த அசைன்மென்டை நிறைவேற்ற என்னென்னமோ சொல்லிப் பார்த்தார் கமல். வாங்க, சேர்ந்து பயணிக்கலாம் என பகிரங்க அழைப்பு விடுத்தும் தோல்வி. வேறு வழியின்றி ரஜினிக்கு எதிரான அரசியல் செய்ய அவர் ரஜினியிடமே ஆசி கோருகிறார். ரஜினிக்கு எல்லாம் தெரியும்… தெரிந்தும் தன் இயல்பை மாற்றிக் கொள்ளாமல், மாறாப் புன்னகை- அன்புடன் வாழ்த்தி, காரில் ஏற்றி கதவை மூடி வழியனுப்பி வைக்கிறார் ரஜினி.

தமிழகம் இதுவரை பார்த்திராத அரசியல் தலைவராகப் பரிமளிக்கிறார் ரஜினிகாந்த். தன்னை வீழ்த்த தன்னிடமே ஆசி கோரும் அரசியல்வாதிக்கு அன்பையும் வாழ்த்தையும் நற்சான்றிதழையும் மனமார வழங்கும் ஒரு தலைவரை உலகம் கண்டிருக்கிறதா? இந்த விஷம அரசியல் அவர் நிழலைக் கூட வீழ்த்த முடியாது என்பதை கமல் ஹாஸன்கள் மட்டுமல்ல, அவரை முகமூடியாக வைத்து விளையாடிக் கொண்டிருப்பவர்களும் விரைவில் புரிந்து கொள்வார்கள்!

-வினோ
6 thoughts on “கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்!

 1. sivakumar

  Absolute truth. The article reflected my heart. It is very much evident that kamalhasan got the assignment to make hurdles to rajini’s progress. But God is noticing everything. He will do justice.

 2. Anand

  கமல் speed பாத்தா tension ஆவுது சார் ஏதாவது பன்னுங்க. TV ல பேச rajini sir க்கு நல்ல ஆளே இல்லையா …

  .பேசரவங்க(பிரவின் காந்தி) இருக்கிற நல்ல பேரையும் கெடுத்துடுவாங்க போல
  நல்ல விவரம் தெரிஞ்ச ஆளா போடுங்க சார்

 3. Chenthil

  yes… whatever said is correct Vino. But media and all parties are just against thalaivar.. they all tell what Rajini doesnt tell…it has been a trend like this to put wrong messages in media as told by Rajini.. by these small parties/media from 1995, they will never change. Kamal trying to use that space …. even today cheeman told about Rajini before Kamal, being a friend he didnt even tell anything about that…

 4. சுதந்திரன்

  ரஜினி ஏன் கலைஞரை சந்தித்து ஆசி பெற்றார்? அது பண்பு.
  கமல் ஏன் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார்? அதுவும் பண்பு தானே? இல்ல…இல்ல….இல்லவே இல்ல….இங்க பண்பு எல்லாம் பேச கூடாது. விஷமம்னு தான் சொல்லணும். ஓகே…. அப்படியே சொல்லிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *