BREAKING NEWS
Search

சர்வதேச கேன்ஸ் விழா நேரடிப் போட்டியில் கமலின் விஸ்வரூபம்!

கேன்ஸ் விழாவின் நேரடிப் போட்டியில் பங்கேற்கிறது கமலின் விஸ்வரூபம்!


பொதுவாக கமல் படங்கள் குறித்து எக்கச்சக்க செய்திகள் வரும். ஆனால் விஸ்வரூபம் அதில் விதிவிலக்கு.

கூடுமானவரை இந்தப் படம் குறித்த தகவல்களில் ரகசியம் காத்து வருகிறார் கலைஞானி.

இப்போது கசிந்துள்ள இந்தப் படத்தை நேரடியாக கேன்ஸ் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவுக்கு அனுப்புகிறார் என்பது.

மும்பையைச் சேர்ந்த பிரபல பத்திரிகைக்கு கமல் அளித்துள்ள பேட்டியில், அடுத்த ஒருமாதத்துக்குள்  படத்தை முடித்து கேன்ஸ் விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்தப் படத்தை கேன்ஸுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது உண்மைதான். ஆனால் இப்போதே அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விரும்பவில்லை. குறித்த காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பதுதான் என் முன் உள்ள சவால்.

கேன்ஸ் பட விழா ஏற்பாட்டாளர் கிறிஸ்டியன் ஜீனுடன் தொடர்பில் இருக்கிறேன். மார்ச் 15-க்குள் படம் தொடர்பான பணிகள் முடிந்துவிடும் என நம்புகிறேன்.

சர்வதேசப் படங்களுக்கான நேரடிப் போட்டிப் பிரிவிலேயே விஸ்வரூபத்தைச் சேர்க்கும் முயற்சியில் உள்ளேன். அதற்கேற்ப கேன்ஸ் விழாக் குழுவினர் ஓரிரு நாட்கள் தேதிகளை மாற்றிக் கொள்வதாகக் கூறியுள்ளனர்,” என்றார்.

இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே, பட வெளியீட்டை சில தினங்கள் தள்ளி வைத்திருக்கிறார் கமல்.

இது மட்டும் நடந்துவிட்டால், கேன்ஸில் சர்வதேச போட்டிப் பிரிவில் நேரடியாகப் பங்கேற்கும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை விஸ்வரூபத்துக்குக் கிடைக்கும். கமலுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமையாக அது அமைந்துவிடும்!

-என்வழி செய்திகள்




8 thoughts on “சர்வதேச கேன்ஸ் விழா நேரடிப் போட்டியில் கமலின் விஸ்வரூபம்!

  1. venkatesan, nigeria

    எந்திரன் பற்றி எந்த கருத்தும் சொல்லாத பெருந்தன்மையாளர். இவரை பற்றி பெரும்பான்மையான ரஜினி ரசிகர்கள் பெருமை அடைய மாட்டார்கள். இவர் நட்பு என்னும் தோலை அணிந்து கொண்டு இருப்பவர். இவரது தோல்வியே எனக்கு சந்தோசம். ரஜினி இவரை பற்றி காண்பிக்கும் பெருந்தன்மையில் பத்தில் ஒரு மடங்கு கூட இவர் கான்பிபதில்லை.

  2. chozan

    வெங்கடேசன் அவர்களே, எந்திரன் பற்றி கமல் எதுவும் சொல்லவில்லை என்று உமர்க்கு எப்படி தெரியும் திரு வினோ சொல்லட்டும் எது உண்மை என்று இவர்களுக்கு உள்ள உறவு நமது கற்பனைக்கும் மேலானது.

  3. chozan

    திரு வினோவுக்கு இந்த பதிவுக்காக எனது நன்றி. இந்த மாதிரியான நடுநிலையான பதிவுதான் என்போன்றோர்களை தினமும் என்வழியை பார்க்க துண்டுகிறது. மேலும் ரஜினியும் கமலும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துவைத்து உள்ளனர். நமக்குத்தான் சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை

  4. மிஸ்டர் பாவலன்

    இந்த போட்டோவில் பார்க்க ஜேம்ஸ் பான்ட் மாதிரி
    கமல் சூப்பராக இருக்கிறார். ஆனால் ‘கலைச் செல்வி’
    த்ரிஷா நடித்த மன்மதன் அம்பு படத்தில் மீசையும்,
    தாடியுமாய் மேஜர் என மொக்க பிளேடு போட்டு அவருக்கு
    தோல்விப் படம் கொடுத்ததில் இருந்து தமிழ்ப்
    படங்களில் த்ரிஷாவைப் பார்க்க முடியவில்லை.
    விஸ்வரூபம் படமாவது வெற்றியடைய வாழ்த்துக்கள்!

    -=== மிஸ்டர் பாவலன் ===-

  5. Manoharan

    இவர் என்ன ரூபம் எடுத்தாலும் இனி எடுபடாது. வெங்கடேஷன் சொன்னதுதான் சரி. தசாவதாரம் படத்தில் இவரும் ஆஸ்கர் ரவிசந்திரனும் சேர்ந்து வசூலில் சிவாஜியை மிஞ்சிவிட்டது என்று தம்பட்டம் அடித்தார்கள். எடுபடவில்லை. சும்மா பிலிம் காட்டவேண்டாம் கமல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *